உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 28
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள், எசேக்கியா ராஜாவின் ஆட்கள் தொகுத்தவை (25:1–29:27)

நீதிமொழிகள் 28:1

இணைவசனங்கள்

  • +தானி 3:16, 17; அப் 4:13

நீதிமொழிகள் 28:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சட்டவிரோதமாக நடந்தால்.”

இணைவசனங்கள்

  • +1ரா 16:8, 15, 22
  • +தானி 4:27

நீதிமொழிகள் 28:3

இணைவசனங்கள்

  • +நீதி 14:31

நீதிமொழிகள் 28:4

இணைவசனங்கள்

  • +எண் 25:6-8; 1சா 15:22, 23; எபே 5:11

நீதிமொழிகள் 28:5

இணைவசனங்கள்

  • +சங் 25:14; மாற் 4:11, 12; யாக் 1:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2018, பக். 8

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 19

    10/1/1987, பக். 29

நீதிமொழிகள் 28:6

இணைவசனங்கள்

  • +நீதி 16:8; 19:1

நீதிமொழிகள் 28:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “புரிந்துகொள்ளுதல் உள்ள.”

இணைவசனங்கள்

  • +நீதி 23:20; 1கொ 15:33

நீதிமொழிகள் 28:8

இணைவசனங்கள்

  • +உபா 23:19
  • +நீதி 13:22; 19:17

நீதிமொழிகள் 28:9

இணைவசனங்கள்

  • +சங் 66:18; நீதி 15:29; ஏசா 1:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2021 பக். 9

நீதிமொழிகள் 28:10

இணைவசனங்கள்

  • +சங் 7:14-16
  • +உபா 7:12; சங் 37:11, 18; 84:11

நீதிமொழிகள் 28:11

இணைவசனங்கள்

  • +நீதி 18:11
  • +மாற் 10:21

நீதிமொழிகள் 28:12

இணைவசனங்கள்

  • +1ரா 17:1-3; நீதி 29:2

நீதிமொழிகள் 28:13

இணைவசனங்கள்

  • +1சா 15:13-15
  • +2சா 12:13; 2நா 33:12, 13; சங் 32:3, 5; 51:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/2000, பக். 15-16

    11/1/1988, பக். 28-29

    5/1/1987, பக். 29

நீதிமொழிகள் 28:14

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பயத்தோடு.”

இணைவசனங்கள்

  • +யாத் 7:22; நெ 9:29; நீதி 29:1; எரே 16:12, 13

நீதிமொழிகள் 28:15

இணைவசனங்கள்

  • +செப் 3:3; மத் 2:16

நீதிமொழிகள் 28:16

இணைவசனங்கள்

  • +நெ 5:15; ஆமோ 4:1
  • +ஏசா 33:15, 16

நீதிமொழிகள் 28:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இரத்தப்பழியை.”

இணைவசனங்கள்

  • +ஆதி 9:6; 1ரா 21:19; மத் 27:3-5

நீதிமொழிகள் 28:18

இணைவசனங்கள்

  • +சங் 25:21
  • +சங் 73:12, 18; 1தெ 5:3; வெளி 3:3

நீதிமொழிகள் 28:19

இணைவசனங்கள்

  • +நீதி 23:21; லூ 15:13, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    திருப்தியான வாழ்க்கை, பக். 6-7

நீதிமொழிகள் 28:20

இணைவசனங்கள்

  • +1சா 18:5; நெ 7:2; சங் 101:6
  • +2ரா 5:20-22; எரே 17:11; 1தீ 6:9

நீதிமொழிகள் 28:21

இணைவசனங்கள்

  • +லேவி 19:15; நீதி 18:5; யாக் 2:1

நீதிமொழிகள் 28:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பேராசைபிடித்தவன்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 31

நீதிமொழிகள் 28:23

இணைவசனங்கள்

  • +2சா 12:7, 9; கலா 2:11
  • +சங் 141:5; நீதி 27:6

நீதிமொழிகள் 28:24

இணைவசனங்கள்

  • +நீதி 19:26; மாற் 7:10, 11

நீதிமொழிகள் 28:25

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அகம்பாவம்பிடித்தவன்.”

