உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/15 பக். 3
  • ஆளும் குழு எழுதிய கடிதம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆளும் குழு எழுதிய கடிதம்
  • நம் ராஜ்ய ஊழியம்—2015
நம் ராஜ்ய ஊழியம்—2015
km 6/15 பக். 3

ஆளும் குழு எழுதிய கடிதம்

அன்பான சகோதர சகோதரிகளே,

“உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். விசுவாசத்தினால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் நமது தகப்பனாகிய கடவுளுக்குமுன் இடைவிடாமல் நினைத்துக்கொள்கிறோம்.” (1 தெ. 1:2, 3) எங்கள் மனதில் இருப்பதை பவுல் இந்த வசனங்களில் அப்படியே எழுதியிருக்கிறார். உங்களைப்போல் அன்பான சகோதர சகோதரிகளைக் கொடுத்ததற்காகவும் நீங்கள் செய்யும் எல்லா நல்ல விஷயங்களுக்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்.

கடவுளுடைய அரசாங்கத்திற்காக, போன வருடம் சுறுசுறுப்பாக ‘ஊழியம்’ செய்திருக்கிறீர்கள். ஊழியம் செய்ய ஆட்கள் தேவைப்படும் இடங்களுக்குப் போய் சிலர் சேவை செய்திருக்கிறீர்கள். பொது இடங்களில் ஊழியம் செய்திருக்கிறீர்கள். இயேசுவின் நினைவுநாள் சமயத்திலும் வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போதும் துணைப் பயனியர் செய்திருக்கிறீர்கள். 2014, ஆகஸ்டில் விசேஷ ஊழியம் இருந்த சமயத்திலும் துணைப் பயனியர் செய்திருக்கிறீர்கள். இப்படி, ஊழியத்தில் நிறைய செய்வதற்கு முயற்சி எடுத்திருக்கிறீர்கள். பிரச்சினைகள் மத்தியிலும் யெகோவாவுக்கு மனதார சேவை செய்வதற்காக உங்களைப் பாராட்டுகிறோம். (கொலோ. 3:23, 24) நீங்கள் செய்யும் ‘ஊழியத்திற்காக’ யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்.

உலகம் முழுவதும் கட்டுமான வேலை செய்யும் சகோதர சகோதரிகள் கடினமாக ‘உழைக்கிறார்கள்.’ அவர்களையும் பாராட்டுகிறோம். யெகோவாவின் சாட்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் இன்னும் நிறைய ராஜ்ய மன்றங்களும் கிளை அலுவலகங்களும் தேவைப்படுகின்றன. (ஏசா. 60:22) போன வருடம் யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை 82,01,545 என்று உயர்ந்துள்ளது; அவர்கள் ஒவ்வொரு மாதமும் 94,99,933 பைபிள் படிப்புகளை எடுக்கிறார்கள். அமைப்பில் இவ்வளவு வளர்ச்சி இருப்பதால் இன்னும் பெரிய கிளை அலுவலகங்கள் தேவைப்படுகின்றன. நிறைய ராஜ்ய மன்றங்களும் தேவைப்படுகின்றன. நம் புத்தகங்களை மொழிபெயர்ப்பவர்கள் அந்தந்த மொழி பேசும் இடங்களிலேயே இருந்து வேலை செய்வதற்கு மொழிபெயர்ப்பு அலுவலகங்களும் தேவைப்படுகின்றன.

கட்டுமான வேலைக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்? உங்களுக்குக் கட்டுமான வேலை செய்யும் திறமை இருந்தால், அதில் கலந்துகொள்ளலாம். அப்படி திறமைகள் இல்லை என்றாலும் உங்களால் முடிந்த பொருள் உதவியையோ பண உதவியையோ செய்யலாம். (நீதி. 3:9, 10) இதற்கு ஒரு நல்ல உதாரணம் இஸ்ரவேலர்கள். ஆசரிப்பு கூடாரம் கட்டியபோது, அவர்கள் தாராளமாக உதவி செய்தார்கள். போதும் என்று சொல்லும் வரை நிறைய பொருள்களைக் கொடுத்தார்கள். (யாத். 36:5-7) இதுபோன்ற உதாரணங்களைப் படிக்கும்போது இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை வருகிறது. கட்டுமான வேலையில் கடினமாக ‘உழைக்கிறவர்களையும்’ அதற்காக நன்கொடை கொடுக்கிறவர்களையும் பாராட்டுகிறோம், இதுபோன்ற சகோதர சகோதரிகளை கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்.

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் நம் சகோதர சகோதரிகள் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. தென் கொரியாவில் இருப்பவர்கள் இதற்கு நல்ல உதாரணம். போரில் கலந்துகொள்ளாததற்காக 1950-லிருந்து இவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பல வருடங்களாக அந்த நாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகள் இப்படிப்பட்ட பிரச்சினையை அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள். இவர்களுடைய உதாரணம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது.

எரிட்ரியாவில் இருக்கும் மூன்று சகோதரர்கள் 20 வருடங்களுக்குமேல் சிறையில் இருக்கிறார்கள். சில சகோதரிகளும் பிள்ளைகளும்கூட கொஞ்ச காலமாக சிறையில் இருக்கிறார்கள். இவர்களை வெளியே கொண்டுவர நிறைய முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை. இத்தனை கஷ்டங்களிலும் இவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள். இவர்களுக்காக நாங்கள் எப்போதும் ஜெபம் செய்கிறோம்.—ரோ. 1:8, 9.

இவர்களைப் போல் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வராமல் இருக்கலாம். ஆனால் வியாதியால் கஷ்டப்படலாம், வயதாகி இருக்கலாம், யெகோவாவின் சாட்சியாக இல்லாத கணவனோ மனைவியோ (அல்லது உறவினர்களோ) உங்களை எதிர்க்கலாம்; மற்றவர்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சினை இருக்கலாம். இருந்தாலும் நீங்கள் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்வதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. (யாக். 1:12) கஷ்டங்களிலும் விசுவாசத்தில் உறுதியாக இருக்க யெகோவா உங்களுக்கு உதவுகிறார். அதற்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்.

நீங்கள் செய்கிற ஊழியத்திற்காக... உங்களுடைய அன்பான உழைப்பிற்காக... கஷ்டங்கள் மத்தியிலும் உண்மையோடு இருப்பதற்காக... யெகோவா நிறைய உதவி செய்திருக்கிறார். “யெகோவா நல்லவர்; அவருக்கு நன்றி சொல்கிறோம்.” (சங். 106:1, NW) உங்கள்மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறோம். உங்களுக்காக எப்போதும் ஜெபம் செய்கிறோம். யெகோவா உங்களை பலப்படுத்துவார், உறுதிப்படுத்துவார்; ஆசீர்வதிப்பார். தொடர்ந்து அவருக்கு சேவை செய்ய உதவுவார்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்