ஜூலை 6-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 6-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 63; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 57, 58 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 7-8 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 8:27-34 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கொர்நேலியு—தலைப்பு: யெகோவா பாரபட்சம் பார்க்க மாட்டார்—அப். 10:1-45 (5 நிமி.)
எண் 3: கவலைகளை நாம் எப்படி சமாளிக்கலாம்?—அறிமுகம் பக். 24 பாரா. 1-3 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘பூர்வநாட்களை நினைத்துப் பாருங்கள்.’—உபா. 32:7.
10 நிமி: ஜூலை மாதத்துக்கான பத்திரிகைகளைக் கொடுங்கள். கலந்து பேசுங்கள். முதலில், ஜூலை–செப்டம்பர் காவற்கோபுரத்தை கொடுப்பது போன்ற நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். “இப்படி பேசிப் பாருங்கள்...” என்பதில் உள்ளது போல் நடிக்கச் சொல்லுங்கள். பிறகு, அந்த நடிப்பை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: எப்படிச் செய்தோம்? கலந்து பேசுங்கள். “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... நற்செய்தி சிறுபுத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு ஆரம்பியுங்கள்” கட்டுரையில் இருந்த விஷயங்களின்படி செய்ததால் என்ன பலன்கள் கிடைத்தன என்று கேளுங்கள். நல்ல அனுபவங்களை சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 67; ஜெபம்