கடவுள் சமாதானத்தை எப்படி கொண்டுவருவார்? எப்பொழுது?
“நாகரீகத்தின் தோற்றம் முதற்கொண்டு அரசியல் சமுதாயமே மனிதனின் தனிச்சிறப்பு வாய்ந்த நிறுவனமாக இருந்திருக்கிறது . . . . உலகம் முழுவதிலும் மனிதவர்க்கத்துக்கு ஒரே ஒரு அரசியல் அமைப்பு ஒருபோதும் இருந்ததில்லை.”
“எப்பொழுதும் எண்ணிறந்த அரசியல் அமைப்புகள் இருந்திருக்கின்றன . . . . அவைகளின் மோதலே, நாகரீகத்தின் ஒரு சாபமாக இருக்கும் யுத்தங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது.”
“உலகம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள தனியுரிமை ஆட்சி அரசியல் அமைப்புகள் சமாதானத்தைக் காத்துக்கொள்ள திறமையற்றதாக இருக்கின்றன.”—அர்னால்ட் டாயன்பீ, மனிதவர்க்கமும் பூமாதேவியும் (ஆங்கிலம்)
முன்சொல்லப்பட்ட கூற்றுகளின் வெளிச்சத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு முக்கிய தடைகளில் ஒன்றாக இருப்பது என்ன? மனிதவர்க்கம், தனியுரிமை ஆட்சி அரசியல் அமைப்புகளாக பிரிந்திருப்பதே ஆகும். இன்னும் தெளிவாகச் சொன்னால் அது தேசப் பற்றாகும்.
சரித்திராசிரியர் டாயன்பீ தேசப்பற்றை, “கிறிஸ்தவத்துக்குப்பின் உருவான மூன்று மேற்கத்திய கோட்பாடுகளில் மிகவும் வல்லமை வாய்ந்தது மற்றும் அதிக கேடுவிளைவிப்பது” என்பதாக விவரித்தார். (டாயன்பீயின்படி மற்ற இரண்டு, உலகியல் பொதுவுடைமைக் கொள்கையும், உலகியல் முதலாளித்துவமும் ஆகும்) . . . முழு மனித இனத்தின் 90 சதவிகித மதமாக இருப்பது தேசப்பற்று என்றபோதிலும் தேசப்பற்று, மனிதவர்க்கத்தை ஆயிரக்கணக்கான வருடங்களாக பல பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கிறது. அப்பொழுது, எவ்விதமாக சமாதானத்தின் தேவன் இந்த கொள்ளை நோயை பூமியிலிருந்து ஒழித்துவிட முடியும்?
மாற்றத்துக்கு ஒரு ஆதாரம்
அமைதலான முறையில் மாற்றம் ஏற்கெனவே நடந்தேறி வருகிறது. சமாதானத்தின் மற்றும் தேசிய வரம்புகளைக் கடந்த சிந்தனையின் வித்து உலகமெங்கும் லட்சக்கணக்கான மனிதர்களின் மனதில் விதைக்கப்பட்டு வருகிறது. அது எவ்விதமாகச் செய்யப்படுகிறது? யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதிலும் செய்துவரும் கல்வி புகட்டும் வேலையினால் இது செய்யப்படுகிறது. இந்த மதத் தொகுதியானது, அதனுடைய பதிவுச் சான்றுகளின் மூலமாக, அது அரசியல் சம்பந்தப்படாததாக இருப்பதை—அரசியல் மற்றும் தேசீய பிரச்சினைகளில் முற்றிலும் நடுநிலைமை வகிப்பதை—காண்பித்திருக்கிறது. கிறிஸ்துவின் போதகங்களை பின்பற்றுவதே. இந்த நிலைநிற்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. இதுவோ தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்ற அடிப்படை சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.—1 யோவான் 4:8.
இயேசு சொன்னார்: “நீங்கள் ஒரிவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” மேலுமாக அவர் சொன்னார்: “உங்கள் சத்துருக்களை சிநேகித்து உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.” (யோவான் 13:35; மத்தேயு 5:44) இயேசுவின் வார்த்தைகளை முன்னிட்டுப் பார்க்கையில், உண்மையாக அவரை பின்பற்றுகிறவர்கள் எவ்விதமாக யுத்தத்தை கற்றுக்கொள்ள முடியும்? தேசப்பற்று என்பதன் அடிப்படையில், அவர்கள் எவ்விதமாக யுத்தத்தை கற்றுக்கொள்ளமுடியும்? தேசப்பற்று என்பதன் அடிப்படையில், அவர்கள் எவ்விதமாக பகைமைக்காட்டி கொலை செய்ய முடியும்? உண்மையில் அவர்களால் முடியாது!
