இத்தாலியில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்கள்
இப்படிப் பேசலாம்
எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (T-31)
கேள்வி: வியாதியோ கஷ்டமோ இல்லாம, குடும்பத்தோடயும் நண்பர்களோடயும் என்றென்றும் வாழ நாம ஆசைப்படுவோம். நாம செய்ற வேலை நமக்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் தரணும்னு நினைப்போம். அப்படியொரு வாழ்க்கை நமக்கு கிடைக்குமா?
வசனம்: சங் 37:11, 29
பிரசுரம்: அப்படியொரு எதிர்காலம் வரும்னு இந்த துண்டுப்பிரதியில சொல்லியிருக்காங்க.
உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
கேள்வி: இன்னைக்கு ஏன் இவ்ளோ கஷ்டங்கள் இருக்கு?
வசனம்: 1யோ 5:19
உண்மை: பிசாசாகிய சாத்தான்தான் இந்த உலகத்த ஆட்சி செய்றான்.
பைபிள் படிப்பு எப்படி இருக்கும்?
பிரசுரம்: ‘இன்னைக்கு ஏன் இவ்ளோ கஷ்டங்கள் இருக்கு? உங்க குடும்பம் சந்தோஷமா இருக்க நீங்க என்ன செய்யலாம்?’ இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்வாங்க. பைபிள் படிப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஒரு வீடியோவ காட்டுறேன். [வீடியோவைக் காட்டுங்கள்.] இந்த புத்தகத்துலயிருந்து நாம படிக்கலாம். [பைபிள் படிப்பை நடத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஏதாவது ஒரு பிரசுரத்தைக் காட்டுங்கள். முடிந்தால், பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று நடித்துக் காட்டுங்கள்.]
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்