தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 26, 2015-ல் ஆரம்பிக்கும் வாரத்தில், இந்தக் கேள்விகளை ஊழியப் பள்ளியில் கலந்து பேசுவார்கள்.
யெகோவாவுக்கு ஆர்வத்தோடும் முழு மனதோடும் சேவை செய்ய வேண்டும் என்பதை 2 இராஜாக்கள் 13:18, 19-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்? [செப். 7, காவற்கோபுரம் 10 4/15 பக். 26 பாரா 11]
யோனா தீர்க்கதரிசியாக இருந்தபோது இஸ்ரவேலை ஆட்சி செய்தது யார்? 2 இராஜாக்கள் 14:23-25-லிருந்து யோனா செய்த சேவையை பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? [செப். 7, காவற்கோபுரம் 09 4/1 பக். 28 பாரா 4]
ஏசாயா மூலமாக யெகோவா கொடுத்த வாக்குறுதியை ஆகாஸ் நம்பினாரா? முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது நாம் என்ன கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்? (2 இரா. 16:7) [செப். 14, காவற்கோபுரம் 13 11/15 பக். 17 பாரா 5]
இன்று கடவுளுடைய மக்களை எதிர்ப்பவர்கள் எப்படி ரப்சாக்கேயை போல நம்மை ஏமாற்றுகிறார்கள்? இந்த விஷயத்தில் நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம்? (2 இரா. 18:22, 25) [செப். 14, காவற்கோபுரம் 10 7/15 பக். 13 பாரா. 3-4]
மனத்தாழ்மையோடு இருக்கிறவர் பைபிள் படிக்கும்போது என்ன செய்வார்? இந்த விஷயத்தில் யோசியா ராஜாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 இரா. 22:19, 20) [செப். 21, காவற்கோபுரம் 00 3/1 பக். 30 பாரா 2]
2 இராஜாக்கள் 24:3, 4-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? [செப். 28, காவற்கோபுரம் 05 8/1 பக். 12 பாரா 2]
என்ன மூன்று விஷயங்களுக்காக யாபேஸ் ஜெபம் செய்தார்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 நா. 4:9, 10) [அக். 5, காவற்கோபுரம் 11 4/1 பக். 23]
நம் விசுவாசத்தை உறுதியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று 1 நாளாகமம் 5:18-22 சொல்லுகிறது? [அக். 12, காவற்கோபுரம் 05 10/1 பக். 9 பாரா 8]
இரத்தத்தைப் பற்றிய யெகோவாவின் சட்டத்தின் ஆழமான கருத்தை தாவீது புரிந்து நடந்துகொண்டார் என்று எப்படி சொல்லலாம்? இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 நா. 11:17-19) [அக். 19, காவற்கோபுரம் 12 11/15 பக். 6-7 பாரா. 12-14]
உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வருவதற்கு முன்பு தாவீது என்ன செய்திருக்க வேண்டும், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 நா. 15:13) [அக். 26, காவற்கோபுரம் 03 5/1 பக். 10-11 பாரா. 11-13]