அறிவிப்புகள்
◼ ஊழியத்தில் என்ன கொடுக்கலாம்? டிசம்பர்: இதில் ஏதாவது ஒரு பழைய துண்டுப்பிரதியைக் கொடுங்கள்: மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (T-16), சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (T-15), குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (T-21), துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! (T-27). இந்த பழைய துண்டுப்பிரதிகள் இல்லையென்றால் பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுத்து பைபிள் படிப்புகளை ஆரம்பியுங்கள்: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா?, குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?, வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?, கஷ்டங்களுக்கு முடிவு வருமா? பிறகு, கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பைத் தொடர்ந்து நடத்துங்கள். ஜனவரி, பிப்ரவரி: பின்வரும் சிற்றேடுகளில் ஒன்றைக் கொடுங்கள்: கடவுள் சொல்லும் நற்செய்தி!, மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... கடவுள் சொல்வதைக் கேளுங்கள் அல்லது கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஆட்களுக்கு ஏற்ற மாதிரி வேறு ஏதாவது சிற்றேடுகள் இருந்தால் அதையும் கொடுக்கலாம். மார்ச், ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள்.
◼ 2017-ஆம் வருஷத்திற்கான நினைவுநாள் தேதி செவ்வாய்கிழமை, ஏப்ரல் 11, 2017.
◼ இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் www.jwindiagift.org வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் நன்கொடைகளை அனுப்பலாம். அப்படி அனுப்புவதற்கு முதலில், இந்த வெப்சைட்டில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது, உங்கள் பாஸ்போர்ட்டின் ஸ்கேன்டு காப்பியை வெப்சைட்டில் இணைக்க வேண்டும். இந்த வெப்சைட்டில் 35 வங்கிகள் மூலம் நன்கொடைகளை அனுப்பலாம். ஒருவேளை, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் இந்த வெப்சைட்டில் இல்லை என்றால் எங்களை தொடர்புகொள்ளுங்கள். கிளை அலுவலகத்தில் இருக்கும் அறக்கட்டளை டெஸ்க்கை 080-23092426 என்ற ஃபோன் நம்பரில் தொடர்புகொள்ளலாம் அல்லது ACCToffice.in@jw.org என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்பலாம்.