உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 26
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள், எசேக்கியா ராஜாவின் ஆட்கள் தொகுத்தவை (25:1–29:27)

நீதிமொழிகள் 26:1

இணைவசனங்கள்

  • +நீதி 30:21, 22; பிர 10:7

நீதிமொழிகள் 26:2

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “காரணமில்லாமல் விடுகிற சாபம் பலிக்காது.”

நீதிமொழிகள் 26:3

இணைவசனங்கள்

  • +சங் 32:9
  • +நீதி 27:22

நீதிமொழிகள் 26:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நீ ஏன் அவனுக்குச் சமமாய் ஆக வேண்டும்?”

நீதிமொழிகள் 26:5

இணைவசனங்கள்

  • +மத் 21:23-25

நீதிமொழிகள் 26:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/1987, பக். 28

நீதிமொழிகள் 26:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தள்ளாடுகிற காலும்.”

இணைவசனங்கள்

  • +நீதி 17:7

நீதிமொழிகள் 26:8

இணைவசனங்கள்

  • +நீதி 19:10; 26:1

நீதிமொழிகள் 26:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எல்லாரையும்.”

நீதிமொழிகள் 26:11

இணைவசனங்கள்

  • +2பே 2:22

நீதிமொழிகள் 26:12

இணைவசனங்கள்

  • +நீதி 12:15; 1கொ 3:18; 8:2

நீதிமொழிகள் 26:13

இணைவசனங்கள்

  • +நீதி 22:13

நீதிமொழிகள் 26:14

அடிக்குறிப்புகள்

  • *

    கீல் என்பது கதவைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகப் பட்டை.

இணைவசனங்கள்

  • +நீதி 6:9; 19:15; 24:33, 34

நீதிமொழிகள் 26:15

இணைவசனங்கள்

  • +நீதி 19:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/1997, பக். 30-31

நீதிமொழிகள் 26:17

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “தேவையில்லாமல் தலையிடுவதும்.”

இணைவசனங்கள்

  • +1தெ 4:11; 1பே 4:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    போதகர், பக். 105-106

நீதிமொழிகள் 26:18

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உயிரைப் பறிக்கும்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    10/8/1987, பக். 17

நீதிமொழிகள் 26:19

இணைவசனங்கள்

  • +நீதி 15:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    10/8/1987, பக். 17

    2/8/1987, பக். 25-26

நீதிமொழிகள் 26:20

இணைவசனங்கள்

  • +நீதி 22:10; யாக் 3:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 51-52

நீதிமொழிகள் 26:21

இணைவசனங்கள்

  • +நீதி 3:30; 16:28; 17:14

நீதிமொழிகள் 26:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பேராசையோடு விழுங்குகிற உணவு.”

இணைவசனங்கள்

  • +நீதி 18:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1991, பக். 26

நீதிமொழிகள் 26:23

இணைவசனங்கள்

  • +2சா 20:9, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2003, பக். 28

நீதிமொழிகள் 26:25

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “ஏனென்றால், அவனுடைய உள்ளம் முழுவதும் அருவருப்பானது.”

நீதிமொழிகள் 26:27

இணைவசனங்கள்

  • +எஸ்தர் 7:10; சங் 9:15; நீதி 28:10; பிர 10:8

நீதிமொழிகள் 26:28

இணைவசனங்கள்

  • +நீதி 29:5

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 26:1நீதி 30:21, 22; பிர 10:7
நீதி. 26:3சங் 32:9
நீதி. 26:3நீதி 27:22
நீதி. 26:5மத் 21:23-25
நீதி. 26:7நீதி 17:7
நீதி. 26:8நீதி 19:10; 26:1
நீதி. 26:112பே 2:22
நீதி. 26:12நீதி 12:15; 1கொ 3:18; 8:2
நீதி. 26:13நீதி 22:13
நீதி. 26:14நீதி 6:9; 19:15; 24:33, 34
நீதி. 26:15நீதி 19:24
நீதி. 26:171தெ 4:11; 1பே 4:15
நீதி. 26:19நீதி 15:21
நீதி. 26:20நீதி 22:10; யாக் 3:6
நீதி. 26:21நீதி 3:30; 16:28; 17:14
நீதி. 26:22நீதி 18:8
நீதி. 26:232சா 20:9, 10
நீதி. 26:27எஸ்தர் 7:10; சங் 9:15; நீதி 28:10; பிர 10:8
நீதி. 26:28நீதி 29:5
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 26:1-28

நீதிமொழிகள்

26 கோடைக் காலத்துக்குப் பனியும், அறுவடைக் காலத்துக்கு மழையும் எப்படிப் பொருந்தாதோ,

அப்படித்தான் முட்டாளுக்கும் மதிப்பு மரியாதை பொருந்தாது.+

 2 காரணமில்லாமல் பறவை தப்பிக்காது, தகைவிலான் குருவியும் பறந்து போகாது.

