பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 பேதுரு 3-5
“எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது”
இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய உபத்திரவத்தை நாம் சந்திக்கப் போகிறோம். நாம் இப்போதும் எதிர்காலத்திலும் எப்படி கடவுளுக்கு உண்மையாக இருக்கலாம்?
தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; எல்லா விதமான ஜெபங்களையும் செய்யுங்கள்
சகோதர சகோதரிகள்மேல் ஆழ்ந்த அன்பைக் காட்டுங்கள். அவர்களோடு இருக்கிற நட்பைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள்
அன்பாக உபசரியுங்கள்
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய சபையில் இருக்கிறவர்களிடமும் உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளிடமும் ஆழ்ந்த அன்பை எப்படிக் காட்டலாம்? அவர்களை எப்படி அன்பாக உபசரிக்கலாம்?