பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாக்கோபு 3-5
கடவுள் தருகிற ஞானத்தைச் செயலில் காட்டுங்கள்
யெகோவா தருகிற ஞானம் அன்றாட வாழ்க்கைக்குப் பிரயோஜனமானது. உதாரணத்துக்கு, நம்முடைய சகோதர சகோதரிகளோடு சமாதானமாவதற்கு அது உதவுகிறது. கடவுள் தருகிற ஞானத்தை நாம் பெற்றிருந்தால், அது நம்முடைய செயல்களில் தெளிவாகத் தெரியும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் தருகிற ஞானத்தில் உட்பட்டிருக்கிற இந்த அம்சங்களில் எவற்றைச் சமீபத்தில் காட்டியிருக்கிறேன்? இவற்றைக் காட்டுவதில் முன்னேற நான் என்ன செய்யலாம்?’
சுத்தமாக இருப்பதில்
சமாதானம் பண்ணுவதில்
நியாயமாக நடந்துகொள்வதில்
கீழ்ப்படியத் தயாராக இருப்பதில்
இரக்கமுள்ளவர்களாக, நல்ல செயல்களைச் செய்கிறவர்களாக இருப்பதில்
பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வதில்
வெளிவேஷம் போடாமல் இருப்பதில்