உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 27
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள், எசேக்கியா ராஜாவின் ஆட்கள் தொகுத்தவை (25:1–29:27)

நீதிமொழிகள் 27:1

இணைவசனங்கள்

  • +லூ 12:19, 20; யாக் 4:13, 14

நீதிமொழிகள் 27:2

இணைவசனங்கள்

  • +நீதி 25:27; எரே 9:23; 2கொ 10:18

நீதிமொழிகள் 27:3

இணைவசனங்கள்

  • +1சா 25:25

நீதிமொழிகள் 27:4

இணைவசனங்கள்

  • +ஆதி 37:9-11; நீதி 14:30; அப் 17:5

நீதிமொழிகள் 27:5

இணைவசனங்கள்

  • +லேவி 19:17; மத் 18:15

நீதிமொழிகள் 27:6

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “போலியான.”

இணைவசனங்கள்

  • +2சா 12:7, 9; சங் 141:5; வெளி 3:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/2000, பக். 21

நீதிமொழிகள் 27:9

இணைவசனங்கள்

  • +1சா 23:16; நீதி 15:23; 16:24

நீதிமொழிகள் 27:10

இணைவசனங்கள்

  • +நீதி 17:17; 18:24

நீதிமொழிகள் 27:11

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எனக்குச் சவால் விடுகிறவனுக்கு.”

இணைவசனங்கள்

  • +நீதி 10:1; 23:15; 2யோ 4
  • +யோபு 1:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

    காவற்கோபுரம் (பொது),

    எண் 1 2018, பக். 15

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2016, பக். 30

    காவற்கோபுரம்,

    11/15/2012, பக். 12-13

    4/15/2009, பக். 7-11

    8/15/2006, பக். 26

    4/15/2003, பக். 14-15

    2/1/1987, பக். 24-29

    7/1/1986, பக். 10

    போதகர், பக். 208-211

    மெய்க் கடவுள், பக். 66

நீதிமொழிகள் 27:12

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அதன் விளைவுகளை அனுபவிக்கிறான்.”

இணைவசனங்கள்

  • +நீதி 18:10; ஏசா 26:20; எபி 11:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2015, பக். 8-9

நீதிமொழிகள் 27:13

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வேறு தேசத்தைச் சேர்ந்தவருக்காக.”

இணைவசனங்கள்

  • +நீதி 20:16

நீதிமொழிகள் 27:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நச்சரிக்கிற.”

இணைவசனங்கள்

  • +நீதி 21:9, 19

நீதிமொழிகள் 27:17

இணைவசனங்கள்

  • +1சா 23:16; எபி 10:24, 25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 48

    விழித்தெழு!,

    2/22/1999, பக். 4

    காவற்கோபுரம்,

    5/15/1998, பக். 27

    5/15/1996, பக். 17-18

    3/15/1996, பக். 3

    10/1/1987, பக். 28

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 73

நீதிமொழிகள் 27:18

இணைவசனங்கள்

  • +நீதி 13:4
  • +ஆதி 39:2; நீதி 17:2

நீதிமொழிகள் 27:20

இணைவசனங்கள்

  • +நீதி 30:15, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    3/22/1999, பக். 14

நீதிமொழிகள் 27:21

இணைவசனங்கள்

  • +நீதி 17:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2016),

    11/2016, பக். 1

    9/15/2006, பக். 19

    2/1/1998, பக். 31

நீதிமொழிகள் 27:23

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்; உன் ஆடுகளுக்குக் கவனம் செலுத்து.”

இணைவசனங்கள்

  • +கொலோ 3:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2022, பக். 17

    விழித்தெழு!,

    12/22/1997, பக். 11

நீதிமொழிகள் 27:24

இணைவசனங்கள்

  • +நீதி 23:4, 5; 1தீ 6:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    12/22/1997, பக். 11

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 27:1லூ 12:19, 20; யாக் 4:13, 14
நீதி. 27:2நீதி 25:27; எரே 9:23; 2கொ 10:18
நீதி. 27:31சா 25:25
நீதி. 27:4ஆதி 37:9-11; நீதி 14:30; அப் 17:5
நீதி. 27:5லேவி 19:17; மத் 18:15
நீதி. 27:62சா 12:7, 9; சங் 141:5; வெளி 3:19
நீதி. 27:91சா 23:16; நீதி 15:23; 16:24
நீதி. 27:10நீதி 17:17; 18:24
நீதி. 27:11நீதி 10:1; 23:15; 2யோ 4
நீதி. 27:11யோபு 1:8, 9
நீதி. 27:12நீதி 18:10; ஏசா 26:20; எபி 11:7
நீதி. 27:13நீதி 20:16
நீதி. 27:15நீதி 21:9, 19
நீதி. 27:171சா 23:16; எபி 10:24, 25
நீதி. 27:18நீதி 13:4
நீதி. 27:18ஆதி 39:2; நீதி 17:2
நீதி. 27:20நீதி 30:15, 16
நீதி. 27:21நீதி 17:3
நீதி. 27:23கொலோ 3:23
நீதி. 27:24நீதி 23:4, 5; 1தீ 6:17
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 27:1-27

நீதிமொழிகள்

27 நாளைக்குச் செய்யப்போவதைப் பற்றிப் பெருமையாகப் பேசாதே,

நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?+

 2 உன்னை நீயே புகழாதே, இன்னொருவன் உன்னைப் புகழட்டும்.

