ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... புதியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்
ஏன் முக்கியம்: இயேசு “கட்டளையிட்ட எல்லாவற்றையும்” செய்ய புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக, மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். (மத். 28:19, 20) புதியவர்கள் பைபிளை படிக்கும்போதே சொந்தக்காரர்களிடமும் நண்பர்களிடமும் பைபிளைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். முன்னேற்றங்களை செய்து ஊழியப் பள்ளியிலும் பேச்சு கொடுக்கிறார்கள். போகப் போக, பைபிளை பற்றி எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதனால், சபையோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆசைப்படுகிறார்கள். (ரோ. 10:13, 14) ஊழியத்துக்குப் போக ஆரம்பித்ததும் அவர்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து முன்னேற முடியும், ஊழியத்தில் திறமையாகவும் தைரியமாகவும் பேச முடியும்.—லூக். 6:40.
இந்த மாதம் இதை செய்து பாருங்கள்:
உங்களிடம் பைபிள் படிப்பவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள். மறுசந்திப்பிற்கும் பைபிள் படிப்பிற்கும் அழைத்துச் செல்லுங்கள். அல்லது சபையில் இருக்கும் புதியவர்களை அழைத்துச் செல்லுங்கள்.