உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 86
  • கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்வாரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்வாரா?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • அப்படியென்றால், கடவுள் மாறுவதில்லை என்று பைபிள் ஏன் சொல்கிறது?
  • மனிதர்களைப் படைத்ததற்காக கடவுள் வருத்தப்படுகிறாரா?
  • உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்களா?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • கடந்த காலத்திலிருந்து ஓர் எச்சரிப்பு
    கடவுளுடைய நண்பர்
  • கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக இருக்கிற எல்லா தவறான யோசனைகளையும் தகர்த்தெறியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • உங்களை நீங்கள் எவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும்
    விழித்தெழு!—1992
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 86
ரோட்டில் யு-டர்ன் சின்னம்

கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்வாரா?

பைபிள் தரும் பதில்

ஆம். ஆனால், தாங்கள் நடந்துகொள்கிற விதத்தை மக்கள் மாற்றிக்கொள்ளும்போது கடவுளும் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்கிறார். உதாரணத்துக்கு, பூர்வகால இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் ஒரு நியாயத்தீர்ப்பு செய்தியைச் சொன்னார். அப்போது அவர், “அவர்கள் ஒருவேளை அதைக் கேட்டு தங்களுடைய கெட்ட வழிகளையும் அக்கிரமங்களையும் விட்டுத் திருந்தலாம். அப்போது, நான் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்” என்று சொன்னார்.—எரேமியா 26:3.

நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை, தான் அவர்களுக்கு செய்ய நினைத்த தீங்கை எண்ணி கடவுள் “மனம் வருந்தினார்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. இதனால் கடவுள் ஒரு தப்பு செய்துவிட்டார் என்ற அர்த்தம் கிடைக்கிறது. ஆனால், மூல எபிரேய வார்த்தை, “மனதில் அல்லது உள்நோக்கத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது” என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. “மனிதனுடைய நடத்தை மாறும்போது கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மாறுகிறது” என்று ஒரு பைபிள் அறிஞர் எழுதினார்.

கடவுளால் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்காக அவர் கண்டிப்பாக தன்னுடைய மனதை மாற்றியே ஆக வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளாத சில சூழ்நிலைகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

  • பாலாக், யெகோவாவின் மனதை மாற்றி இஸ்ரவேல் தேசத்தில் இருக்கிற மக்களை சபிக்க வேண்டும் என்று நினைத்தான். தன்னுடைய மனதை பாலாக் மாற்றுவதற்கு யெகோவா அனுமதிக்கவில்லை.—எண்ணாகமம் 23:18-20.

  • இஸ்ரவேல் ராஜாவான சவுல் தொடர்ந்து மோசமான தவறுகளை செய்துகொண்டே இருந்தார். அதனால் இனிமேல் அவர் ராஜாவாக இருக்க முடியாது என்று யெகோவா முடிவு பண்ணினார். அந்த முடிவை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.—1 சாமுவேல் 15:28, 29.

  • தன்னுடைய மகன் என்றென்றைக்கும் குருவாக இருப்பார் என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார் அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார். இந்த விஷயத்தில் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளவே மாட்டார்.—சங்கீதம் 110:4.

அப்படியென்றால், கடவுள் மாறுவதில்லை என்று பைபிள் ஏன் சொல்கிறது?

“நான் யெகோவா; நான் மாறுவதில்லை” என்று பைபிளில் கடவுள் சொல்லியிருக்கிறார். (மல்கியா 3:6) அதே மாதிரி கடவுள், “நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல” என்றும் சொல்கிறது. (யாக்கோபு 1:17) கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்வார் என்று பைபிள் சொல்கிற விஷயத்தோடு இது முரண்படுவதில்லை. ஏனென்றால், தன்னுடைய குணங்களையும் சரி, அன்பையும் நீதியும் காட்டுகிற விஷயத்தில் அவர் வைத்திருக்கிற நெறிமுறைகளையும் சரி கடவுள் மாற்றிக்கொள்ளவே மாட்டார். (உபாகமம் 32:4; 1 யோவான் 4:8) ஆனால், வித்தியாசமான சூழ்நிலைமைகளில் வித்தியாசமான அறிவுரைகளை கடவுள் தன்னுடைய மக்களுக்கு கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு தாவீது ராஜா அடுத்தடுத்து செய்த இரண்டு போர்களில் கடவுள் முற்றிலும் வித்தியாசமான வழிமுறைகளை கொடுத்தார். ஆனால் அந்த இரண்டு வழிமுறைகளும் வெற்றி அடைந்தது.—2 சாமுவேல் 5:18-25.

மனிதர்களைப் படைத்ததற்காக கடவுள் வருத்தப்படுகிறாரா?

இல்லை. இருந்தாலும், பெரும்பாலான மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாததையும் ஒதுக்கித் தள்ளுவதையும் நினைத்து அவர் வருத்தப்படுகிறார். நோவாவுடைய நாட்களில் பெருவெள்ளம் வருவதற்கு முன்பிருந்த சூழ்நிலைகளைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “யெகோவா பூமியில் படைத்த மனிதர்களை நினைத்து வருத்தப்பட்டார், உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.” (ஆதியாகமம் 6:6) இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற “வருத்தப்பட்டார்” என்ற வார்த்தை, தன்னுடைய “மனதை மாற்றிக்கொண்டார்” என்ற அர்த்தத்தை தருகிற எபிரெய வார்த்தையில் இருந்துதான் வருகிறது. பெருவெள்ளத்துக்கு முன்பு வாழ்ந்த நிறைய மக்கள் மிக மோசமாக நடந்தகொண்டதால், அவர்களைப் பற்றி கடவுளுக்கு இருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. (ஆதியாகமம் 6:5, 11) அந்த மக்கள் கெட்ட காரியங்களை செய்ய முடிவெடுத்ததால்தான் கடவுள் வேதனைப்பட்டார். ஆனால், முழு மனித இனத்தின்மேல் தனக்கு இருந்த கண்ணோட்டத்தை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. சொல்லப்போனால், நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதன் மூலம் அவர் மனித இனத்தை பாதுகாத்தார்.—ஆதியாகமம் 8:21; 2 பேதுரு 2:5, 9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்