இணைவசனங்கள்

  • +1ரா 3:11-13

நீதிமொழிகள் 28:26

இணைவசனங்கள்

  • +நீதி 3:5; எரே 17:9
  • +யோபு 28:28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/2005, பக். 22

நீதிமொழிகள் 28:27

இணைவசனங்கள்

  • +உபா 15:7, 10; சங் 41:1; நீதி 19:17; எபி 13:16

நீதிமொழிகள் 28:28

இணைவசனங்கள்

  • +எஸ்தர் 8:17

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 28:1தானி 3:16, 17; அப் 4:13
நீதி. 28:21ரா 16:8, 15, 22
நீதி. 28:2தானி 4:27
நீதி. 28:3நீதி 14:31
நீதி. 28:4எண் 25:6-8; 1சா 15:22, 23; எபே 5:11
நீதி. 28:5சங் 25:14; மாற் 4:11, 12; யாக் 1:5
நீதி. 28:6நீதி 16:8; 19:1
நீதி. 28:7நீதி 23:20; 1கொ 15:33
நீதி. 28:8உபா 23:19
நீதி. 28:8நீதி 13:22; 19:17
நீதி. 28:9சங் 66:18; நீதி 15:29; ஏசா 1:15
நீதி. 28:10சங் 7:14-16
நீதி. 28:10உபா 7:12; சங் 37:11, 18; 84:11
நீதி. 28:11நீதி 18:11
நீதி. 28:11மாற் 10:21
நீதி. 28:121ரா 17:1-3; நீதி 29:2
நீதி. 28:131சா 15:13-15
நீதி. 28:132சா 12:13; 2நா 33:12, 13; சங் 32:3, 5; 51:1
நீதி. 28:14யாத் 7:22; நெ 9:29; நீதி 29:1; எரே 16:12, 13
நீதி. 28:15செப் 3:3; மத் 2:16
நீதி. 28:16நெ 5:15; ஆமோ 4:1
நீதி. 28:16ஏசா 33:15, 16
நீதி. 28:17ஆதி 9:6; 1ரா 21:19; மத் 27:3-5
நீதி. 28:18சங் 25:21
நீதி. 28:18சங் 73:12, 18; 1தெ 5:3; வெளி 3:3
நீதி. 28:19நீதி 23:21; லூ 15:13, 14
நீதி. 28:201சா 18:5; நெ 7:2; சங் 101:6
நீதி. 28:202ரா 5:20-22; எரே 17:11; 1தீ 6:9
நீதி. 28:21லேவி 19:15; நீதி 18:5; யாக் 2:1
நீதி. 28:232சா 12:7, 9; கலா 2:11
நீதி. 28:23சங் 141:5; நீதி 27:6
நீதி. 28:24நீதி 19:26; மாற் 7:10, 11
நீதி. 28:251ரா 3:11-13
நீதி. 28:26நீதி 3:5; எரே 17:9
நீதி. 28:26யோபு 28:28
நீதி. 28:27உபா 15:7, 10; சங் 41:1; நீதி 19:17; எபி 13:16
நீதி. 28:28எஸ்தர் 8:17
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 28:1-28

நீதிமொழிகள்

28 யாரும் துரத்தாமலேயே பொல்லாதவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

ஆனால், நீதிமான்கள் சிங்கத்தைப் போலத் தைரியமாக நிற்கிறார்கள்.+

 2 மக்கள் கலகம் செய்தால்* ராஜாக்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.+

ஆனால், பகுத்தறியும் திறனும் அறிவும் உள்ளவரின் உதவி இருந்தால் ராஜா நீண்ட காலம் நிலைத்திருப்பார்.+

 3 எளியவனை மோசடி செய்கிற ஏழை,+

விளைச்சலையெல்லாம் அடித்துக்கொண்டு போகிற மழைபோல் இருக்கிறான்.

 4 சட்டத்தை ஒதுக்கித்தள்ளுகிறவர்கள் பொல்லாதவனைப் புகழ்கிறார்கள்.

