கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மற்றவர்களுடைய வீட்டு வாசலில் நிற்கும்போது ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்
ஒருவரின் வீட்டு வாசலில் நிற்கும்போது அந்த வீட்டில் இருப்பவர் நம்மை ஜன்னலிலிருந்து எட்டிப்பார்க்கலாம். நாம் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதைக் கதவுக்கு பின்னால் இருந்து கவனிக்கலாம். இதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் ‘இந்த உலகத்துக்கு காட்சிப்பொருள்’ போல் இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (1கொ 4:9) நாம் சந்திக்கும் வீடுகளில் செக்யூரிட்டி கேமராக்கள், மைக்ரோ ஃபோன்கள் இருக்கலாம். அதனால், நாம் செய்வதை... சொல்வதை... அவர்களால் பார்க்கவும் கேட்கவும் ரெக்கார்ட் செய்யவும் முடியும். அப்படியென்றால் மற்றவர்களுடைய வீட்டு வாசலில் நிற்கும்போது நாம் ஒழுங்காக நடந்துகொள்வது ரொம்ப முக்கியம். அதற்கு உதவும் சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.—2கொ 6:3.
உங்கள் நடத்தை (பிலி 1:27):
மற்றவர்கள் வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பது மரியாதையாக இருக்காது. அப்படிச் செய்வதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். அதனால் அப்படிச் செய்யாதீர்கள். அதோடு, மற்றவர்களுடைய வீட்டு வாசலில் நின்றுகொண்டு எதையாவது சாப்பிடுவது, குடிப்பது, ஃபோன் பேசுவது, மெசேஜ் அனுப்புவது போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள்
உங்கள் பேச்சு (எபே 4:29):
ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டு, அந்த வீட்டில் இருப்பவருடைய காதில் விழக் கூடாத விஷயங்களைப் பேசாதீர்கள். அந்தச் சமயத்தில் சில சகோதர சகோதரிகள், எதுவும் பேசாமல் இருக்க விரும்புகிறார்கள். அந்த வீட்டில் எதைப் பற்றி பேசலாம் என்று யோசிக்கிறார்கள்