ஜனவரி 26-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜனவரி 26-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 104; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 32 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 5-7 (8 நிமி.)
எண் 1: நியாயாதிபதிகள் 7:12-25 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: அம்னோன்—தலைப்பு: கெட்ட எண்ணத்தோடு காதலிக்காதீர்கள்!—2 சா. 13:1-29 (5 நிமி.)
எண் 3: என்னென்ன வழிகளில் யெகோவாவை பற்றி தெரிந்துகொள்ளலாம்?—அறிமுகம் பக். 5 பாரா. 1-4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘மனத்தாழ்மையோடு எஜமானருக்கு ஊழியம் செய்யுங்க.’—அப். 20:19.
15 நிமி: ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கொடுக்க வேண்டிய பிரசுரங்கள். கலந்தாலோசிப்பு. நற்செய்தி சிறுபுத்தகத்தை ஊழியத்தில் கொடுத்ததால் கிடைத்த நல்ல அனுபவங்களை சொல்லச் சொல்லுங்கள். அந்த சிறுபுத்தகத்தை எப்படி கொடுப்பது என்று ஒரு நடிப்பு இருக்கும். “ஏன் உடனே ஊழியத்திற்கு போக வேண்டும்?” என்ற கட்டுரையை கடைசியாக கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: எஜமானருக்கு ஊழியம் செய்யும் மூப்பர்கள்—காவற்கோபுரம் நடத்துபவர். காவற்கோபுரம் நடத்துபவரை பேட்டி எடுங்கள். இந்தக் கேள்விகளை அவரிடம் கேளுங்கள்: ‘காவற்கோபுரம் நடத்துவதற்காக நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? அதற்கு நீங்கள் எப்படி தயாரிக்கிறீர்கள்? கை தூக்குகிற எல்லாரிடமும் பதில் கேட்பது ஏன் கஷ்டம்? காவற்கோபுரம் படிப்பவர், பதில் சொல்பவர்கள், மைக் பிடிப்பவர்கள் எல்லாரும் எப்படி உதவியாக இருக்கிறார்கள்?’
பாட்டு 135; ஜெபம்