தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 29, 2015-ல் ஆரம்பிக்கும் வாரத்தில், இந்தக் கேள்விகளை ஊழியப் பள்ளியில் கலந்து பேசுவார்கள். ஊழியப் பள்ளியில் ஒவ்வொரு கேள்விக்கும் எப்போது பதில் தெரிந்துகொள்வோம் என்ற தேதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேதியைப் பார்த்து அந்தக் கேள்விக்கு அந்தந்த வாரம் பதில் தயாரித்து வரலாம்.
தாவீதிடம் மீகாள் பேசிய விதம் ஏன் தவறு? இதிலிருந்து கல்யாணம் ஆனவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 சா. 6:20-23) [மே 11, w12 1/1 பக். 31 பாரா 10]
ஆலயத்தைக் கட்ட சொல்லி தாவீதிடம் நாத்தான் சொன்னபோது யெகோவா அதை கண்டித்தார். அப்போது நாத்தான் என்ன செய்தார்? (2 சா. 7:2, 3) [மே 11, w12 2/15 பக். 24 பாரா. 6-7]
தாவீது தவறு செய்துவிட்டார் என்று நேரடியாகச் சொல்லாமல், 2 சாமுவேல் 12:1-7-ல் உள்ள கதையை நாத்தான் ஏன் சொன்னார்? நன்றாக பைபிள் படிப்பு எடுக்க இந்த உதாரணம் நமக்கு எப்படி உதவும்? [மே 18, w12 2/15 பக். 24 பாரா. 2-3]
அப்சலோமிடம் இஸ்ரவேலர்கள் எப்படி ஏமாந்து போனார்கள்? அப்சலோமைப் போன்ற ஆட்களிடம் நாம் எப்படி கவனமாக இருக்கலாம்? (2 சா. 15:6) [மே 25, w12 7/15 பக். 13 பாரா 7]
தாவீது கஷ்டப்பட்ட நேரத்தில் யெகோவா அவரை எப்படி கவனித்துக்கொண்டார், இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (2 சா. 17:27-29) [ஜூன் 1, w08 9/15 பக். 6 பாரா. 15-16]
வேறு நாட்டை சேர்ந்த ஈத்தாயிடம் தாவீது நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 சா. 18:2) [ஜூன் 1, w09 5/15 பக். 27 பாரா 7]
பர்சிலாவிடமிருந்து வயதானவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 சா. 19:33-35) [ஜூன் 8, w07 7/15 பக். 15 பாரா. 1-2]
யெகோவா காட்டும் மனத்தாழ்மை நம்மை எப்படி ‘உயர்ந்தவராக’ ஆக்குகிறது? (2 சா. 22:36) [ஜூன் 15, w12 11/15 பக். 17 பாரா 7]
நாத்தான் எப்படி யெகோவாவுக்கு பற்றுறுதி காட்டினார்? நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்? (1 இரா. 1:11-14) [ஜூன் 22, w12 2/15 பக். 25 பாரா. 1, 4-5]
எந்தெந்த விஷயங்களில் நாம் செய்யும் தவறை நியாயப்படுத்தக் கூடாது என்று சாலொமோனின் உதாரணம் காட்டுகிறது? (1 இரா. 3:1) [ஜூன் 29, w11 12/15 பக். 10 பாரா. 12-14]