டிசம்பர் 7-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 7-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 51; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 84 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 10-14 (8 நிமி.)
எண் 1: 2 நாளாகமம் 13:13-22 (3 நிமிடத்திற்குள்)
எண் 2:எப்பாப்பிரோதீத்து—தலைப்பு: யெகோவாவுக்காக சேவை செய்கிறவர்களுக்கு மரியாதை காட்டுங்கள்—பிலி 2:25-30; 4:18 (5 நிமி.)
எண் 3: யாரெல்லாம் பரலோகத்துக்கு போவார்கள்?—பேச்சுப் பொருள்கள் 40ஆ (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.”—அப். 14:22.
10 நிமி: “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்.” இந்த மாதத்திற்கான வசனத்தைப் பற்றிய பேச்சு. அப்போஸ்தலர் 14:21, 22 மற்றும் 1 பேதுரு 4:12-14 வசனங்களை வாசித்து விளக்குங்கள். (செப்டம்பர் 15, 2014 காவற்கோபுரம் பக். 13, பாரா. 3-6-ஐ பாருங்கள்.) இந்த மாதம் நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கும் பகுதிகளைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள். இந்த மாதத்திற்கான வசனத்தோடு அவை எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்லுங்கள். அடுத்த வாரம் ஊழியக் கூட்டத்தில் சிந்திப்பதற்கு ‘கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடங்கள்’ என்ற வீடியோவை பார்த்து வரும்படி சொல்லுங்கள்.
10 நிமி: நாம் எப்படி பதில் சொல்ல வேண்டும்? (கொலோ. 4:6) ஊழியப் பள்ளி புத்தகம் பக்கம் 69, பாராக்கள் 1-3 இருக்கும் விஷயங்களைப் பற்றிய பேச்சு. இந்தப் பகுதியில் இரண்டு நடிப்புகள் இருக்கும். முதல் நடிப்பில், ஊழியத்தில் பார்க்கும் நபர் கோபமாக பேசிவிடுகிறார். பதிலுக்கு நம் சகோதரரும் அல்லது சகோதரியும் யோசிக்காமல் கோபமாக பேசிவிடுகிறார். அதனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. இரண்டாவது நடிப்பில், நம் சகோதரர் அல்லது சகோதரி கோபப்படாமல் பொறுமையாக பேசுகிறார். அதனால், நல்ல பலன் கிடைக்கிறது.
10 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—ஆபகூக்.” கேள்வி-பதில்.
பாட்டு 74; ஜெபம்