அதேபோல், காரணமில்லாமல் எந்தச் சாபமும் வராது.*

 3 குதிரைக்குச் சாட்டையும் கழுதைக்குக் கடிவாளமும் தேவை.+

அதேபோல், முட்டாளின் முதுகுக்குப் பிரம்படி தேவை.+

 4 முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்லாதே.

நீ ஏன் அவன் அளவுக்கு இறங்கி வர வேண்டும்?*

 5 முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்.

அவன் ஏன் தன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ள வேண்டும்?+

 6 முட்டாளை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைப்பதும்,

தன் காலையே முடமாக்கிக்கொண்டு தனக்கே கேடு செய்துகொள்வதும் ஒன்றுதான்.

 7 முட்டாள் சொல்கிற பழமொழியும்+

கால் ஊனமானவனின் நொண்டிக் காலும்* ஒன்றுதான்.

 8 கவணில் கல்லைக் கட்டுவதும்

முட்டாளைப் புகழ்வதும் ஒன்றுதான்.+

 9 முட்டாள் சொல்கிற பழமொழியும்

குடிகாரன் கையில் இருக்கிற முட்செடியும் ஒன்றுதான்.

10 முட்டாளையோ முன்பின் தெரியாதவனையோ கூலிக்கு வைக்கிறவனும்,

கண்மூடித்தனமாக அம்பு எறிந்து மற்றவர்களை* காயப்படுத்துகிறவனும் ஒன்றுதான்.

11 நாய் தான் கக்கியதையே திரும்பப் போய்த் தின்பதுபோல்,

முட்டாளும் தான் செய்த முட்டாள்தனத்தையே திரும்பவும் செய்கிறான்.+

12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+

அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

13 “வெளியில் ஒரு இளம் சிங்கம் சுற்றுகிறது,

தெருவில் ஒரு பெரிய சிங்கம் அலைகிறது!” என்று சோம்பேறி சொல்கிறான்.+

14 கீலில்* கதவு ஆடிக்கொண்டே இருப்பதுபோல்,

சோம்பேறியும் கட்டிலில் புரண்டுகொண்டே இருப்பான்.+

15 சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,

ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+

16 புத்திசாலித்தனமாகப் பதில் சொல்கிற ஏழு பேரைவிட,

தானே ஞானி என்று சோம்பேறி நினைத்துக்கொள்கிறான்.

17 வழியிலே யாரோ சண்டை போடுவதைப் பார்த்து ஆவேசப்படுவதும்,*

நாயின் காதுகளைப் பிடிப்பதும் ஒன்றுதான்.+

18 தீ பறக்கும் ஆயுதங்களையும் கொடிய* அம்புகளையும் எறிகிற பைத்தியக்காரனைப் போலத்தான்,

19 அடுத்தவனை ஏமாற்றிவிட்டு, “விளையாட்டுக்காகச் செய்தேன்!” என்று சொல்கிறவனும் இருக்கிறான்.+

20 விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.

இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் இல்லையென்றால் சண்டை சச்சரவுகள் அடங்கிவிடும்.+

21 கரியும் விறகும் நெருப்பை மூட்டிவிடுவதுபோல்,

சண்டைக்காரன் வாக்குவாதங்களை மூட்டிவிடுகிறான்.+

22 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.

அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+

23 உள்ளத்தில் பகையும் உதட்டில் பாசமும் காட்டுகிறவன்

வெள்ளி முலாம் பூசப்பட்ட மண் ஓடுபோல் இருக்கிறான்.+

24 ஒருவன் இனிக்க இனிக்கப் பேசி தன் பகையை மூடி மறைக்கிறான்.

ஆனால், உள்ளத்தில் வஞ்சனையை வளர்க்கிறான்.

25 அவன் தேனொழுகப் பேசினாலும் நம்பிவிடாதே.

ஏனென்றால், அருவருப்பான ஏழு விஷயங்கள் அவன் உள்ளத்தில் இருக்கின்றன.*

26 என்னதான் நயவஞ்சகமாக அவன் தன் பகையை மறைத்தாலும்,

அவனுடைய கெட்ட எண்ணம் சபையில் வெட்டவெளிச்சமாகும்.

27 ஒருவன் குழி வெட்டினால் அவனே அந்தக் குழியில் விழுவான்.

ஒருவன் கல்லை உருட்டிவிட்டால் அவன் மேலேயே அது உருண்டு விழும்.+

28 பொய் பேசுகிற நாவு, தான் புண்படுத்தியவர்களை வெறுக்கிறது.

பொய்யாகப் புகழ்கிற வாய், அழிவை உண்டாக்குகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்