கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
“மனிதர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் உணர்வுள்ளவர்களாய் இருப்பதிலும் கவனமாக சிந்தித்து தெரிவுகளைச் செய்வதிலும் ஈடிணையற்றவர்களாக இருப்பதன் காரணமாக அவர்கள் பொல்லாதவர்களாக இருக்கக்கூடியதில் ஈடிணையற்றவர்களாக இருக்கிறார்கள்.”—அர்னால்ட் டாடன்பீ, சரித்திராசிரியர் (ஆங்கிலம்)
நாம் அனைவருமே கவனமாக சிந்தித்து தெரிவுகளைச் செய்கிறோம். தினந்தோறும் அதைச் செய்கிறோம். நம்முடைய தீர்மானங்களில் பெரும்பாலானவை அன்றாட வாழ்க்கையின் சம்பந்தமாக செய்யப்படும் அற்பமான காரியங்களாக இருக்கின்றன—என்ன சாப்பிடுவது, என்ன குடிப்பது, என்ன உடுத்திக்கொள்வது, எங்கே செல்வது, ஆனால் மற்ற சில தீர்மானங்கள் மீதமுள்ள நம்முடைய வாழ்க்கை முழுவதிலும் நம்மை பாதிக்கக்கூடிய-அல்லது நம்முடைய வாழ்க்கையை குறுகியதாக்கிவிடக்கூடிய மறக்கமுடியாத பின்விளைவுகளை கொண்டு வருவதாக இருக்கின்றன.
மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சையை சிபாரிசு செய்யும்போது, உடனடியாக தெரிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. துணிந்து இதைச் செய்துக்கொள்வது தகுதியுள்ளதாக இருக்குமா? அறுவை மருத்துவர் எவ்வளவு அனுபவமுள்ளவராகவும் நம்பத்தக்கவராகவும் இருக்கிறார்? அது என்னுடைய வாழ்நாளை நீடிக்குமா அல்லது குறைத்துவிடுமா? முக்கியமான ஒரு தீர்மானம் செய்யப்படவேண்டியதாக இருக்கிறது.
சரித்திரத்தின் முற்காலத்தில், அப்போதிலிருந்து மனிதவர்க்கத்தை பாதித்திருக்கும் தெரிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற நம்முடைய கேள்விக்கு அந்த தீர்மானங்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன.
மனிதன்—பொல்லாதவனாக இருப்பதில் ஈடிணையற்றவனா?
சுயாதீனத்தையும் தெரிந்துகொள்வதற்கு திறமையையும்கொண்ட முதல் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டியாக இருந்தது மனிதன் அல்ல என்பதை பூர்வாங்க சரித்திரத்தின் பைபிள் பதிவு காண்பிக்கிறது. அதே சமயத்தில் உண்மையில் பொல்லாதவனாக இருப்பதிலும்கூட இவன் ஈடிணையற்றவனாக அல்லது முதன்மையானவனாக இருக்கவில்லை. உயர்தரமான ஒரு சிருஷ்டி ஏற்கெனவே வாழ்ந்து வந்தது. தேவதூதர்கள் என்பதாகவும்கூட அழைக்கப்பட்ட ஆவி சிருஷ்டிகளாகிய “கடவுளைப் போன்றவர்கள்” வாழ்ந்து வந்தார்கள்.—சங்கீதம் 8:5
லட்சக்கணக்கிலிருக்கும் “கடவுளைப் போன்றவர்களில்” ஒருவன், முதல் மனிதனுக்கும் மனுஷிக்கும், சிருஷ்டிகராகிய யெகோவாவுக்குப் பதிலாக தான் உண்மையான ஒரு கடவுள்—அரசனாக ஆவதற்கு சாத்தியமிருப்பதைக் கண்டான். கடவுள் பொய்யராகவும் வஞ்சகராகவும் இருப்பதாக அவன் மறைமுகமாகக் குறிப்பிட்டான். கடவுள் சொல்லியிருந்ததுபோல, சுயாதீனமாக சிந்திப்பதும் செயல்படுவதும் மரணத்துக்கு வழிநடத்தாது என்றும் “நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள்” என்றும் உறுதியாகச் சொன்னான்.