ஆனால், சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் அவர்களைப் பார்த்துக் கொதிப்படைகிறார்கள்.+

 5 அக்கிரமக்காரர்களால் நீதி நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்.+

 6 குறுக்கு வழிகளில் போகிற பணக்காரனைவிட,

உத்தமமாக நடக்கிற ஏழையே மேல்.+

 7 புத்தியுள்ள* மகன் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறான்,

ஆனால், பெருந்தீனிக்காரர்களோடு பழகுகிறவன் தன் அப்பாவுக்கு அவமானத்தைக் கொண்டுவருகிறான்.+

 8 வட்டி வாங்கியும்+ அநியாயமாக லாபம் சம்பாதித்தும் சேர்க்கப்படுகிற சொத்து,

ஏழைக்கு இரக்கம் காட்டுகிற மனிதனுக்குத்தான் போய்ச் சேரும்.+

 9 ஒருவன் சட்டத்தைக் கேட்க விரும்பாவிட்டால்,

அவனுடைய ஜெபம் அருவருப்பானதாக இருக்கும்.+

10 நேர்மையானவனைக் கெட்ட வழியில் கொண்டுபோகிறவன், தான் வெட்டிய குழியிலேயே விழுவான்.+

ஆனால், குற்றமற்றவன் நல்ல பலனைப் பெறுவான்.+

11 பணக்காரன் தனக்கு ஞானம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.+

ஆனால் பகுத்தறிவுள்ள ஏழை, அவனைச் சரியாக எடைபோடுகிறான்.+

12 நீதிமான்கள் வெற்றி பெற்றால் மகா கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனால், பொல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனங்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.+

13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+

ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+

14 எப்போதும் கவனமாக* நடந்துகொள்கிறவன் சந்தோஷமானவன்.

ஆனால், தன் இதயத்தை இறுகிப்போகச் செய்பவன் ஆபத்தில் சிக்கிக்கொள்வான்.+

15 ஆதரவற்ற மக்களை ஆட்சி செய்கிற பொல்லாத ராஜா,

கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும் தாக்க வருகிற கரடியைப் போலவும் இருக்கிறான்.+

16 பகுத்தறிவு இல்லாத தலைவன் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறான்.+

ஆனால், அநியாயமாக லாபம் சம்பாதிப்பதை வெறுக்கிறவன் நீண்ட காலம் வாழ்வான்.+

17 கொலைப்பழியை* சுமக்கிறவன் கல்லறைக்குப் போகும்வரை பயந்து பயந்து ஓடிக்கொண்டிருப்பான்.+

அவனுக்கு யாரும் ஆதரவு தர வேண்டாம்.

18 குற்றமற்ற வழியில் நடக்கிறவன் காப்பாற்றப்படுவான்.+

ஆனால், குறுக்கு வழிகளில் நடக்கிறவன் திடீரென்று விழுந்துவிடுவான்.+

19 நிலத்தை உழுகிறவனுக்கு உணவுப் பஞ்சமே வராது.

ஆனால், வீணான காரியங்களைச் செய்கிறவனுக்கு வறுமைதான் வரும்.+

20 உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்.+

ஆனால், சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்.+

21 பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+

ஆனால், ஒரு துண்டு ரொட்டிக்காகக்கூட ஒருவன் தவறு செய்துவிடலாம்.

22 பொறாமைபிடித்தவன்* சொத்து சேர்ப்பதில் வெறியாக இருக்கிறான்.

ஆனால், வறுமை அவனைத் துரத்திப் பிடித்துவிடுமென்று தெரியாமல் இருக்கிறான்.

23 போலியாகப் புகழ்கிறவனைவிட

வெளிப்படையாகக் கண்டிக்கிறவனைத்தான்+ ஒருவன் பிற்பாடு பாராட்டுவான்.+

24 அப்பாவிடமும் அம்மாவிடமும் திருடிவிட்டு, “இது ஒன்றும் தப்பில்லை” என்று சொல்கிறவன்,

நாசம் உண்டாக்குகிறவனுக்குக் கூட்டாளியாக இருக்கிறான்.+

25 பேராசைபிடித்தவன்* வாக்குவாதங்களை உண்டாக்குகிறான்.

ஆனால், யெகோவாவை நம்புகிறவன் செழிப்பாக வாழ்வான்.+

26 தன்னுடைய இதயத்தையே நம்புகிறவன் முட்டாள்.+

ஆனால், ஞானமாக நடக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+

27 ஏழைகளுக்குக் கொடுத்து உதவுகிறவனுக்கு ஒரு குறையும் வராது.+

ஆனால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறவனுக்கு நிறைய சாபங்கள் வரும்.

28 பொல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒருவன் ஒளிந்துகொள்வான்.

ஆனால், அவர்கள் அழிந்துபோனால் நீதிமான்கள் பெருகுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்