ஆகஸ்ட் 10-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 10-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 69; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 63 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 21-22 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 22:13–23 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளின் நண்பராவது எப்படி?—அறிமுகம் பக். 28 பாரா 1–4 (5 நிமி.)
எண் 3: தெலீலாள்—தலைப்பு: பண ஆசை துரோகம் செய்ய தூண்டும்—நியா. 16:1-21 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நானும் என் வீட்டாரும், யெகோவாவையே வணங்குவோம்.”—யோசு. 24:15, NW.
10 நிமி: “நானும் என் வீட்டாரும், யெகோவாவையே வணங்குவோம்.” இந்த மாதத்திற்கான வசனத்தைப் பற்றிய பேச்சு. உபாகமம் 6:6, 7; யோசுவா 24:15; நீதிமொழிகள் 22:6-ஐ வாசித்து, அதை எப்படி கடைப்பிடிக்கலாம் என்று சொல்லுங்கள். மனைவியும் பிள்ளைகளும் யெகோவாவுடைய நண்பர்களாக இருப்பதற்கு குடும்பத் தலைவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும். குடும்பங்களுக்கு உதவி செய்ய அமைப்பு என்னவெல்லாம் தயாரித்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். இந்த மாத ஊழியக் கூட்டத்தில் இருக்கும் பகுதிகள், இந்த மாதத்திற்கான வசனத்தோடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... புதியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.” கலந்து பேசுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும்போது இந்த கட்டுரையில் இருக்கும் ஆலோசனைகளை எப்படி பயன்படுத்தலாம் என்று கேளுங்கள். ஊழியத்தில் பார்ப்பவர்களிடம் என்ன பேசலாம் என்று அப்பா தன் மகனோடு அல்லது மகளோடு தயாரிப்பது போல் ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 93; ஜெபம்