நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—நியாயங்கள் புத்தகத்தை முழுமையாகப் பயன்படுத்துவன் மூலம்
1 “என்னிடம் நியாயங்கள் புத்தகம் இருந்திருந்தால் ஆ எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!” வெளி ஊழியத்தில் அல்லது வேலை செய்யுமிடத்திலோ பள்ளிக்கூடத்திலோ பைபிளை சார்ந்த ஒரு கேள்வியை எதிர்ப்பட்டு அதற்குப் பதிலளிக்க பிரயாசப்படும் சமயத்தில் இந்த எண்ணம் உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறதா? நியாயங்கள் புத்தகத்தின் அம்சங்களை நன்கு அறிந்திருந்தவர்களும் அதை தங்களோடு எடுத்து செல்பவர்களும் சரியான நேரத்தில் அதன் உதவியை நாடக்கூடும் என்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். உங்களைப் பற்றியது என்ன?
2 நியாயங்கள் புத்தகம் 1985-ம் ஆண்டு வெளியிடப்பட்டது முதற்கொண்டு, அதன் உபயோகத்தைக் குறித்து நம் ராஜ்ய ஊழியம் ஏறத்தாழ அதன் ஒவ்வொரு பிரதியும் சிறந்த ஆலோசனைகளைக் கொடுத்து வந்திருக்கிறது. கடந்த ஊழிய கூட்டத்தின் பகுதிகளில் நியாயங்கள் புத்தகத்தின் பல்வேறு உபயோகங்களையும் மதிப்பையும் உயர்த்திக் காண்பித்த ஒரு சில நடிப்புகளை நீங்கள் நினைவுகூர முடிகிறதா? வெளி ஊழியத்திற்காக தயார் செய்ய தங்கள் குடும்பத்தினருக்கு உதவி செய்ய பெற்றோர்கள் அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம். உலகத்தாரால் கவர்ந்திழுக்கப்படக்கூடிய ஒரு வாலிபனுக்கு உதவி செய்கையில் மூப்பர் அதை எப்படிப் பயன்படுத்தலாம் மற்றும் உற்சாகம் தேவைப்படக்கூடியவருக்கு உதவி செய்கையில் பலமுள்ள பிரஸ்தாபி அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் காண்பிக்கக்கூடிய நடிப்புகள் இருந்திருக்கின்றன. (நம் ராஜ்ய ஊழியம், 8/86 பக். 2) ஒரு கட்டுரை, பள்ளிக்காக ஆவிக்குரிய தயாரிப்பு செய்கையில் நியாயங்கள் புத்தகத்தை உபயோகிக்க இளைஞரை உற்சாகப்படுத்தியது. (நம் ராஜ்ய ஊழியம், 9/87 பக். 2) நம்முடைய வெளி ஊழியத்தின் ஒவ்வொரு அம்சங்களிலும் அதை எவ்வாறு பயன்படுத்துவது மாறுபடும் சூழ்நிலைகளுக்கு அதன் உபயோகத்தை அதற்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொள்வது எப்படி என்பதன் பேரில் மற்ற கட்டுரைகள் நடைமுறையான ஆலோசனைகளை வழங்கிற்று.—நம் ராஜ்ய ஊழியம் 5/86 பக். 3; நம் ராஜ்ய ஊழியம் 1/88 பக். 4.
அதை நாம் முழுமையாக பயன்படுத்துகிறோமா?
3 நியாயங்கள் புத்தகத்தை நாம் திறம்பட்ட விதத்தில் உபயோகிக்க வேண்டுமானால் முதலில் நாம் அதன் பொருளடக்கங்களை நன்கு அறிந்திருக்கவேண்டும். அதன் பின்பு அதனுடைய ஆலோசனைகளை உபயோகிக்க முயற்சி எடுக்கவேண்டும். சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் முன்னுரைகள் ஒன்றை ஒரு புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுடன் பொருத்திப் பார்க்க முயற்சி செய்திருக்கிறீர்களா? நியாயங்கள் புத்தகத்தில் பக்கம் 12-ல் “ராஜ்யம்” என்று தலைப்பிட்டிருக்கும் இரண்டாவது சிபாரிசு குறிப்பை நீங்கள் பயன்படுத்தி வெளிப்படுத்துதல் 21:3-5-ன் பேரில் சுருக்கமான குறிப்பை சொல்லுவீர்களானால் அதன் பின்பு திறமையாக நமது தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளான “நாம் யாரைத் தொழுது கொள்ளுவோம்?” என்ற பொருளோடு நீங்கள் இணைக்கலாம்.
4 “உரையாடலை நிறுத்துபவை” என்ற பிரிவிலுள்ள தகவலை பயன்படுத்துவதன் மூலம் ஆரம்ப எதிர்ப்புகளை மேற்கொள்ளுவதில் நாம் அதிக வெற்றியுள்ளவர்களாக இருக்கலாம். உரையாடலை நிறுத்தும் ஆட்களை சந்தித்தால் நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கலாம் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் சிந்தித்துப் பார்க்கக்கூடாது. உதாரணமாக, “எனக்கு அதில் ஆர்வம் இல்லை,” என்று ஒருவர் சொன்னால் பக்கம் 16-ல் உள்ள நான்காவது ஆலோசனையை நீங்கள் பயன்படுத்தலாம். வெளிப்படுத்துதல் 14:7-க்குத் திருப்பி மெய் கடவுளை அடையாளங் கண்டு கொண்டு அவரை வணங்க வேண்டிய அவசியத்தை இந்த வேதவசனம் எனக்கு உணர்த்தியது என்று சுட்டிக் காட்டுங்கள். முயற்சி செய்துபாருங்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் நல்ல வெற்றியடைந்திருக்கிறார்கள்.
5 மெய்யாகவே நியாயங்கள் புத்தகத்தைப் பயன்படுத்துவதிலிருந்து வரக்கூடிய ஆசீர்வாதங்கள் அநேகம். நம்முடைய குறிப்பிட்ட சில வீட்டுக்காரர்களின் உள்ளத்தை தொடக்கூடிய புத்தம்புதிய அணுகுமுறைகளையும் முன்னுரைகளையும் தயார் செய்வதற்கு நாம் நேரத்தை எடுத்துக் கொள்வோமானால், வெளி ஊழியத்துக்குச் செல்ல நாம் அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியத்திற்கும்கூட செல்ல நாம் அதிக உற்சாகமுள்ளவர்களாயிருப்போம். (நம் ராஜ்ய ஊழியம், 4/86 பக். 4) நியாயங்கள் புத்தகத்தை அதிக பலன் தரக்கூடிய விதத்தில் பயன்படுத்துவது எப்படி என்பதன் பேரில் ஆலோசனைகளை வழங்கிய கடந்த கால கட்டுரைகளை விமர்சித்துப் பார்க்க ஏன் நேரமெடுத்துக் கொள்ளக்கூடாது?—நம் ராஜ்ய ஊழியம் 4/87 பக். 4; நம் ராஜ்ய ஊழியம் 11/88 பக். 8.
6 மற்றவர்கள் “தேவனுடைய மகத்துவங்களைக்” காண்பதற்கு உதவி செய்ய நீங்கள் நாடுகையில் உங்களுடைய முழு முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பாராக! (அப். 2:11) அப்பொழுது அவர்கள் தாவீது சொன்னது போல யெகோவாவிடம் பின்வருமாறு சொல்வதற்குச் சேர்ந்து கொள்ளக்கூடும்: “தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்!”—சங். 139:17.