உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 25
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள், எசேக்கியா ராஜாவின் ஆட்கள் தொகுத்தவை (25:1–29:27)

        • ரகசியங்களை அம்பலப்படுத்தாதே (9)

        • சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை (11)

        • அடுத்தவன் வீட்டுக்கு அடிக்கடி போகாதே (17)

        • நெருப்புத் தணலை எதிரியின் தலைமேல் குவிப்பது (21, 22)

        • நல்ல செய்தி குளிர்ந்த தண்ணீர் போன்றது (25)

நீதிமொழிகள் 25:1

இணைவசனங்கள்

  • +1ரா 4:29, 32; பிர 12:9
  • +2நா 29:1

நீதிமொழிகள் 25:2

இணைவசனங்கள்

  • +உபா 29:29; ரோ 11:33

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 189

நீதிமொழிகள் 25:4

இணைவசனங்கள்

  • +நீதி 17:3

நீதிமொழிகள் 25:5

இணைவசனங்கள்

  • +1ரா 2:44, 46; நீதி 20:28; 29:14

நீதிமொழிகள் 25:6

இணைவசனங்கள்

  • +நீதி 27:2
  • +சங் 131:1

நீதிமொழிகள் 25:7

இணைவசனங்கள்

  • +லூ 14:8-10; 1பே 5:5

நீதிமொழிகள் 25:8

இணைவசனங்கள்

  • +நீதி 18:17; மத் 5:25

நீதிமொழிகள் 25:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மற்றவர்களுடைய ரகசியங்களை.”

இணைவசனங்கள்

  • +மத் 18:15
  • +நீதி 11:13

நீதிமொழிகள் 25:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வதந்தியை.”

நீதிமொழிகள் 25:11

இணைவசனங்கள்

  • +நீதி 15:23; ஏசா 50:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2019, பக். 15

    காவற்கோபுரம்,

    12/15/2015, பக். 19

    1/15/1999, பக். 23

    1/15/1994, பக். 32

    2/1/1989, பக். 30

    எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 23

நீதிமொழிகள் 25:12

இணைவசனங்கள்

  • +சங் 141:5; நீதி 1:8, 9; 9:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1997, பக். 32

நீதிமொழிகள் 25:13

இணைவசனங்கள்

  • +நீதி 13:17

நீதிமொழிகள் 25:14

இணைவசனங்கள்

  • +மத் 5:37

நீதிமொழிகள் 25:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சாந்தமான.”

இணைவசனங்கள்

  • +ஆதி 32:4, 5; நீதி 15:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    4/2011, பக். 13

நீதிமொழிகள் 25:16

இணைவசனங்கள்

  • +நீதி 25:27

நீதிமொழிகள் 25:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/1994, பக். 22

நீதிமொழிகள் 25:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தண்டாயுதத்தையும்.”

இணைவசனங்கள்

  • +யாத் 20:16

நீதிமொழிகள் 25:19

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நம்ப முடியாதவனை.” அல்லது, “துரோகியை.”

நீதிமொழிகள் 25:20

இணைவசனங்கள்

  • +சங் 137:3, 4

நீதிமொழிகள் 25:21

இணைவசனங்கள்

  • +யாத் 23:5; 2ரா 6:21, 22; நீதி 24:17; மத் 5:44

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    10/22/1998, பக். 7

நீதிமொழிகள் 25:22

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, ஒருவரைச் சாந்தப்படுத்தி, அவருடைய கல்நெஞ்சைக் கரைய வைப்பதைக் குறிக்கிறது.

இணைவசனங்கள்

  • +ரோ 12:20

நீதிமொழிகள் 25:23

இணைவசனங்கள்

  • +சங் 101:5

நீதிமொழிகள் 25:24

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நச்சரிக்கிற.”

இணைவசனங்கள்

  • +நீதி 21:9, 19; 27:15

நீதிமொழிகள் 25:25

இணைவசனங்கள்

  • +நீதி 15:30; ஏசா 52:7

நீதிமொழிகள் 25:27

இணைவசனங்கள்

  • +நீதி 25:16
  • +நீதி 27:2; யோவா 5:44; பிலி 2:3

நீதிமொழிகள் 25:28

இணைவசனங்கள்

  • +1சா 20:33; நீதி 16:32; 22:24, 25; 29:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2000, பக். 23

    1/15/1992, பக். 9-10

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 25:11ரா 4:29, 32; பிர 12:9
நீதி. 25:12நா 29:1
நீதி. 25:2உபா 29:29; ரோ 11:33
நீதி. 25:4நீதி 17:3
நீதி. 25:51ரா 2:44, 46; நீதி 20:28; 29:14
நீதி. 25:6நீதி 27:2
நீதி. 25:6சங் 131:1
நீதி. 25:7லூ 14:8-10; 1பே 5:5
நீதி. 25:8நீதி 18:17; மத் 5:25
நீதி. 25:9மத் 18:15
நீதி. 25:9நீதி 11:13
நீதி. 25:11நீதி 15:23; ஏசா 50:4
நீதி. 25:12சங் 141:5; நீதி 1:8, 9; 9:8
நீதி. 25:13நீதி 13:17
நீதி. 25:14மத் 5:37
நீதி. 25:15ஆதி 32:4, 5; நீதி 15:1
நீதி. 25:16நீதி 25:27
நீதி. 25:18யாத் 20:16
நீதி. 25:20சங் 137:3, 4
நீதி. 25:21யாத் 23:5; 2ரா 6:21, 22; நீதி 24:17; மத் 5:44
நீதி. 25:22ரோ 12:20
நீதி. 25:23சங் 101:5
நீதி. 25:24நீதி 21:9, 19; 27:15
நீதி. 25:25நீதி 15:30; ஏசா 52:7
நீதி. 25:27நீதி 25:16
நீதி. 25:27நீதி 27:2; யோவா 5:44; பிலி 2:3
நீதி. 25:281சா 20:33; நீதி 16:32; 22:24, 25; 29:11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 25:1-28

நீதிமொழிகள்

25 இவையும் சாலொமோனின் நீதிமொழிகள்;+ இவற்றை யூதாவின் ராஜாவான எசேக்கியாவின்+ ஆட்கள் தொகுத்து, நகலெடுத்தார்கள்:

 2 எந்த விஷயத்தையும் ரகசியமாக வைப்பது கடவுளுக்கு மகிமை.+

எந்த விஷயத்தையும் தீர ஆராய்வது ராஜாவுக்குப் பெருமை.