தன்னுடைய போக்கின்மூலமாக, கடவுளைப் போன்றிருந்த இவன் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக கலகத்தை ஆரம்பித்து வைத்தான். இந்த கலகத்துக்கு லட்சக்கணக்கான தேவ தூதர்கள் சாட்சியாக இருந்தார்கள். இவ்விதமாக அரசுரிமையானது அனைத்துலகையும் பாதிக்கும் பிரச்சினையாக ஆனது. எதிர்த்துக்கொண்ட தூதன் கடவுளுக்கு சத்துருவானான். இதற்கு நிகரான எபிரேய வார்த்தை “சாத்தான்” என்பதாக மொழிபெயர்க்கப்படுகிறது. கடவுளுடைய உண்மைத்தன்மையை சந்தேகிப்பதன்மூலம், சாத்தான் முதலாவது அவரை பழித்தூற்றியவனுமானான். இது கிரேக்க மொழியிலிருந்து “பிசாசு” என்பதாக மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்த முதல் கலகமானது, மனிதவர்க்கத்தின் துன்பங்களுக்கு வழிநடத்தியிருக்கும் சங்கிலித் தொடரான சம்பவங்களுக்கு காரணமாக இருந்தது. எவ்விதமாக என்று நீங்கள் கேட்கலாம்.
“தவறு அவர்களுடையதே”
முதல் மனுஷனுக்கும் மனுஷிக்கும் முன்பாக பரதீஸிய சூழ்நிலையில் பரிபூரணத்தோடு நித்தியமாக வாழ்வதற்குரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதை அவர்கள், அவர்களுடைய பிள்ளைகளோடுகூட சேர்ந்து, கடைசியாக பூமி முழுவதிலும் விரிவாக்கலாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு, கடவுளுக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருப்பதன்பேரில் சார்ந்திருந்தது. கீழ்ப்படியாமை, எதிர்கால சந்ததிகளுக்கு கடத்தப்படும் ஒரு புதிய பரம்பரை அடிப்படைக்கூற்றை—அபூரணத்தையும் மரணத்தையும் காட்சியினுள் அறிமுகப்படுத்திவைக்கும். என்ன சம்பவித்தது?—ஆதியாகமம் 2:15-17.
அப்போஸ்தலனாகிய பவுல் நிலைமையை வெகு எளிதாக விளக்குகிறான்: “ஒரே மனுஷனுடைய [ஆதாம்] கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டார்கள்.” “அந்த ஒருவன் மூலமாய் மரணம் ஆண்டுகொண்டது” (ரோமர் 5: 17-19) கடவுளுடைய ஆட்சியை தள்ளிவிடுவதன் மூலம் ஆதாமும் ஏவாளும், துன்பத்துக்கும் வியாதிக்கும் மரணத்துக்கும் போகும் வழியில் மனிதவர்க்கத்தின் பிரயாணத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இஸ்ரவேலரைக் குறித்து மோசே சொன்ன விதமாகவே பொதுவாக மனிதவர்க்கத்தைக் குறித்தும்கூட பின்வருமாறு சொல்லப்படலாம்: “அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.”—உபாகமம் 32:5.
இதன் விளைவாக மனிதர்கள் கடவுளை சார்ந்திராமல் இருப்பதை தெரிந்துகொண்டு அவருடைய ஆட்சியிலிருந்து விலகிசென்றுவிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்கு விலகி சென்றுவிட்டிருக்கிறார்கள்? தெரிந்தோ மற்றபடியோ, அவர்கள் “அவிசுவாசிகளின் மனதை குருடாக்கியிருக்கும் இப்பிரபஞ்சத்தின் தேவனின்” ஆட்சிக்கு தங்களை கீழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 4:4) பொய்க்குப் பிதாவாகிய பிசாசுக்கு அவர்கள் பிணயமாகிவிட்டிருக்கிறார்கள். (யோவான் 8:44) பகைமைக்கும் அழிவுக்கும் துன்பத்துக்கும் வழிநடத்தியிருக்கும் மனிதனால் உண்டுப்பண்ணப்பட்ட அரசியல் மற்றும் மத சம்பந்தமான ஆட்சியை தெரிந்துக்கொள்வதன்மூலம் இதை அவர்கள் செய்திருக்கிறார்கள். பிசாசாகிய சாத்தான் “உலகமனைத்தையும் மோசம் போக்கிக்கொண்டிருக்கிறான்” என்று பைபிள் சொல்வதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.—வெளிப்படுத்தின விசேஷம் 12:9.
துன்பம் ஏன் அனுமதிக்கப்பட்டுள்ளது?
