ஏன் உடனே ஊழியத்திற்கு போக வேண்டும்?
நம் எல்லாருக்குமே சகோதர சகோதரிகளோடு பேசுவது ரொம்ப பிடிக்கும். சில சமயம், ஊழியக் கூட்டம் முடிந்த பிறகும் நாம் ரொம்ப நேரம் நின்று பேசிக்கொண்டு இருக்கலாம். இப்படி செய்தால், நம்மால் கொஞ்ச நேரம்தான் ஊழியம் செய்ய முடியும். அதனால், யாருடன் ஊழியம் செய்ய வேண்டும் என்று சகோதரர்கள் சொன்ன உடனேயே நாம் ஊழியத்திற்கு போய்விட வேண்டும். நாம் அவசர உணர்வோடு ஊழியம் செய்ய வேண்டும். (2 தீ. 4:2) ஊழியம் செய்யும்போது, கூட இருக்கிற சகோதர சகோதரிகளிடம் ஊழியத்தை பற்றி பேசுவதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும். நாம் நேரத்தை வீணடிக்காமல், சுறுசுறுப்பாக ஊழியம் செய்வதை பார்த்து யெகோவாவும் இயேசுவும் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.—ரோ. 12:11.