உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 9/8 பக். 20-24
  • மனநோய்—ஒரு பரிகாரம் இருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனநோய்—ஒரு பரிகாரம் இருக்கிறதா?
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இரசாயணப் பொருள் கட்டுப்பாடு
  • பக்கபாதிப்புகளால் வரும் பிரச்னைகள்
  • மாற்று சிகிச்சை முறைகள்
  • மனநோயாளிகளுக்கு ஆறுதல்
  • மனநோயின் மர்மத்தை வெளியாக்குதல்
    விழித்தெழு!—1987
  • மனநோய்—அந்த மர்ம வியாதி
    விழித்தெழு!—1987
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • ஈடிணையற்ற ஆனந்தம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 9/8 பக். 20-24

மனநோய்—ஒரு பரிகாரம் இருக்கிறதா?

“அவர்கள் என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்,” என்று நினைவுகூருகிறாள் ஐரீன். “மனநோய் மருத்துவரிடம் காரியங்களை மனம்விட்டுப் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் அது அதிகம் பலனளிக்கவில்லை. பின்பு அவர்கள் எனக்கு அதிர்ச்சி மருத்துவம் அளித்தார்கள். நான் மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், அதுவும் பயனற்றதாகிவிட்டது.

“பிறகு என் கணவர் தன்னுடன் ஒரு காரில் ஏறும்படி எனக்குச் சொன்னார். நான் வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் மிகப் பழைய செங்கல் கட்டடங்கள் உள்ள இந்தப் பகுதிக்கு முன்பாக நாங்கள் வண்டியை நிறுத்தினோம். ‘இது என்ன?’ என்று நான் என் கணவரிடம் கேட்டேன். ‘நீ உள்ளே சென்று ஒருவரிடம் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார். அது ஒரு மனநோய் மருத்துவமனை என்பதை பின்பு நான் உணர்ந்தேன் . . . ”

ஐரீனின் நோய் 1955-ம் வருடம் வெளிப்பட்டது—ஒரு மனநல புரட்சியின் சமயத்தில். இரண சிகிச்சை மருத்துவம் சம்பந்தமான வேதனைகளைக் குறைக்க புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. மனநோயாளிகள் இந்த மருந்துகளால் சிகிச்சையளிக்கப்பட்டபோது, “முன்பு தனி அறைகளில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டிய நோயாளிகள் இப்பொழுது கவனிப்பு தேவையில்லாததாக விடப்படும் திறனைக் கொண்டிருக்கிறார்கள். அந்த மருந்துகள் சில வகையான மனநோய்களை முற்றிலும் நீக்கிவிட்டன,” என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். (The Brain, டாக்டர் M. ரெஸ்டக் எழுதியது) இந்த மருந்துகளின் புரட்சிகரமான விளைவுகள் சீஸோஃபிரேனியாவால் மறுபடியும் விளக்கப்படக்கூடும்.

ஐரீனின் மருத்துவர்கள் மனநோய்க்கு எதிரான ஒரு புதிய மருந்தை முயற்சி செய்தார்கள். பேச்சு மருத்துவமுறை மற்றும் மின்சார அதிர்ச்சி மருத்துவமுறை தோல்வியடைந்த சமயங்களில் மருந்து உட்கொள்ளும் சிகிச்சை (medication) வெற்றியடைந்தது. ஐரீன் மற்றும் அவளைப்போல ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளைவிட்டு வீட்டிற்குச் செல்ல முடிந்தது.

இரசாயணப் பொருள் கட்டுப்பாடு

மருந்துகள் எவ்விதமாக பலனளித்தன என்பதை மருத்துவர்கள் அறியவில்லை. ஆனால், பொதுவாக, டேபாமைன் (dhpamine) என்றழைக்கப்படும் இரசாயணப்பொருளை எடுத்துக்கொள்ளும் மூளையின் கிரகிப்பான்களை அவை தடுத்தன என்று தோன்றியது. இப்படியாக, டோபாமைனின் செயல்நடவடிக்கை தடுக்கப்பட்டபோது சில நோயாளிகளில் முன்னேற்றம் காணப்பட்டது. மூளையிலுள்ள டோபாமைனின் செயல் அதிகரிக்கப்படும் விதத்தில் மருந்துகள் கொடுக்கப்பட்டபோது நோயாளிகள் அநேக தடவைகள் மோசமடைந்தார்கள். இவ்வாறு மனநோய் வேதியியலின் மீது வெளிச்சம் விழுந்தது. (பெட்டியைப் பார்க்கவும்)

