இதோ சில அணுகுமுறைகள்
ஜனவரி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க...
“இந்தப் பகுதியில் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசினோம். பாசமானவர்களை மரணத்தில் பறிகொடுப்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம் என்று நிறையப் பேர் சொன்னார்கள். நீங்களும் இதை ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இது சம்பந்தமாக சில ஆறுதலான விஷயங்களை உங்களுக்குக் காட்டட்டுமா?” வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால், ஜனவரி-மார்ச் காவற்கோபுரத்தின் கடைசி பக்கத்தைக் காட்டி, முதல் கேள்வியைக் கலந்தாலோசியுங்கள். ஒரு வசனத்தையாவது வாசித்து விளக்குங்கள். பின்பு, பத்திரிகைகளை அளித்துவிட்டு அடுத்த கேள்வியை அடுத்த முறை கலந்தாலோசிப்பதாகச் சொல்லுங்கள்.
காவற்கோபுரம் ஜனவரி – மார்ச்
“இன்று வாழ்க்கையே படுபிஸியாக இருப்பதால் கடவுளைப் பற்றிச் சிந்திக்க நிறைய பேருக்கு நேரமே இல்லை. நம் வாழ்க்கையில் கடவுளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] உண்மையான சந்தோஷத்தைப் பெற கடவுளுடைய நெறிகள் நமக்கு அவசியமென விளக்கும் பிரபலமான வசனம் ஒன்றை உங்களுக்குக் காட்டட்டுமா? [வீட்டுக்காரர் ஒத்துக்கொண்டால் மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள்.] கடவுள் நமக்கு ஏன் முக்கியமானவர் என்பதற்கான மூன்று காரணங்களை இந்தப் பத்திரிகை விளக்குகிறது.”