உன் உதடுகள் அல்ல, மற்றவர்களுடைய உதடுகளே உன்னை மெச்சட்டும்.+

 3 கல்லும் பாரம், மணலும் பாரம்.

ஆனால், முட்டாளினால் ஏற்படும் எரிச்சல் அதைவிட பாரம்.+

 4 ஆவேசம் கொடூரமானது, கோபம் வெள்ளப்பெருக்குபோல் பயங்கரமானது.

ஆனால், பொறாமை இதையெல்லாம்விட படுமோசமானது.+

 5 வெளிப்படையாகக் கண்டிப்பதே மறைத்து வைக்கப்படும் அன்பைவிட மேலானது.+

 6 நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்.+

ஆனால், எதிரி ஏராளமான* முத்தங்களைக் கொடுக்கிறான்.

 7 திருப்தியாகச் சாப்பிட்டவனுக்குத் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்கூட கசக்கும்.

ஆனால், பசியில் வாடுகிறவனுக்குக் கசப்பானதுகூட இனிக்கும்.

 8 வீட்டைவிட்டு அலைந்து திரிகிற மனிதனும்

கூட்டைவிட்டுப் பறந்து திரிகிற பறவையும் ஒன்றுதான்.

 9 அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு,

எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.+

10 உன் நண்பனையோ உன் அப்பாவின் நண்பனையோ அலட்சியம் செய்யாதே,

ஆபத்து நாளில் உன் சகோதரனுடைய வீட்டுக்குப் போகாதே.

தூரத்தில் இருக்கிற சகோதரனைவிட பக்கத்தில் இருக்கிற நண்பனே மேல்.+

11 என் மகனே, ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து.+

அப்போதுதான், என்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு* என்னால் பதிலடி கொடுக்க முடியும்.+

12 சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.+

ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.*

13 ஒருவன் முன்பின் தெரியாதவரின் கடனுக்குப் பொறுப்பேற்றிருந்தால், அவனுடைய அங்கியை எடுத்துக்கொள்.

அன்னியப் பெண்ணுக்காக* அவன் அப்படிச் செய்திருந்தால், அவனிடம் அடமானம் வாங்காமல் விடாதே.+

14 ஒருவன் விடியற்காலையிலே சத்தமான குரலில் யாரையாவது ஆசீர்வதித்தால்,

அது சாபமாகத்தான் கருதப்படும்.

15 சண்டைக்கார* மனைவி மழை நாளில் ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரைபோல் இருக்கிறாள்.+

16 அவளை அடக்குவதைவிட காற்றை அடக்கிவிடலாம்,

எண்ணெயையும் வலது கையில் பிடித்துக்கொள்ளலாம்.

17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல,

நண்பனை நண்பன் கூர்மையாக்குகிறான்.+

18 அத்தி மரத்தைக் கவனித்துக்கொள்பவன் அதன் பழத்தைச் சாப்பிடுவான்.+

எஜமானைக் கவனித்துக்கொள்பவன் மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்பான்.+

19 தண்ணீர் ஒருவனின் முகத்தைப் பிரதிபலிப்பதுபோல்,

ஒருவனின் இதயம் இன்னொருவனின் இதயத்தைப் பிரதிபலிக்கிறது.

20 கல்லறையும் புதைகுழியும் ஒருபோதும் திருப்தி அடையாது.+

அதேபோல், மனிதனுடைய கண்களும் ஒருபோதும் திருப்தி அடையாது.

21 வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை,+

அதுபோல் ஒருவனைச் சோதிப்பது புகழ்ச்சி.

22 தானியத்தை உரலில் போட்டு இடித்து நொறுக்குவது போல,

முட்டாளை உலக்கையால் இடித்து நொறுக்கினாலும்,

அவனுடைய முட்டாள்தனம் அவனைவிட்டுப் போகாது.

23 உன் மந்தையின் நிலைமையை நீ நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உன் ஆடுகள் ஒவ்வொன்றையும் அக்கறையோடு கவனித்துக்கொள்.*+

24 சொத்து என்றென்றும் நிலைக்காது.+

கிரீடம் எல்லா தலைமுறைக்கும் நிலைக்காது.

25 பசும்புல் வாடிவிடும், புதிதாகப் புல் முளைக்கும்,

மலைகளிலுள்ள புல்பூண்டுகள் சேகரிக்கப்படும்.

26 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் உனக்கு உடையைத் தரும்.

வெள்ளாட்டுக் கடாக்கள் உனக்கு வயலை வாங்கித் தரும்.

27 வெள்ளாடுகள் உனக்கும் உன் குடும்பத்துக்கும் போதுமான அளவு பால் கொடுக்கும்.

அதனால் உன் வேலைக்காரிகளும் பிழைப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்