இன்னும் சீஸோஃபிரேனியா பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் மனநோய்க்கு எதிரான மருந்து உட்கொள்ளும் சிகிச்சைகள் பயனுள்ளவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. துரதிஷ்டவசமாக, மூன்றில் ஒரு பங்கு சீஸோஃபிரேனியா நோயாளிகள் மருந்துகளுக்கு அல்லது எவ்விதமான சிகிச்சைமுறைக்கும் பிரதிபலிப்பதில்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். மேலும், அதிக பட்சமாக, மருந்துகள் கடுமையான அறிகுறிகளைக் குறைப்பது அல்லது நீக்குவதன் மூலம் சீஸோஃபிரேனியாவைக் கட்டுப்படுத்தவே அல்லாமல் குணப்படுத்த உதவுவதில்லை. இருப்பினும் அவை இரண சிகிச்சை அல்லது பைத்தியமாகக் கருதப்படுவதைப் பார்க்கிலும் பெரிய முன்னேற்றமாக இருக்கின்றன.

பிறகு, ஏன் இந்த மருந்துகளை உபயோகிக்கும் நோயாளிகள் கோழைகள் அல்லது மருந்தைச் சார்ந்திருப்பவர்கள் என்று கருதப்படுகிறார்கள்? மனநோய்க்கு எதிரான மருந்துகள் சார்ந்திருக்கும் பழக்கத்தைக் கொண்டுவரும் தன்மையை உடையவை அல்ல, நோயாளிகளுக்குப் போதையூட்டுவதும் இல்லை, வெறுமனே இன்பமூட்டுவதற்காக உட்கொள்ளப்படுவதும் இல்லை. டாக்டர் E. ஃபுல்லர் ட்டோரே மனநோய்க்கு எதிரான மருந்துகளை “நீரிழிவு நோய்க்கான இன்சுலினுக்கு” ஒப்பிடுகிறார். மேலும் டாக்டர். ஜெரோல்ட் S. மாக்ஸ்மென் முடிவாக சொல்கிறார்: “இந்த மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் தங்கள் பிரச்னைகளை விட்டு விலகியோடுபவர்களாக இல்லை, மாறாக, அவற்றை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.” ஐரீன், இந்த மருந்து உட்கொள்ளும் முறைகளுக்கு ஒரு இருண்ட பக்கமும் இருக்கிறது என்பதை விரைவில் கண்டாள்.

பக்கபாதிப்புகளால் வரும் பிரச்னைகள்

“நான் ஒரு நடைபிணம் போலிருப்பதை உணர்ந்தேன்,” என்று நினைவுகூருகிறாள் ஐரீன். “என்னால் இயங்க முடிவதில்லை. சில சமயங்களில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உறங்கினதும் நினைவுக்கு வருகிறது.” ஐரீனின் வாழ்க்கை மோசமடைந்தது. மருந்தைவிட்டுவிட அவள் முயற்சி செய்தாள், மறுபடியும் மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்தான் முடிவடைந்தது.a

சில நோயாளிகள் உண்மையிலேயே அமைதியின்மை, தலைசுற்றுதல், சோம்பல் ஆகியவற்றிலிருந்து மஞ்சள் காமாலை, அதிர்ச்சி, எடை அதிகரிப்பு வரையாக கெடுதலான எதிர்விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். விரும்பத்தகாத எதிர்விளைவுகளில் ஒன்று டார்டைவ் டிஸ்கினேஷியா (tardive dyskinesia). இது நீண்டகால அடிப்படையிலான, மனநோய்க்கு எதிரான மருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளில் 10 முதல் 20 சதவிகிதத்தினரை வருத்துகிறது. இது முகத்திலும் வாயிலும் ஒருவித இழுப்பை உண்டாக்குவதை உட்படுத்துகிறது.