 3 வானத்தின் உயரத்தையும் பூமியின் ஆழத்தையும் தெரிந்துகொள்ள முடியாததுபோல்,

ராஜாவின் உள்ளத்தில் இருப்பதையும் புரிந்துகொள்ள முடியாது.

 4 வெள்ளியில் இருக்கிற கசடை எடுத்துப்போடு.

அப்போது, அது சுத்தமான வெள்ளியாகப் பளபளக்கும்.+

 5 ராஜாவின் முன்னாலிருந்து பொல்லாதவனைத் துரத்திவிடு.

அப்போது, அவருடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படும்.+

 6 ராஜாவுக்கு முன்னால் உன்னை உயர்த்தாதே.+

முக்கியப் பிரமுகர்களின் நடுவே உட்காராதே.+

 7 ராஜா உன்னைப் பெரிய மனிதர்கள் முன்னால் அவமானப்படுத்துவதைவிட,

“இங்கே வந்து உட்கார்” என்று அவராகவே சொல்வதுதான் மேல்!+

 8 அவசரப்பட்டு ஒருவன்மேல் வழக்கு போடாதே.

உன்மேல் தப்பு இருப்பதாக அவன் நிரூபித்துவிட்டால் என்ன செய்வாய்?+

 9 அதனால், பிரச்சினையை அவனோடு நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்.+

ஆனால், அவன் உன்னிடம் சொன்ன ரகசியங்களை* அம்பலப்படுத்தாதே.+

10 ஏனென்றால், நீ யாரிடம் ரகசியத்தைச் சொல்கிறாயோ அவனே உன்னை அவமானப்படுத்திவிடுவான்.

நீ மோசமான விஷயத்தை* பரப்பிய பிறகு அதைத் திரும்பப் பெற முடியாதே!

11 சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை

வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்.+

12 ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால்,

அவர் உனக்குத் தங்கக் கம்மல் போலவும் சொக்கத்தங்கத்தில் செய்த நகை போலவும் இருப்பார்.+

13 குளிர்ந்த பனி அறுவடை நாளில் புத்துணர்ச்சி தருவதுபோல்,

உண்மையுள்ள தூதுவனும் தன் எஜமானுக்குப் புத்துணர்ச்சி தருகிறான்.+

14 அன்பளிப்பு கொடுப்பதாகப் பெருமையடித்துவிட்டு அதைக் கொடுக்காமல் இருக்கிறவன்,

மழை தராத மேகங்களையும் காற்றையும் போல இருக்கிறான்.+

15 பொறுமையால் அதிகாரியை வெல்லலாம்.

மென்மையான* நாவினால் எலும்பையும் நொறுக்கிவிடலாம்.+

16 நீ தேனைக் கண்டால், அதை அளவோடு சாப்பிடு.

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடுவாய்.+

17 அடுத்தவன் வீட்டுக்கு அடிக்கடி போகாதே.

போனால், அவன் அலுத்துப்போய் உன்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவான்.

18 அடுத்தவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்கிறவன்

தடியையும்* வாளையும் கூர்மையான அம்பையும் போல் இருக்கிறான்.+

19 கஷ்ட காலங்களில் பொறுப்பில்லாதவனை* நம்புவது

உடைந்த பல்லையும் நொண்டுகிற காலையும் நம்புவதற்குச் சமம்.

20 சோகத்தில் வாடுகிறவனுக்கு முன்பாகப் பாட்டுப் பாடுகிறவன்,+

குளிர் காலத்தில் உடையைக் கழற்றுகிறவன் போலவும்,

சோடா உப்பின் மேல் ஊற்றப்படுகிற காடியைப் போலவும் இருக்கிறான்.

21 உன் எதிரி பசியாக இருந்தால் அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு.

அவன் தாகமாக இருந்தால் அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடு.+

22 இப்படிச் செய்யும்போது, நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பாய்.*+

யெகோவா உனக்குப் பலன் கொடுப்பார்.

23 வடக்கிலிருந்து வீசுகிற காற்று கனமழையை வர வைக்கும்.

வம்பளக்கிற வாய் மற்றவர்களுக்குக் கோபத்தை வர வைக்கும்.+

24 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,

கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+

25 தூர தேசத்திலிருந்து வருகிற நல்ல செய்தி,

தாகத்தில் தவிப்பவனுக்குக் கிடைக்கிற குளிர்ந்த தண்ணீரைப் போல் இருக்கிறது.+

26 பொல்லாதவனுக்கு இணங்கிப்போகிற நீதிமான்,

கலங்கிய நீரூற்று போலவும் பாழடைந்த கிணறு போலவும் இருக்கிறான்.

27 அளவுக்கு அதிகமாகத் தேன் சாப்பிடுவது நல்லதல்ல.+

தனக்குத் தானே புகழ் தேடுவதும் புகழல்ல.+

28 கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன்,

மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்