ஆகஸ்ட் 17-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 17-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 126; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 64 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 1-4 (8 நிமி.)
எண் 1: 2 இராஜாக்கள் 1:11-18 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: தீனாள்—தலைப்பு: கெட்டவர்களோடு நட்பு வைத்துக்கொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்—ஆதி. 34:1-31 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய நண்பராக இருக்க என்ன செய்ய வேண்டும்?—அறிமுகம் பக். 28 பாரா. 5—பக். 29 பாரா. 3 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நானும் என் வீட்டாரும், யெகோவாவையே வணங்குவோம்.”—யோசு. 24:15, NW.
15 நிமி: கூட்டங்களுக்கு தவறாமல் போகிறீர்களா? எபிரெயர் 10:24, 25-ஐ பற்றிய பேச்சு. பிள்ளைகள் இருக்கும் ஒரு குடும்பத்தை பேட்டி எடுங்கள். எல்லாரும் தவறாமல் கூட்டங்களுக்கு போக குடும்ப தலைவர் என்ன முயற்சிகளை எடுக்கிறார்? அதற்கு ஒவ்வொருவரும் எப்படி ஒத்துழைக்கிறார்கள்? எப்போது தயாரிக்கிறார்கள்? கூட்டங்களுக்கு போவதற்கு என்ன தியாகங்களை செய்கிறார்கள்? தொடர்ந்து கூட்டங்களுக்கு வருவதற்கும் பதில் சொல்லவும் எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: நேரத்தைக் கடைப்பிடிப்பது ஏன் முக்கியம்? ஆகஸ்ட் 15, 2010 காவற்கோபுரம் பக்கங்கள் 25-28-ல் இருக்கும் விஷயங்களை கலந்து பேசுங்கள். “நேரத்தைக் கடைப்பிடிப்பதில் வெற்றி சிறக்க” என்ற துணை தலைப்பை கலந்துபேசும்போது நேரம் தவறாமல் இருக்க எது உதவி செய்தது என்று கேளுங்கள்.
பாட்டு 44; ஜெபம்