ஒரு நோயாளி ஒரு மருந்திற்கு எவ்விதமாகப் பிரதிபலிக்கிறார் என்பதை மருத்துவர்கள் முன்கூட்டியே அறிய முடியாததால், மருந்துகள் எழுதிக் கொடுப்பதானது பொருத்தமான மருந்தை ஓரளவு உபயோகத்தின் மூலமே கண்டுபிடிப்பதை உட்படுத்துகிறது. ஒரு மருந்துமுறை சிகிச்சை அளிக்கும் மனோ தத்துவ நிபுணர் விழித்தெழு! (Awake!) பத்திரிகைக்குச் சொன்னது: “மிகக் குறைந்த பக்க பாதிப்புக்களைக் கொண்டுவரக்கூடிய ஒரு பயனுள்ள மருந்தைக் காண்பதற்கு முன்பாக மருத்துவர்கள் மூன்று அல்லது நான்கு வித்தியாசமான மருந்துகளை முயற்சி செய்து பார்க்கக்கூடும்.”

அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பக்கபாதிப்புப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தக்கூடும்,” ஐரீனின் விஷயத்தில், வெறுமென மருந்துகளை மாற்றியதுதானே பயனுள்ளதாக இருந்தது. அவளுடைய சோம்பல் மற்றும் பொய்த் தோற்றங்கள் மறைந்துவிட்டன. அவள் மருத்துவமனையை விட்டு வெளியேறி மறுபடியும் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தாள்! ஏறக்குறைய 30 வருடங்கள் அவள் சமநிலையோடு இருந்தாள்—மருந்தை விட்டுவிட முயற்சி செய்தது வரையாக. அவள் சொல்கிறாள்: “நான் நலமாக இருக்கிறேன் என்று நான் நினைத்தேன். ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு என் எண்ணங்கள் கலைந்தன. என்னுடைய மருத்துவர் சொன்னார், ‘மருந்துகளை மறுபடியும் உட்கொள்.’” அவளுடைய வாழ்க்கையை பழைய பாதையில் மறுபடியும் கொண்டுவர செலுத்த வேண்டிய ஒரு அபராதம்.

எல்லாரும் மருந்துகளுக்கு அவ்வளவு வெற்றிகரமாக பிரதிபலிப்பதில்லை, மருந்துகளும் அநேக சமயங்களில் மெதுவாக வேலை செய்கின்றன. மேலும் சில நோயாளிகள் தங்கள் மருந்துகளைக் கடுமையாக வெறுக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பாதிப்பின் அறிகுறிகள் அவர்கள் இயங்கமுடியாத அளவு கடுமையாக இருக்கும்போது மருந்துகளுக்கும் மனநல மருத்துவமனைக்கும் இடையே உள்ள தெரிவையே எதிர்பட வேண்டியிருக்கிறது.

மாற்று சிகிச்சை முறைகள்

சர்க்கரை, கோதுமை, பால், ஈயம் மற்றும் உயிர்ச்சத்து குறைபாடுகள் எல்லாம் உணர்ச்சி பிரகாரமான கோளாறுகளுக்குச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது அக்கறையூட்டுவதாயிருக்கிறது. இது சீஸோஃபிரேனியாவுக்கு சத்துணவு சிகிச்சை முறையின் சாத்தியத்தை எழுப்புகிறது. இத்தகைய ஒரு அணுகுமுறை மனச் சோர்வுக்கான சிகிச்சையில் ஓரளவு வெற்றியை ஏற்கெனவே அடைந்திருக்கிறது. நோபல் பரிசுபெற்ற பிரசித்தி பெற்ற லைனஸ் பாலிங் உட்பட சில ஆராய்ச்சியாளர்கள் பெருமளவில் உட்கொள்ளப்படும் உயிர்ச்சத்துக்கள் சில நோயாளிகளின் சீஸோஃபிரேனியா அறிகுறிகளை ஆச்சரியமான வகையில் குறைத்துள்ளன என்று உரிமை பாராட்டுகின்றனர். இது வைதீக அணுமூலக்கூறு மனநோய் மருத்துவமுறை (Orthomolecular psychiatry) என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கருத்து—குறைந்தது கொள்கையளவில் அநேகருக்கு நல்லதாக தோன்றுகிறது உயிர்ச்சத்து-B குறைபாட்டினால் தோன்றும் பெல்லாக்ரா (pellagra) என்ற பெயர் கொண்ட நோய் மனநோய்க்குரிய அறிகுறிகளை உண்டாக்குகிறது என்று வைதீக அணுமூலக்கூறு மனநோய் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். பரிகாரம்? பெரும் அளவில் உயிர்ச்சத்து நியாசின் (niacin) உட்கொள்ளுவதே. ஆனால் இத்தகைய ஒரு சிகிச்சை சீஸோஃபிரேனியாவுக்கு பயனுள்ளதாக இருக்குமா? இதுவரையாக, வைதீக அணுமூலக்கூறு மனநோய் மருத்துவர்களால் பழைய மருத்துவ முறையை விரும்பும் தங்களுடைய சகாக்களை நம்பச்செய்ய முடியவில்லை.

நாஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் (National Institute of Mental Health) அறிக்கை எச்சரிப்பதாவது: “வைதீக அணுமூலக்கூறு மனநோய் மருத்துவமுறை ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான சாத்தியமான பகுதியை அளித்திருப்பதாகத் தோன்றினாலும் அதன் மருத்துவப் பயனின் தற்கால உரிமைப் பாராட்டுதல்கள் (விஞ்ஞான) ஆய்வுகளில் எந்த ஒரு ஆதரவையும் பெறக்கூடியதாக இல்லை.” ஒரு சரிவிகித, சத்துள்ள உணவு அர்த்தமுள்ளது என்பதை மறுக்கமுடியாது. இருப்பினும் கடுமையான உயிர்ச்சத்து குறைபாடு இருக்கிறதா என்பதை ஒரு மருத்துவர்தாமே சரியாகத் தீர்மானிக்கக் கூடியவராயிருக்கிறார்.

நாஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த்-ன் சீஸோஃபிரேனியா ஆராய்ச்சிப் பிரிவின் டாக்டர் டேவிட் ஷோர் பெரும்பாலானோர் பின்பற்றும் இந்தப் பிரதான மருத்துவ முறையைக் குறித்த போக்கைப் பற்றி விழித்தெழு! பத்திரிகைக்குச் சொன்னதாவது: “எல்லாரும் சீஸோஃபிரேனியாவுக்கு ஒரு எளிய பரிகாரத்தை விரும்புகிறார்கள்—உயிர்ச்சத்துக்கள் அல்லது டயாலிசிஸ் (dialysis).b ஆனால் அது வெறுமென அவ்வளவு எளிதானது அல்ல. அது அப்படி இருந்திருக்கக்கூடாதா என்று நாம் விரும்புகிறோம்.”

இருந்தபோதிலும் ஒரு நபர் எல்லா மருத்துவ முறைகளையும் தகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டும், கிளர்ச்சியூட்டும் உரிமை பாராட்டுதல்களில் விழிப்பாக இருக்க வேண்டும். “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடைகள் மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) கண்மூடித்தனமாக எந்த சிகிச்சை முறையையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். மருந்துகள் எழுதிக் கொடுக்கப்படும்போது, சாத்தியமுள்ள விளைவுகள் மற்றும் பக்க பாதிப்புகள் ஆகியவற்றை நன்கு தெரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

மனநோயாளிகளுக்கு ஆறுதல்

“கையாளப்படமுடியாத கொடிய காலங்களில்” நாம் வாழ்ந்து வருவதன் காரணமாக இன்றைக்கு மக்கள் கணிசமான அழுத்தங்களுக்கு ஆளாகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1; லூக்கா 21:26) மேலும் எல்லாரும் பாவம் மற்றும் அபூரணத்தின் பலவீனப்படுத்தும் பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதால் கடவுள் பயமுள்ள ஆட்களும்கூட மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.—ரோமர் 5:12.

