தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 28, 2015-ல் ஆரம்பிக்கும் வாரத்தில், இந்தக் கேள்விகளை ஊழியப் பள்ளியில் கலந்து பேசுவார்கள். ஊழியப் பள்ளியில் ஒவ்வொரு கேள்விக்கும் எப்போது பதில் தெரிந்துகொள்வோம் என்ற தேதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேதியைப் பார்த்து அந்தக் கேள்விக்கு அந்தந்த வாரம் பதில் தயாரித்து வரலாம்.
1 நாளாகமம் 20:3-ன் அடிப்படையில், சிறைபிடித்தவர்களை தாவீது கொடூரமாக நடத்தினார் என்று சிலர் நினைக்கிறார்கள். அது சரியா? [நவ. 2, காவற்கோபுரம் 05 2/15 பக். 27]
ஆலயத்தைக் கட்டும் வேலைக்கு தாவீது ஏன் தாராளமாக உதவினார்? நாம் எப்படி தாவீதைப் போல இருக்கலாம்? (1 நா. 22:5) [நவ. 9, காவற்கோபுரம் 05 10/1 பக். 11 பாரா 7
‘நீ உன் பிதாவின் தேவனை அறிந்து கொள்’ என்று தாவீது சாலொமோனிடம் சொன்னார். அதன் அர்த்தம் என்ன? (1 நா. 28:9) [நவ. 16, காவற்கோபுரம் 11 4/1 பக். 26 பாரா. 3, 7]
2 நாளாகமம் 1:10-ல் சாலொமோன் எதை கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தார்? ஜெபம் செய்யும் விஷயத்தில் சாலொமோனிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 நா. 1:11, 12) [நவ. 23, காவற்கோபுரம் 05 12/1 பக். 19 பாரா 6]
யெகோவாவுக்கு என்ன விசேஷ திறமை இருப்பதாக 2 நாளாகமம் 6:29, 30 சொல்கிறது? நாம் ஏன் யெகோவாவிடம் மனம்விட்டு ஜெபம் செய்ய வேண்டும்? (சங். 55:22) [நவ. 30, காவற்கோபுரம் 11 4/1 பக். 19 பாரா 7]
பலம் படைத்த படையை எதிர்த்து ஜெயிக்க வேண்டும் என்று ஏன் ஆசா ஜெபம் செய்கிறார்? சாத்தானை எதிர்த்து ஜெயிக்க முடியும் என்பதை இதிலிருந்து எப்படி தெரிந்துகொள்கிறோம்? (2 நா. 14:11) [டிச. 7, காவற்கோபுரம் 12 8/15 பக். 8 பாரா 6-பக். 9 பாரா 1]
அரசனாகிய யோசபாத் முட்டாள்தனமாக நடந்தாலும் யெகோவா அவரிடம் எப்படி நடந்துகொண்டார்? நாமும் யெகோவாவைப் போல மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (2 நா. 19:3) [டிச. 14, காவற்கோபுரம் 03 7/1 பக். 17 பாரா 13; cl பக். 245 பாரா 12]
இன்று ‘அவரவர் நிலையில் அசையாமல் நிற்பது’ என்றால் என்ன? (2 நா. 20:17, NW) [டிச. 21, காவற்கோபுரம் 05 12/1 பக். 21 பாரா 2; காவற்கோபுரம் 03 6/1 பக். 21 பாரா. 15-16]
யோராமின் சாவைப் பற்றி 2 நாளாகமம் 21:20-ல் சொல்லியிருக்கும் விஷயத்திலிருந்து நாம் என்ன முக்கியமான பாடத்தை கற்றுக்கொள்கிறோம்? [டிச. 21, காவற்கோபுரம் 98 11/15 பக். 32 பாரா 4]
2 நாளாகமம் 26:5-ல் உள்ளபடி உசியா யாரோடு நட்பு வைத்திருந்தார்? அனுபவமுள்ள சகோதர சகோதரிகளிடம் நட்பு வைத்துக்கொள்வதால் இளைஞர்கள் எப்படி நன்மை அடையலாம்? [டிச. 28, காவற்கோபுரம் 07 12/15 பக். 10 பாரா. 2, 4]