பைபிள் உங்கள் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்கிறீர்களா?
தினமும் பைபிளை படித்தால், “வேரூன்றியவர்களாகவும்” “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” இருப்போம். (கொலோ. 2:6, 7) பைபிளை, வெறுமென மேலோட்டமாக படிக்காமல் நன்றாக படித்து, அதைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க முடியும். (எபி. 4:12; யாக். 1:22-25) பைபிளை எப்படி படிக்க வேண்டும் என்பதை யோசுவா 1:8 சொல்கிறது: (1) “இரவும் பகலும்” பைபிளை படிக்க வேண்டும். (2) “தாழ்ந்த குரலில்” (NW), அதாவது நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டும். அப்போதுதான், நடந்த சம்பவங்களை பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க முடியும், நாம் அந்த இடத்தில் இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்க முடியும். (3) ‘அதில் எழுதியிருக்கிற படியெல்லாம்’ நாம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவோம், ‘புத்தியுள்ள’ நபர்களாக நடந்துகொள்வோம்.