அக்டோபர் 26-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
அக்டோபர் 26-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 37; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 78 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 12-15 (8 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “வேரூன்றியவர்களாகவும்,” “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” இருங்கள்.—கொலோ. 2:6, 7.
10 நிமி: நவம்பர் மாதத்தில் ஊழியத்தில் என்ன கொடுக்கலாம். கலந்து பேசுங்கள். துண்டுப்பிரதிகளை, நற்செய்தி சிற்றேட்டை அல்லது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஊழியத்தில் கொடுக்க உற்சாகப்படுத்துங்கள். ஏப்ரல் 2014 நம் ராஜ்ய ஊழியத்தில், “புத்தம்புதிய வடிவத்தில் புதிய துண்டுப்பிரதிகள்!” என்ற கட்டுரையிலிருந்து குறிப்புகளை சொல்லுங்கள். உங்கள் சபை ஊழியம் செய்யும் இடத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “பைபிள் உங்கள் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்கிறீர்களா?” பேச்சு. அறிமுக குறிப்புகளை சுருக்கமாக சொன்ன பிறகு “யெகோவா திருத்தும்போது சோர்ந்துவிடாதீர்கள்!” என்ற ஆடியோ நாடகத்தை போடுங்கள். பைபிளை நன்றாக படித்து, அதைப் பற்றி யோசித்துப் பார்க்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். அப்போதுதான், அதை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்று கற்றுக்கொள்ள முடியும். jw.org-ல் உள்ள இதுபோன்ற ஆடியோ நாடகங்களை கேட்கச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 113; ஜெபம்