அதன் காரணமாகவே யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய பரலோக ராஜ்ய ஆட்சியின்கீழ் இங்கே பூமியில் ஒரு புதிய ஒழுங்கில் வாழ்வதற்காக தயார்செய்து கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய சகோதரத்துவத்தை ஏற்கெனவே உருவாக்கியிருக்கிறார்கள். எல்லா இனங்களையும் கோத்திரங்களையும், பாஷைக்காரரையும் சேர்ந்த தங்களுடைய அயலாரோடு சமாதானத்தில் வாழ்வதற்காக ஜனங்களுக்கு மறுபடியும் கல்வி புகட்டுவது கூடிய காரியமாகும் என்பதற்கு அவர்கள் உயிருள்ள அத்தாட்சியாக இருக்கிறார்கள். ஒரு அர்த்தத்தில் அவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள எல்லா மனிதர்களின் பிரதிநிதிகளையும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒழுங்காக அமைக்கப்பட்ட ஒரு தொகுதியை உண்டுபண்ணியிருக்கிறார்கள். இப்பொழுதேகூட லட்சக்கணக்கான சாட்சிகளும் அவர்களுடைய கூட்டாளிகளும் ‘தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடித்திருக்கிறார்கள்.’ உடன்மானிடருக்கு எதிராக பட்டயத்தை எடுக்கவோ அல்லது இனி யுத்தத்தை கற்கவோ அவர்கள் விரும்புவதில்லை.—ஏசாயா 2:4.
பெரிய மாற்றங்கள் அருகாமையில் இருக்கின்றன
2, 500 வருடங்களுக்கு முன்பாக, முடிவு காலத்தின்போது நடைபெறும் சம்பவங்களைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொன்னது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அது இந்த [போட்டியிடும் அரசியல்] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கிதானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) இந்த ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படியாகவே கர்த்தருடைய ஜெபத்தில் கிறிஸ்தவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ராஜ்ய அரசாங்கத்தை யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வருகிறார்கள். அதை கடவுள் கொண்டுவர தவறமாட்டார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஏனென்றால், “தேவன் பொய்யுரையாதவராக” இருக்கிறார்.—எபிரெயர் 6:18; தீத்து 1:2.
கடவுள் பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவர மற்றொரு பெரிய மாற்றம் அவசியமாக இருக்கிறது. ஆவிக்குரிய ஆட்சியில் ஒரு மாற்றம். சாத்தான் அழிக்கப்படவேண்டும். ஒரு உயிர்த்தியாகியாக இயேசு கிறிஸ்து மரிக்க வேண்டியதாக இருந்ததற்கு இது ஒரு காரியமாகும். “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே” அழிக்கும்படி அவர் அவ்விதமாக மரிக்க வேண்டியதாக இருந்தது. (எபிரெயர் 2:14) வெளிப்படுத்தின விசேஷத்திலுள்ள தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், சாத்தான் சீக்கிரத்தில் செயலற்றவனாக்கப்படுவான். அப்பொழுது போரை ஆதரிக்கும் பிரச்சாரத்தைச் செய்ய அவனால் இயக்கப்படும் அரசியல் ஆட்சியாளர்கள் இருக்கமாட்டார்கள். சமாதானத்தை நேசிக்கும் ஜனங்கள் ஆட்சிக்கும் அமைதிக்கும் சமாதானத்தின் தேவனிடமாக திரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 20:1-3.
அழகான ஒரு காட்சியில் யோவான் இந்த புதிய பரலோக அரசாங்கம் பூமியினிடமாக அதன் கவனத்தைத் திருப்புவதையும் பரலோகத்திலிருந்து வந்த ஒரு குரலையும் கேட்டான். அது இவ்விதமாக சொன்னது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது. அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.—வெளிப்படுத்தின விசேஷம் 21:1-4.
மனிதவர்க்கத்தினிடமாகவும் இந்த அழகிய பூமியினிடமாகவும் கடவுளுடைய நோக்கத்தை தெரிந்து கொள்வதன் மூலம் இப்பொழுது சமாதானத்தையும் எதிர்காலத்தில் பரிபூரண சமாதானத்தையும் நீங்களும்கூட கண்டடையலாம். (g86 2/22)
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
சமாதானத்தின் மற்றும் தேசிய வரம்புகளைக் கடந்த சிந்தனையின் வித்து உலகமெங்கும் லட்சக்கணக்கான மனிதர்களின் மனதில் விதைக்கப்பட்டுவருகிறது.