கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கற்புள்ள நடத்தையாலும் ஆழ்ந்த மரியாதையாலும் இதயங்களை வெல்லுங்கள்
யெகோவாவின் சாட்சியாக மாறிய மனைவிகளின் நல்ல நடத்தையைப் பார்த்தே பல கணவர்கள் சத்தியத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இதற்காக ஒரு மனைவி பல வருஷங்கள் கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருக்கலாம். (1பே 2:21-23; 3:1, 2) நீங்கள் அநியாயமாகக் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து தீமையை நன்மையால் வெல்லுங்கள். (ரோ 12:21) நீங்கள் சொல்வதைக் கேட்டு மாறாத கணவர், உங்கள் நல்ல நடத்தையைப் பார்த்து மாறலாம்.
உங்கள் கணவரின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். (பிலி 2:3, 4) அவரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், கரிசனை காட்டுங்கள். அவருக்கு மரியாதை கொடுங்கள், உங்கள் பொறுப்புகளை முடிந்தவரை நன்றாகச் செய்யுங்கள். அவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். (யாக் 1:19) பொறுமையாக இருங்கள். அவர்மீது அன்பு வைத்திருப்பதை அவரிடம் சொல்லுங்கள். பதிலுக்கு உங்கள் கணவர் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் யெகோவா மதிக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.—1பே 2:19, 20.
கவலைகளைச் சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
கல்யாணமான புதிதில் கிரேஸ் லீயின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவரை எது தூண்டியது?
ஞானஸ்நானம் எடுத்த பிறகு, பிரச்சினைகள் வந்தபோது சகோதரி கிரேஸ் லீ எப்படிச் சகித்திருந்தார்?
தன்னுடைய கணவருக்காக சகோதரி கிரேஸ் லீ என்ன ஜெபம் செய்தார்?
இந்தச் சகோதரியின் கற்புள்ள நடத்தையாலும், அவர் காட்டிய ஆழ்ந்த மரியாதையாலும் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?
கற்புள்ள நடத்தைக்கும் ஆழ்ந்த மரியாதைக்கும் அதிக சக்தி இருக்கிறது!