ஆனால் மனநோய் என்பது ஒரு வியாதி என்பதை அறிந்திருப்பது ஒருவர் அதைச் சமநிலையோடு நோக்க உதவியாக இருக்கிறது. உதாரணமாக, ஐரீன் தன்னுடைய நோய் பேய்களின் தாக்குதல்களால் உண்டானது என்று பயந்தாள். சிலவற்றில் பேய் சக்திகள் உட்பட்டிருப்பது கூடிய காரியமாக இருந்தாலும், எல்லா நோய்களுக்கும் பேய்களே காரணமாயிருக்கின்றன என்று பைபிள் போதிப்பதில்லை. (எபேசியர் 6:12; மத்தேயு 4:24-ஐ ஒப்பிடுக; மாற்கு 1:32-34; அப்போஸ்தலர் 5:16) ஒருவர் குரல்களைக் கேட்கும்போதோ அல்லது வியப்பூட்டும் நடத்தையை வெளிக்காட்டும்போதோ சீஸோஃபிரேனியா போன்ற ஒரு நோய் உட்பட்டிருக்கலாம்.

தன்னுடைய நோய் பேய் ஊற்றுமூலத்திலிருந்து அல்ல என்று ஐரீன் அறிந்தபோது அவளுடைய பெரிய சுமை நீங்கியது. அவள் மருத்துவ உதவியை நாடி ஒரளவு வேதனையும் குறையக் கண்டாள். இருப்பினும் பைபிள் சொல்லும் ஒரு நோயாளி ஸ்திரீயை நினைவுகூருங்கள். அவள் “அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்து சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்பட்டாள்.” இயேசு கிறிஸ்துவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடிந்தது. (மாற்கு 5:25-29) மருத்துவ விஞ்ஞானம் இன்றைக்கு அதேபோன்று ஒரு வரம்பைக் கொண்டிருக்கிறது. ஒருவர் நோயிலிருந்து ஓரளவு நிவாரணம் பெற விவேகமுள்ள முயற்சிகள் எடுக்கக்கூடும், உண்மைதான். ஆனால் நழுவிச்செல்லும் பரிகாரத்தைத் தேடி அலையும் சுழல் இயந்திரத்தில் சிக்கிக்கொள்வதைவிட, சிலர் வெறுமென பிரச்னையோடு வாழவும், சகிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இருப்பினும் கடவுள் நமக்காக ஆழ்ந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்பதை அறிந்திருப்பது அதிகமான கவலையைத் தவிர்க்கக்கூடும். (1 பேதுரு 5:6, 7) “யெகோவா இதிலும் மற்ற அநேக சோதனைகளிலும் என்னைத் தாங்கி நின்றார்” என்று ஐரீன் சொல்கிறாள். மேலும் அவள் இயேசு கிறிஸ்துவின் கீழ் வரப்போகும் ஒரு புதிய ஒழுங்கிற்கான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறாள். அதில் “‘நான் வியாதிப்பட்டிருக்கிறேன்’ என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24; 2 பேதுரு 3:13) “இப்பொழுது வெகு அருகாமையிலிருக்கும் பரதீஸிய பூமியில் நித்தியமாக வாழ்தல் என்ற பந்தயப்பொருளில் என்னுடைய கண்களைப் பதியவைப்பது நான் உறுதியாக இருப்பதற்கு உதவியாக இருக்கிறது.” மருத்துவர்கள் அளிக்கும் எந்த மருந்தைக் காட்டிலும் அவளுடைய விசுவாசம் அதிக உதவி செய்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்ட சீஸோஃபிரேனியா நோயாளிகளில் 80 சதவிகிதம் வரையான ஆட்கள் மறுபடியும் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

b சீஸோஃபிரேனியாவை விளைவிக்கும் இரத்தத்திலுள்ள விஷப்பொருட்களை அதிக விளம்பரப்படுத்தப்படும் ஹேமோடயாலிஸிஸ் (hemodialysis) முறையை உபயோகித்து வடிகட்டி நீக்குவதைக் குறிக்கிறது.

[பக்கம் 21-ன் பெட்டி]

