மே 18-24
ஏசாயா 62-64
பாட்டு 44; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. அன்பும் கரிசனையும் நிறைந்த குயவர்
(10 நிமி.)
தவறு செய்ததால் நாம் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தாலும், யெகோவா நம்மைக் கரிசனையோடு நடத்துகிறார் (ஏசா 63:9; cl பக். 253-254 பாரா. 7-9)
தவறு செய்ததால் வரும் விளைவுகளில் இருந்து யெகோவா நம்மைப் பாதுகாப்பதில்லை என்றாலும், அவருக்கு உண்மையாக இருக்க நாம் முயற்சி செய்யும்போது அவர் நமக்கு உதவுகிறார் (w23.08 பக். 28-29 பாரா. 8-9)
நாம் அனுமதித்தால், யெகோவா நம்மைத் தொடர்ந்து வடிவமைப்பார்; அவருடைய பார்வையில் மதிப்புள்ளவர்களாக நம்மை ஆக்குவார் (ஏசா 64:8; w13 9/15 பக். 20 பாரா. 15-17)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 63:10—யெகோவாவுடைய பொறுமையைப் பற்றி இந்த வசனம் நமக்கு என்ன கற்றுத்தருகிறது? (it “இரக்கம்” பாரா 11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 64:4-12 (th படிப்பு 12)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) பொது ஊழியம். எந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவது அந்த நபருக்குப் பிடிக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். பிறகு, அவரை மறுபடியும் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யுங்கள் (lmd பாடம் 1 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவைக் காட்டிப் பேசுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff பக். 254-ல் உள்ள பெட்டி: “சபையோடு ஊழியம் செய்ய நான் தயாரா?” ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபி ஆவதற்கு குறிக்கோள் வைப்பது சம்பந்தமாக உங்கள் பைபிள் மாணவரிடம் கலந்துபேசுங்கள் (lmd பாடம் 12 குறிப்பு 3)
பாட்டு 115
7. பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராவது: எதிர்பார்க்காததை எதிர்பார்த்திருங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒரு மூப்பர் இதை நடத்துவார். கிளை அலுவலகத்திடம் இருந்தும், மூப்பர் குழுவிடம் இருந்தும் ஏதாவது நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வன்முறைத் தாக்குதல்கள் உட்பட, பேரழிவுகள் எங்கு வேண்டுமானாலும், எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று நடக்கலாம். (பிர 9:11) நாம் குடியிருக்கும் இடத்தில் பொதுவாக இயற்கைப் பேரழிவுகள் ஏற்படாது என்றாலும், எதிர்பாராத சம்பவங்களை எதிர்பார்த்திருப்பது ஞானமானது. (நீதி 22:3) எதையும் சந்திக்க நம்மையே நாம் எப்படித் தயாராக வைத்துக்கொள்ளலாம்?
பொது இடங்களில், சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருங்கள். அவசரகாலத்தில் வெளியேறுவதற்கான வழிகள் எங்கே இருக்கின்றன என்று நன்றாகத் தெரிந்துவைத்திருங்கள். அதுவும், நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களில் இது ரொம்ப அவசியம்.
இயற்கைப் பேரழிவுகளைச் சமாளிக்கத் தயாராக இருப்பதற்கு, கோ-பேகுகளை (Go-Bags)a தயார் செய்யுங்கள்; அவற்றை எப்போதுமே தயார்நிலையில் வைத்திருங்கள். வீட்டிலும், அவசரநிலையைச் சமாளிக்கத் தேவையான பொருள்களைத் தயாராக வைத்திருங்கள். அவசரநிலை ஏற்படும்போது, எங்கே செல்வோம், எப்படிச் செல்வோம் என்று முன்பே திட்டம் போட்டு வையுங்கள். உங்கள் குடும்பத்தாரையும் நண்பர்களையும் தொடர்புகொள்ளத் தேவையான தகவல்களையும் கைவசம் வைத்திருங்கள்.—g17.5 பக். 4
பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராவது: எதிர்பார்க்காததை எதிர்பார்த்திருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
பேரழிவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதைப் பற்றி சகோதர சகோதரிகள் ஆரம்பத்தில் என்ன நினைத்தார்கள்?
தயாராக இருப்பதற்கு என்னென்ன செய்தார்கள்?
பேரழிவுகளைச் சந்திக்கத் தயார் ஆவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
தங்களுடைய அனுபவத்திலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பேரழிவுக்குத் தயாராக இருப்பது, நான் யெகோவாவை மதிக்கிறேன் என்பதை எப்படிக் காட்டுகிறது?’
குறிக்கோள்: இந்த வாரம், ஏதாவது பொது இடங்களில் இருக்கும்போது, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஆமா... அவசரநிலை ஏற்பட்டால் வெளியே போகிற வழி பக்கத்தில் எங்கே இருக்கு?’
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடம் 86, பகுதி 13—முன்னுரை, பாடம் 87
முடிவான குறிப்புகள் (3 நிமி.) | ஜெபம்
a விழித்தெழு! எண் 5, 2017 பத்திரிகையில் பக்கம் 6-ல் இருக்கும் “உங்களுக்குத் தேவையானதை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.