ஏதேனில் அப்பொழுதே சாத்தானை அழிப்பதன்மூலம் யெகோவா ஏன் கலகத்தை முளையிலேயே கிள்ளிவிடவில்லை. சர்வ வல்லமையுள்ளவராக நிச்சயமாகவே அதை செய்வதற்கு அவருக்கு வல்லமை இருந்தது. என்றபோதிலும், கடவுளுடைய வல்லமையை அல்ல, ஆனால் மாறாக அதை அவர் பிரயோகித்த ஆனால் மாறாக அதை அவர் பிரயோகித்த முறையைத்தானே பிசாசு எதிர்த்தான். கடவுள் கொடுத்திருந்த கட்டளைக்கு எதிராக விவாதிப்பதன்மூலம், கடவுள் ஆட்சிசெய்யும் விதம் தவறு என்பதாகவும் உண்மையில் அது அவருடைய சிருஷ்டிகளுக்கு நன்மையைத் தராது என்பதாகவும் உண்மையில் அவன் உரிமைப் பாராட்டினான். சோதனையின்கீழ் மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதாகவும்கூட அவன் விவாதித்தான். (யோபு அதிகாரங்கள் 1 மற்றும் 2) இந்த சவாலை எவ்விதமாக எதிர்பட்டு அதற்கு முடிவாக தீர்வுகாண முடியும்?
ஒருவேளை ஏறுமாறான போக்குள்ள மனிதவர்க்கத்தோடு கடவுள் செயல் தொடர்புகொள்ளும் முறையை இயேசுவின் உவமைகளில் ஒன்றாகிய, கெட்ட அல்லது ஊதாரி குமாரனுடைய விஷயத்துக்கு நாம் ஒப்பிடலாம். இரண்டு குமாரர்களுள்ள ஒரு மனுஷனைப் பற்றி இயேசு சொன்னார். இவர்களில் இளையவன், தகப்பன் இன்னும் உயிரோடிருக்கும்போதே ஆஸ்தியில் தனக்கு வரவேண்டிய பங்கை தரும்படியாக அவனை சுதந்தரமாக இருக்கவும், வீட்டைவிட்டு வெளியேறி, தனிமையில் தன்னால் நிற்கமுடியும் என்று நிரூபிக்கவும் விரும்பினான். மகன் கேட்டதை தர மறுத்து, அவன் தப்பியோடாதபடிக்கு அவனை ஒரு அறையில் பூட்டி வைப்பதன் மூலம், தகப்பன் விரைவாக ஒரு நடவடிக்கை எடுத்திருக்கலாம். நிலையான ஒரு நோக்கத்தை இது சேவித்திருக்குமா? இல்லை. ஏனென்றால் விருப்பமில்லாமல் மகன் அங்கே தங்கியிருப்பான். மேலுமாக அவனுடைய சுயாதீனத்தை அவனுக்கு கொடுக்க அது மறுப்பதாக இருக்கும் ஆகவே தகப்பன் என்ன செய்தான்?
இயேசு விளக்கினார்: “அந்தப்படி தகப்பன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய் அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.” நிலைமை அத்தனை மோசமாகிவிட்டதால், இந்த யூத மகன், பன்றிகளை மேய்க்கும் வேலைக்குப் போக வேண்டியதாயிற்று. பன்றிகளுக்கு உணவு இருந்தபோதிலும் தனக்கு ஒன்றுமில்லை. இயேசு தொடர்ந்து இவ்விதமாகச் சொன்னார்: “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.” ஆகவே அவன் என்ன செய்தான்? அவன் மனந்திரும்பி வீட்டுக்குச் செல்லவும் தன் தகப்பனின் இரக்கத்தில் வாழவும் தீர்மானித்தான்.—லூக்கா 15:11-32.
இப்பொழுது அந்த இளைஞனுக்கு புத்தி தெளிய என்ன தேவையாக இருந்தது? காலமும் அனுபவமும். தகப்பன் கடுமையான ஒரு நடவடிக்கையை எடுக்காமல், அவனுடையபோக்கு மடமையானது என்பதை குமாரன் காண அவன் காலத்தை அனுமதித்தான். உண்மைதான் அந்த காலத்தில் அந்த மகன் துன்பத்தை அனுபவித்தான். ஆனால் அதனால் அவனுடைய புத்தி தெளிந்தது.