சீஸோஃபிரேனியாவின் வேதியியல்

நம்முடைய மூளை கோடிக்கணக்கான நியூரான்கள் அல்லது நரம்பு உயிரணுக்களை இணைக்கிற நம்பமுடியாத அளவுக்குச் சிக்கலான அநேக இணைப்புக்களைக் கொண்ட தகவல் தொடர்பு மையம். இருப்பினும் நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று வெளித்தோற்றத்தில் இணைக்கப்படவில்லை. அவை டெண்ட்ரைட்ஸ் (dendrites) என்று அழைக்கப்படும் சுரணைக் கொம்புபோன்ற நீட்டிக்கொண்டிருக்கும் பாகங்களை ஒரு அங்குலத்தில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு அளவான (0.000003 செ.மீ.) இடைவெளியே பிரிக்கிறது. நரம்பு அலைகள் தங்குதடையின்றி பாய்வதற்கு நரம்பு செயல் ஊக்குவிப்பு அலைகள் இந்த இடைவெளியைத் தாண்ட வேண்டும். இதைச் செய்வதற்கு நரம்பு தகவல் பரப்பு சாதனங்கள் எனப்படும் இரசாயணப் பொருளின் “செய்தியறிவிப்பாளர்களின்” ஒரு சேனையை உயிரணு விடுவிக்கிறது. இவை அந்த இடைவெளியின் குறுக்கே “நீந்திச் சென்று” ஒரு குறிப்பிட்ட இரசாயணப்பொருளை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தனித்தனியே வடிவமைக்கப்பட்ட விசேஷித்த கிரகிப்பான்களில் தாளிட்டுக் கொள்கின்றன.

சாதாரண ஒரு மூளையில், இந்த எல்லா நடவடிக்கைகளும் தங்குதடையில்லாமலும் ஒழுங்காகவும் நடைபெறுகின்றன. ஆனால் சீஸோஃபிரேனியா நோயாளிகளில் நரம்புதகவல் பரப்புவேலை ஒழுங்காக செயல்படுவதில்லை. டோபாமைன்களின் அளவு அதிகமாயிருப்பதால் அவை நியூரான்களை அளவுக்கு மீறித் தூண்டி அவற்றைச் “சுடாது போகச்” (misfire) செய்வதில் விளைவடைகிறது. கோர்வையற்ற எண்ணங்கள் விளைவடையக்கூடும். ஆனால் எல்லா சீஸோஃபிரேனியா நோயாளிகளும் தங்கள் மூளைகளில் உயர்ந்த அளவு டோபாமைன்களை உடையவர்களாக இல்லை. குறிப்பிட்ட மூளைகள் டோபாமைன்களால் மிக எளிதில் பாதிக்கப்படுபவையாக இருக்கக்கூடுமா? அல்லது பல்வேறுபட்ட மாதிரியான சீஸோஃபிரேனியா நோய்கள் இருக்கின்றனவா? அல்லது மற்ற சில இரசாயண கோளாறு டோபாமைன்களோடு சேர்ந்து செயல்படுகிறதா?

உண்மையில் ஒருவருக்கும் தெரியாது. இரசாயணச் சீர்கேடு சீஸோஃபிரேனியாவை உண்டாக்குகிறதா அல்லது சீஸோஃபிரேனியா இரசாயண சீர்கேட்டைக் கொண்டுவருகிறதா என்பதும் ஒருவருக்கும் தெரியாது. வேதியியல் என்பது சீஸோஃபிரேனியா புதிரில் வெறுமனே ஒரு துண்டுதான்.

[பக்கம் 22-ன் பெட்டி]

அதிர்ச்சி மருத்துவம்—தர்க்கத்திற்குரியது

அநேகமாக எல்லாவற்றிலும் அதிகமான தர்க்கத்திற்குரிய மருத்துவம் அதிர்ச்சி மருத்துவம். இருப்பினும், மருத்துவர்கள் அடிக்கடி ஒரு சாதாரண ஒலியெழுப்பும் பெயரால் இதைக் குறிப்பிடுகிறார்கள்: மின் அதிர்வு மருத்துவம் (electro convulsive therapy) அல்லது இ.சி.டி (E.C.T.) “ஒன்று ‘கக்கூ’ பறவையின் கூட்டைத் தாண்டி பறந்தது” (One flew Over the Cuckoo’s Nest) போன்ற படங்களில் இ.சி.டி. முறை பயமுறுத்தும் வகையில் காட்டப்பட்டிருப்பது மக்களைப் பொதுவாகவே இ.சி.டி. சம்பந்தமாக பயம்கொள்ளும்படி செய்திருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் ஐக்கிய மாகாணங்களில் மட்டும், சுமார் ஒரு இலட்சம் நோயாளிகள் இ.சி.டி. பெற்றுக்கொள்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மனநோய் மருத்துவர்களின் ஒரு புள்ளிவிவரம், “வழக்கமாக, அதிக அளவில் மருந்துகள், மனநோய்க்கான மனதைப்பற்றிய ஆராய்ச்சி முறையுடன் சேர்ந்து பயனற்றவையாக இருக்கையில் மட்டுமே இ.சி.டி. அதிகப்படியாக உபயோகிக்கப்படுகிறது,” என்று வெளிப்படுத்தியது.

