உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மே பக். 8-9
  • ஜூன் 1-7

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 1-7
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மே பக். 8-9

ஜூன் 1-7

எரேமியா 1-3

பாட்டு 84; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒரு சந்தையில் பொய் வணக்கத்தாரிடம் யெகோவாவின் செய்தியை எரேமியா சொல்கிறார்.

எருசலேமிலிருந்த பொய் வணக்கத்தாரிடம் யெகோவாவின் நியாயத்தீர்ப்புச் செய்தியை எரேமியா பிரசங்கிக்கிறார்

1. “பயப்படாதே . . . ‘நான் உன்னோடு இருக்கிறேன்’”

(10 நிமி.)

[எரேமியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

சிலர், பிரசங்கிப்பதற்கு எரேமியா மாதிரியே பயப்படுகிறார்கள் அல்லது தங்களுக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறார்கள் (எரே 1:6)

தன்னுடைய விருப்பத்தைச் செய்யத் தகுதியுள்ளவர்களாக யெகோவா நம்மை ஆக்குவார், நமக்குத் தேவையான பலத்தைத் தருவார் (எரே 1:8, 9; w10 1/15 பக். 9 பாரா. 7-8)

ஊழியத்தில் பதட்டத்தோடு இருக்கும் ஒரு சகோதரர் கதவைத் தட்டுவதற்கு முன்பு மனதுக்குள் ஜெபம் செய்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • எரே 2:28—உண்மையில்லாத யூதர்களிடம் யெகோவா சொன்னதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? (w23.07 பக். 15 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) எரே 3:14-25 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். பிறகு, அந்த நபருக்கு இன்னும் அதிக பொருத்தமாக இருக்கும் ஒரு வசனத்தை பைபிளிலிருந்து காட்டுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) முன்னேற்றம் செய்யாத பைபிள் மாணவரோடு கலந்துபேசுங்கள். (lmd பாடம் 12 குறிப்பு 5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 76

7. எரேமியாவைப் போல தைரியமாக இருங்கள்

(6 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—எரேமியா என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • எரேமியா எப்படி யெகோவாவின் நண்பர் ஆனார்?—எரே 1:6-8

  • யெகோவாவைப் பற்றி யாரிடம் பேசலாம் என்று நினைக்கிறீர்கள்?

  • அந்த நபர் யெகோவாவின் நண்பர் ஆவதற்கு என்ன சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்?

8. ’சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்லுங்கள்’

(9 நிமி.) கலந்துபேசுங்கள்.

நல்ல செய்தியைச் சொல்லும்போதும், யெகோவாவின் ஒழுக்கநெறிகளை ஆதரித்துப் பேசும்போதும் நாம் தைரியத்தைக் காட்ட வேண்டும். ஆனால் அதற்காக, மற்ற கிறிஸ்தவ குணங்களைக் காற்றில் பறக்க விட்டுவிடக் கூடாது.

1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசும்போது வேறு என்ன குணங்களைக் காட்டுவதும் முக்கியம்?

  • ஏன் இந்தக் குணங்கள் முக்கியம்?

படங்களின் தொகுப்பு: “உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்” வீடியோவிலிருந்து சில காட்சிகள். 1. ஐரீன் ஆபீஸில் இருக்கிறார். 2. ஒலிவியா ஸ்கூலில் இருக்கிறாள்.

“உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்” என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • இந்த வீடியோவிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட எந்த விஷயம், ஓரினச்சேர்க்கையைப் பற்றிய உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களிடம் சாதுரியமாக விளக்க உதவும்?

மறந்துவிடாதீர்கள்: யெகோவாவின் ஒழுக்கநெறிகளை ஆதரித்துப் பேசும் சமயங்களில், அரசியல் சர்ச்சைகளுக்குள் சென்றுவிடாதபடி கவனமாக இருங்கள்.—யோவா 18:36.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 90-91

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 18; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்