முன்னோடியான ஒரு நிகழ்ச்சி முன்வைக்கப்பட்டுள்ளது
உவமையிலுள்ள குமாரனைப் போலவே, நம்முடைய முதல் பெற்றோர் கடவுளை சார்ந்திராத சுயாதீனபோக்கை தெரிந்துகொண்டார்கள். கெட்டக்குமாரனைப் போலில்லாமல், ஆதாமும் ஏவாளும் ஒருபோதும் அவர்களுடைய தகப்பனிடம் திரும்பி வரவில்லை. ஆனால் அவர்களுடைய கலகத்தனமான போக்கின் காரணமாக, காணக்கூடிய மற்றும் காணக்கூடாத புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளின் பார்வையில் காலம் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினையில் மனிதவர்க்கம் இழுத்துச் செல்லப்பட்டது. இப்பொழுது கடவுளையும் அவருடைய ஆட்சியையும் சார்ந்திராமல் 6,000 வருடங்கள் சென்றுவிட்டபின்பு, என்ன நிரூபிக்கப்பட்டுள்ளது? தீர்க்கதரிசியாகிய எரேமியா குறிப்பிடும் விதமாகவே: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும் தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுவதை” மனித சரித்திரம் காண்பித்திருக்கிறது. கெட்டக்குமாரனைப் போல இதை உணர்ந்துகொண்ட அநேகர், வழிநடத்தலுக்காக அவர்களுடைய பரம தகப்பனிடமாக திரும்பி வருகிறார்கள். இவ்விதமாக கடவுளை சேவிப்பதிலிருந்து எல்லோரையும் தன்னால் விலகிப் போய்விடச் செய்திடமுடியும் என்ற கூற்றில் சாத்தானை பொய்யனாக நிரூபித்திருக்கிறார்கள்.—பிரசங்கி 8:9.
மனந்திரும்பாத சாத்தானுக்கும் அவனுடைய சுதந்தரமான போக்கை ஆதரிக்கும் ஆட்களுக்கும் எதிராக யெகோவா சீக்கிரமாக செயல்படுவார். இவ்விதமாக கலகத்துக்கும் அதனுடைய எல்லா விளைவுகளுக்கும் ஒரு முடிவை அவர் கொண்டுவருவார். எல்லா எதிர்கால தலைமுறைகளுக்குமாக முன்னோடி நிகழ்வின் மூலமாக, எதிர்காலத்தில் காணக்கூடாத பகுதியிலோ யெகோவா எந்த கலகத்தையும் அனுமதிப்பதற்கு மறுபடியும் ஒருபோதும் அவசியமிராது. கடவுளிடமிருந்து பிரிந்துபோய் சாத்தானோ மனிதனோ, நீதியான முறையில் ஆட்சி செலுத்த முடியாது என்பதை காலமும் அனுபவமும் காண்பித்திருக்கிறது.—வெளிப்படுத்தின விசேஷம் 16:14-16; 20:1-3.
உண்மைதான், இதற்கிடையில் மனிதவர்க்கம் அளவிடமுடியாத துன்பங்களையும் அநேக சமயங்களில் அகால மரணத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த இழப்புக்கு ஈடு செய்வதாகவும் கூட யெகோவா வாக்களித்திருக்கிறார். ஆனால் எவ்விதமாக? அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னவிதமாகவே: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) பூமியின்மீது பரிபூரண வாழ்க்கையை அனுபவிப்பதற்காக மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவது உயர்வான இரக்கத்தின் செயலாக இருக்கும். அப்பொழுது ஒவ்வொருவரும் மெய்யான வாழ்க்கையின் ஈவுக்காக, போற்றுதலை காண்பிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
“புதிய வானங்கள் மற்றும் ஒரு புதிய பூமியின்” ஏற்பாட்டின்கீழ், முற்காலத்தின் துன்பங்கள் படிப்படியாக மறக்கப்படும். அதற்கு பதிலாக செழிப்பான, மகிழ்ச்சியான முடிவில்லா வாழ்க்கை ஆசீர்வாதங்கள் அங்கு இருக்கும் பைபிள் சொல்கிறவிதமாகவே: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்தின விசேஷம் 21:1-4) ஆனால் இது கூடிய காரியமாக இருக்கும் என்று நாம் எவ்விதமாக நிச்சயமாயிருக்கலாம்? என்ன மாற்றங்கள் நித்திய சமாதானத்தை கைக்கூடி வரச்செய்யும்?
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
சுயாதீனமும் மற்றும் தெரிவுசெய்யும் திறமை ஆகியவற்றோடு சிருஷ்டிக்கப்பட்ட கடவுளுடைய முதல் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டி மனிதன் அல்ல
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
கீழ்ப்படியாமை, காட்சியினுள் ஒரு புதிய மூலக்கூற்றை அறிமுப்படுத்திவைக்கும்
[பக்கம் 10-ன் படம்]
கெட்ட குமாரனை, காலமும் அனுபவமும் அவனுடைய தகப்பன்மீது அவன் சார்ந்திருப்பதை உணரும்படியாகச் செய்தது போலவே, இன்று அநேகர் கடவுளுக்கான தேவையை உணர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.