இ.சி.டி. பெரிய அளவில் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அநேகர் கற்பனை செய்கிறபடி அது அச்சமுண்டாக்குகிற செயல்முறையல்ல. சரியான விதத்தில் கொடுக்கப்படும்போது, நோயாளி ஒரு காரியத்தையும் உணரமாட்டான். அவன் (எலும்பு காயங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக) மயக்க மருந்தும், தசைகளைத் தளர்த்திவைக்க மருந்துகளும் கொடுக்கப்படுகிறான். மின்வாய்கள் (electrodes) அவனுடைய தலையிலே பொருத்தப்பட்டு சிறிய அளவிலான மின்சாரமும் மூளையினூடே செலுத்தப்பட்டு ஒரு சிறிய அதிர்ச்சி உண்டாக்கப்படுகிறது. ஜான் போன்னேஜ், எ.பி.எ. (American Psychiatric Associaton)-யின் தகவல் அதிகாரி, இ.சி.டி. “மனச்சோர்வுக்குச் சிகிச்சையளிப்பதில் அதிக பலனுள்ள வழிகளில் ஒன்றாக” இருந்தது என்ற எ.பி.எ. செயற்குழு ஆய்வின் முடிவைக் குறிப்பிடுகிறார். போன்னேஜ் விழித்தெழு! பத்திரிகைக்கு அறிவித்ததாவது: “கடுமையான மனச்சோர்வு சீஸோஃபிரேனியாவோடு சேர்ந்திருந்தாலொழிய, இ.சி.டி. சீஸோஃபிரேனியா நோய்க்கு சிகிச்சை அளிக்க ஒருபோதும் உபயோகப்படுத்தப்படுவது இல்லை.”

இ.சி.டி. எப்படி அல்லது ஏன் பலனளிக்கிறது என்பதை மருத்துவர்கள் உண்மையில் அறியவில்லை. எதிர்தரப்பார் இதை “படங்கள் தடைபடும்போது ஒரு தொலைக்காட்சி பெட்டியை உதைப்பதற்கு ஒப்பாயிருக்கிற ஒரு மனநோய் மருத்துவமுறை” என்று அழைக்கின்றனர். மனநோய் மருந்துகளைப் போன்று அதே வழியில் இ.சி.டி-யும் நரம்பு தகவல் பரப்பும் வேலையைப் பாதிக்கலாம் என்பதற்குச் சில அத்தாட்சிகள் இருக்கின்றன. நினைவு ஆற்றலை இழந்துவிடும் அபாயத்தையும் மற்றும் உயிரிழப்புகளையும்கூட சுட்டிக்காட்டி இ.சி.டி. ஆபத்தானது மற்றும் மூளையை முடமாக்குகிறது என்று குற்றம் காண்பவர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் ஆதரித்துப் பேசுபவர்கள், திருத்தியமைக்கப்பட்ட செயல்முறைகள் இந்த ஆபத்துக்களை வெகுவாக குறைத்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். கடுமையான மனச்சோர்வு வழிநடத்தும் தற்கொலைக்கான பேராபத்தைப் பார்க்கையில் இ.சி.டி.யின் உபயோகத்தினால் வரும் நன்மைகள் அதனால் வரும் எந்த ஆபத்துக்களைக் காட்டிலும் மிகவும் மிஞ்சுவதாயிருக்கிறது என்று மேலுமாக தர்க்கம் செய்கிறார்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி]]

ஃபிராய்டின் “உட்பார்வை” மருத்துவங்கள்—உதவி செய்கிறதா அல்லது ஊறு விளைவிக்கிறதா?

