உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மே பக். 10-11
  • ஜூன் 8-14

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 8-14
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மே பக். 10-11

ஜூன் 8-14

எரேமியா 4-6

பாட்டு 56; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யூதா மக்களின் கெட்ட குணம் உங்களுக்கு வேண்டாம்

(10 நிமி.)

யூதாவில் இருந்த மக்கள் முரண்டு பிடிக்கிறவர்களாகவும், கலகம் செய்கிறவர்களாகவும் இருந்தார்கள் (எரே 4:4, 14; w13 3/15 பக். 10 பாரா. 8-9)

அவர்களுடைய தவறை யெகோவா எடுத்துச் சொன்னாலும் கேட்க மனமில்லாதவர்களாக இருந்தார்கள் (எரே 5:31; jr 114 பாரா 2)

யெகோவா கொடுத்த எச்சரிப்புகளைக் கேட்காததால் அவர்களுக்குத் தண்டனை காத்திருந்தது (எரே 6:17-19)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா கொடுக்கிற எச்சரிப்புகளை நான் எப்படி ஒதுக்கிவிடாமல் இருக்கலாம்?’

படங்களின் தொகுப்பு: 1. ஒரு சகோதரி தன் பைபிளையும், டேப்லெட்டையும், “உட்பார்வை” தொகுதிகளையும் பயன்படுத்தி தனிப்பட்ட படிப்பில் படித்ததை ஆழமாக யோசித்துப் பார்க்கிறார். 2. மனித உடலின் வரைபடத்தை தன்னுடைய டேப்லெட்டில் ஒரு மருத்துவர் காட்டுகிறார்.

உங்கள் உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தால், என்ன பிரச்சினை என்று சரியாகக் கண்டுபிடிக்க மருத்துவர் தேவை. அப்போதுதான், சீக்கிரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அதே மாதிரி, யெகோவாவோடு இருக்கும் பந்தம் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அதைச் சரிசெய்ய வேண்டாமா?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • எரே 4:10—யெகோவா தன் மக்களை ஏமாற்றிவிட்டார் என்று எரேமியா சொன்னதற்கு என்ன அர்த்தம்? (w07 3/15 பக். 9 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) எரே 5:1-11 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் சொல்வதை நம்பலாமா என்று ஒருவர் சந்தேகப்படுகிறார். (lmd பாடம் 3 குறிப்பு 3)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(3 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 5—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் எப்படி வந்தது? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 60

8. பொய்யான செய்திகளில் இருந்து மனதைப் பாதுகாத்திடுங்கள்

(8 நிமி.) கலந்துபேசுங்கள்.

பழங்கால இஸ்ரவேல் தேசத்தில் இருந்த பொய்த் தீர்க்கதரிசிகளும் குருமார்களும், கேட்பதற்கு நல்லதுபோல் தெரிந்த ஆனால் ஆபத்தான, பொய்ச் செய்திகளைப் பரப்பினார்கள். (ஏசா 30:10; எரே 5:31) அதேமாதிரி, இன்றும் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவர்கள், நல்லது போல தெரியும் விதத்தில் அவற்றைச் சொல்கிறார்கள். உங்கள் மனம் ஏமாந்துபோகாமல் இருக்க என்ன செய்யலாம்?

“கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்!” என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஒரு பையனைச் சுற்றிலும் வித்தியாசமான எலெக்ட்ரானிக் மீடியாக்களிலிருந்து வரும் எக்கச்சக்கமான மெசேஜுகள் இருக்கின்றன.
“கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்!” என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. அதே பையன் ஒரு பெரிய பூதக்கண்ணாடியை வைத்து தன்னுடைய லேப்டாப்பில் இருக்கும் தகவல்கள் உண்மையா பொய்யா என்று அலசிப் பார்க்கிறான்.

கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பொய்யான செய்திகள் ஏன் ஆபத்தானது?

  • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று என்னவெல்லாம் செய்ய முடிகிறது? இதைப் பற்றி நாம் ஏன் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

  • தகவல்கள் உண்மையா பொய்யா என்று எப்படித் தெரிந்துகொள்வது?—யோபு 12:11

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் நம்புகிற விஷயங்களுக்கு சாதகமாக வரும் தகவல்களை உண்மையென்று உடனே நம்பிவிடுகிறேனா? அல்லது, எனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தகவல்கள் உண்மையா பொய்யா என்று கவனமாக யோசிக்கிற மனம் எனக்கு இருக்கிறதா?’

இன்டெர்நெட் மற்றும் சோஷியல் மீடியா வழியாக நமக்கு வரும் செய்திகள், பெரும்பாலும் நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி அல்லது அடிக்கடி நாம் தேடும் விஷயங்களுக்கு ஏற்ற மாதிரிதான் வரும். அதனால், நம்பகமான தகவல்களைக் கண்டுபிடிக்க நீங்கள் ஆழமாக ஆராய வேண்டியிருக்கும்.

9. சபைத் தேவைகள்

(7 நிமி.)

10. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 92-93

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 68; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்