ஜூன் 15-21
எரேமியா 7-8
பாட்டு 152; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. அவர்கள் கடவுளுடைய ஆலயத்தை மதிக்கவில்லை
(10 நிமி.)
தாங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தாலும், ஆலயம் தங்களைக் காப்பாற்றும் என்று யூதேயா மக்கள் நிறைய பேர் நினைத்துக்கொண்டார்கள் (எரே 7:4, 8-10; jr 21 பாரா 12)
அவர்களுடைய நடத்தை யெகோவாவின் பெயரைக் கெடுத்தது (எரே 7:11; it “யெகோவா” பாரா 78)
சீலோவின் உதாரணத்தைச் சொல்லி, ஆலயத்துக்கு நடக்கப்போவதை யெகோவா புரியவைத்தார் (எரே 7:12-14; w15 9/15 பக். 27 பாரா 17)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய நடத்தை எல்லா சமயத்திலும் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கிறதா?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
எரே 8:22—எந்த அர்த்தத்தில் ‘கீலேயாத்தில் பரிமளத் தைலமே இல்லை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது? (jr 135 பாரா 14)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) எரே 8:4-13 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 5 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிறு புத்தகத்தின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff படிப்பு 19 குறிப்பு 6 (th படிப்பு 19)
பாட்டு 91
7. ராஜ்ய மன்றங்களுக்கு நாம் எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?
(5 நிமி.) கலந்துபேசுங்கள்.
யெகோவாவின் நண்பனாகு—யெகோவாவின் வீட்டை நேசி! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
ராஜ்ய மன்றத்தை நாம் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும், ஏன்?
1 தீமோத்தேயு 2:9, 10-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது சகோதர சகோதரிகள் வேறு எப்படி யெகோவாவுக்கு மதிப்புக் கொடுக்கலாம்?
8. உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?—ராஜ்ய மன்றங்களை பராமரிப்பது
(10 நிமி.) கட்டுரையின் அடிப்படையில் கலந்துபேசுங்கள். உங்கள் ராஜ்ய மன்றத்தை பராமரிக்க செய்யப்படும் செலவுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.—hdu கட்டுரை 30.
ராஜ்ய மன்றங்களை நல்ல நிலையில் வைத்திருக்க என்னென்ன செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், அப்படிச் செய்வது ஏன் முக்கியம்?
பெரிய அளவில் செய்யப்படுகிற பராமரிப்பு வேலைகளை ஒழுங்கமைக்கவும் அதற்குச் செலவு செய்யவும் செய்யப்படும் ஏற்பாடுகளில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?
நீங்கள் எப்படி உதவலாம்?
நன்கொடைகளை எப்படிக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள, JW லைப்ரரி® அப்ளிகேஷனின் முதல் பக்கத்தில் அல்லது jw.org வெப்சைட்டின் முதல் பக்கத்தில், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் “நன்கொடைகள்” என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து பாருங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பகுதி 14—முன்னுரை, பாடங்கள் 94-95