என்.ஐ.எம்.எச்.-ன் சீஸோஃபிரேனியா ஆராய்ச்சி பிரிவின் டாக்டர் டேவிட் ஷோர் விழித்தெழு! பத்திரிகைக்குச் சொன்னதாவது: “மன நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் மனதைப் பற்றிய ஆராய்ச்சி முறைகள் இன்றைக்குக் குறைந்த அளவே உபயோகிக்கப்படுகின்றன. காரணம்? ஒரு காரியம் ஃபிராய்டின் பாகுபாடு ஆய்வு மற்றும் சம்பந்தப்பட்ட உட்பார்வை மருத்துவமுறைகளால் சீஸோஃபிரேனியாவைக் குணப்படுத்த இயலாது என்பதற்கு அநேக அத்தாட்சிகள் இருக்கின்றன. மனநோய்கள் வாழ்க்கை அனுபவங்களின் எதிர்விளைவாகவும் சுயநினைவற்ற மனதில் பதியப்பெற்ற இளம்பிராய வேதனைகளாகவும் இருக்கின்றன என்ற நிரூபிக்கப்படாத கூற்றுகளில் ஃபிராய்டின் மருத்துவமுறைகள் ஆதாரம் கொண்டிருக்கின்றன. நோயாளி தன்னுடைய பிரச்னைகளின் ஊற்று மூலத்தை அறிந்துகொள்ளும் வகையில் உதவிசெய்ய ஆராய்ச்சியாளர்கள் கேள்விகள் மற்றும் “கட்டுப்பாடற்ற கூட்டுறவு” மூலமாக சுயநினைவற்ற மனதை ஆராய முயற்சி செய்கிறார்கள்.

சீஸோஃபிரேனியா நோயாளிகள் ஏற்கெனவே பேச்சுத் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை உட்பார்வை மருத்துவமுறைக்கு உட்படுத்துவது டாக்டர் E. ஃபுல்லர் டோர்ரேயின் பிரகாரம், “புயல் காற்றினால் ஏற்கெனவே நாசமாக்கப்பட்டிருக்கும் நகரத்தினுள் வெள்ளத்தைச் செலுத்துவது” போல் இருக்கிறது.

“சலனத்திற்கான” ஆபத்துக்களும் இருக்கின்றன, அதன்மூலம் ஒரு நோயாளி மருத்துவரிடம் தீவிர உணர்வுகளை வளர்க்கக்கூடும். நோயாளிகள் தங்களுடைய சிகிச்சையை நிறுத்தமுடியாத அளவிற்கு மருத்துவர்களைச் சார்ந்திருப்பவர்களாக மாறிவிடுகிறார்கள் என்று சிலர் உரிமை பாராட்டுகிறார்கள். மேலும், எதிர்பாலினராகிய ஒரு அங்கத்தினரோடு நெருங்கிய உறவை பகிர்ந்துகொள்வது ஒழுக்கநெறி பிரச்னைகளையும் வரவழைத்துவிடலாம்.

மனநோய் மருத்துவர்களில் பெரும்பாலானோர் உயிர்வேதியியல் சிகிச்சைமுறைகளையே சார்ந்திருக்கிறார்கள். புராதன மனநோய் சிகிச்சை முறைகள் சீஸோஃபிரேனியாவுக்குச் சிகிச்சையளிக்க உபயோகமற்றதாகக் கருதுகிறார்கள். இருப்பினும் சில வகையான பேச்சு மருத்துவமுறைகள், மருந்து சிகிச்சை முறைகள் சம்பந்தப்பட்டதில் நோயாளிக்கு ஆதரவாக இருக்கும் வகையில், தன்னுடைய நோயைப் புரிந்துகொளள் உதவுவதற்கும், மருந்து உட்கொள்ளுவதன் அவசியத்தை நோயாளிக்கு வலியுறுத்துவதற்கும் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தப்படலாம். சில சமயங்களில் ஒரு நோயைக் கண்டுபிடிக்க தனக்கு உதவும் வகையில் ஒரு மருத்துவர் சோதித்தறியும் கேள்விகளைப் பயன்படுத்துகிறார். இருப்பினும், இது மனநோய்க்கான மனதைப் பற்றிய ஆராய்ச்சி (psychoanalysis) அல்ல.

[பக்கம் 23-ன் படங்கள்]

மருந்து உட்கொள்ளுதல் (medication) அநேக சமயங்களில் ஆச்சரியமான பாதிப்பைக் கொண்டுவருகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்