உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb26 மே பக். 6-7
  • மே 25-31

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 25-31
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2026
mwb26 மே பக். 6-7

மே 25-31

ஏசாயா 65-66

பாட்டு 24; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. நம் ஆன்மீகப் பூஞ்சோலையை நாம் நேசிக்கிறோம்!

(10 நிமி.)

கடவுளுடைய ஊழியர்களுக்கு, ஆன்மீகப் பூஞ்சோலையில் ஆன்மீக உணவு கொட்டிக் கிடக்கிறது (ஏசா 65:13; cl பக். 275 பாரா. 12, 14)

வலியையும் வேதனையையும் சமாளிக்க ஆன்மீகப் பூஞ்சோலை நமக்கு உதவுகிறது (ஏசா 65:14-17; w24.04 பக். 22 பாரா. 9-10)

நாம் அனுபவிக்கும் சமாதானத்தோடும் பாதுகாப்போடும் ஒப்பிட்டால், இந்த உலகம் கொடுக்கிற எதுவுமே அதன் பக்கத்தில் நெருங்கக்கூட முடியாது (ஏசா 65:25; w24.04 பக். 23 பாரா 13)


விளக்கம்: “ஆன்மீகப் பூஞ்சோலை” என்பது யெகோவாவை வணங்குகிறவர்கள் அனுபவிக்கும் பாதுகாப்பான சூழலைக் குறிக்கிறது. அங்கே, யெகோவாவோடும் மற்றவர்களோடும் சமாதானமான பந்தத்தை நம்மால் வைத்துக்கொள்ள முடிகிறது.

படங்களின் தொகுப்பு: ஆன்மீகப் பூஞ்சோலையில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள். 1. ராஜ்ய மன்றத்தில் ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாகப் பேசுகிறார்கள். 2. ராஜ்ய மன்றத்துக்கு வெளியே இருக்கும் இடங்களைப் பராமரிக்கும் வேலையைச் சந்தோஷமாகச் சேர்ந்து செய்கிறார்கள். 3. சிறையில், வயதான ஒரு சகோதரர் இளம் சகோதரரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசுகிறார். சகோதர சகோதரிகள் அனுப்பிய கார்டுகளும் கடிதங்களும் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன. 4. மருத்துவமனையில் இருக்கும் ஒரு சகோதரியைப் பார்க்க ஒரு கணவனும் மனைவியும் போகிறார்கள். அந்தச் சகோதரி அவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அந்த மனைவி அந்தச் சகோதரியின் கையைப் பிடித்திருக்கிறார், அந்தக் கணவர் ஒரு கூடையை வைத்திருக்கிறார். அந்தக் கூடையில் பழங்களும் கார்டுகளும் இருக்கின்றன.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • ஏசா 66:24—கெஹென்னாவைப் பற்றி மாற்கு 9:47, 48-ல் இயேசு சொல்லியிருக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ள இந்த வசனம் எப்படி உதவுகிறது? (it “கெஹென்னா” பாரா. 6-7)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) ஏசா 65:17-25 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பேச்சு வாக்கில் நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை அவரிடம் சொல்லுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். ஒருவர் உங்களிடம் வாக்குவாதம் செய்ய நினைக்கிறார். (lmd பாடம் 4 குறிப்பு 5)

6. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(3 நிமி.) நடிப்பு. ijwbq கட்டுரை 87—பொருள்: யார் அந்திக்கிறிஸ்து? (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 80

8. எதையாவது இழந்துவிடுவீர்களா என்ன?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

படங்களின் தொகுப்பு: “ ‘நல்ல செய்திக்காக’ நீங்கள் என்ன செய்வீர்கள்?” வீடியோவிலிருந்து சில காட்சிகள். 1. பெத்தேலில் சகோதரர் டொமொஹிரோ நெஷிமுரே பைண்டிங் இலாகாவில் வேலை செய்கிறார். 2. சகோதரி ஹேப்பினஸ் மாபோ, ஒரு மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார். 3. ரேனர் மற்றும் கெசியா ஃபெர்னான்டோ ஒரு கிளை அலுவலகத்தில் கட்டுமான ஊழியர்களாகச் சேவை செய்கிறார்கள்; அங்கே ரேனர் ஒரு சகோதரரோடு கைகுலுக்குகிறார். 4. சகோதரர் ஜார்ஜ் டெலன் ஜூனியர், பெத்தேலில் ஊழிய இலாகாவில் மற்ற சகோதரர்களோடு வேலை செய்கிறார். 5. சகோதரி ரமோனா வெல்ஷ் ஒரு பைபிள் படிப்பை நடத்துகிறார்.

முழுநேர சேவை செய்யலாமா வேண்டாமா என்று யோசிக்கிறீர்களா? முழுநேர சேவையில் நுழைந்தால், நல்ல நல்ல விஷயங்களை நாம் இழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறீர்களா? அல்லது, ‘நான் எதற்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும்? யெகோவாவின் ஊழியர்கள் எல்லாருக்கும்தானே முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கப் போகிறது!’ என்று யோசிக்கிறீர்களா? தன்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு யெகோவா “நல்லது எதையும் கொடுக்காமல் இருக்க மாட்டார்” என்று பைபிள் சொல்வதை மறந்துவிடாதீர்கள். (சங் 84:11, 12; அடிக்குறிப்பு) நமக்கு எப்போது இழப்பு ஏற்படும் தெரியுமா? நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்காமல் போகும்போதுதான், கொடுக்கும்போது அல்ல!

யெகோவா தன் மக்களை எதிர்காலத்தில் மட்டுமல்ல, இன்றே ஆசீர்வதிக்கிறார். “நல்ல செய்திக்காக” நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • யெகோவாவுக்கு அதிகத்தைச் செய்ய முடிவெடுத்ததால் என்ன ஆசீர்வாதங்களை இந்த இளம் பிள்ளைகள் அனுபவித்தார்கள்?

முழுநேர சேவை செய்ய உங்கள் சூழ்நிலை அனுமதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுப்பவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார். அதனால், ‘அளவில்லாத ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிவார்’ என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுங்கள்.—மல் 3:10.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 88-89

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 55; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்