தேவராஜ்ய செய்திகள்
◆ ஈக்வேடார் நவம்பர் மாதத்தில் 13,576 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. ஓராண்டிற்கு முன்பு இதே மாதத்திலிருந்ததற்கு மேலாக 10 சதவிகித அதிகரிப்பு. 26,463 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டதால் 13 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டது.
◆ ஃபிரான்ஸ் நவம்பர் மாதத்தின்போது 1,05,307 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை எட்டியது. அந்த மாதத்தின்போது சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 12.3 மணிநேரங்களைச் செலவிட்டார்கள்.
◆ ஃபிரெஞ்சு கையானா 531 பிரஸ்தாபிகளின் உச்சநிலையோடு அவர்களுடைய விசேஷ அசெம்பளி நாள் தொடரில் 1,230 பேர் ஆஜராக இருந்தனர், 18 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
◆ குவாம் நவம்பர் மாதத்தில் இதுவரையில்லாத 323 பிரஸ்தாபிகளின் உச்சநிலையை எட்டியதில் மகிழ்ச்சியடைகிறது. அவர்களுடைய சமீப வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரலானது 518 பேர் ஆஜராக இருந்த புதிய உச்சநிலையையும் அத்துடன் 9 பேர் முழுக்காட்டப்பட்டதையும் கண்டது.
◆ மடகாஸ்கர் அக்டோபர் மாதத்தில் 3,069 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை கொண்டிருந்தது. இது 10 சதவிகித அதிகரிப்பு.