ஜூன் 22-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 22-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 88; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 55 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 1-2 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 1:15-27 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி சந்தோஷமாக, திருப்தியாக வாழ்கிறார்கள்?—அறிமுகம் பக். 23 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: காலேப்—தலைப்பு: தன்னை முழுமையாக நம்புகிறவர்களுக்கு யெகோவா அவருடைய சக்தியைக் கொடுப்பார்—எண். 13:6, 30; 14:6-9; யோசு. 14:6-11; 15:13-19; நியா. 1:11-15; 3:9-11 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘பூர்வநாட்களை நினைத்துப் பாருங்கள்.’—உபா. 32:7.
15 நிமி: எப்படி செய்தோம்? கலந்து பேசுங்கள். சபையின் செயலர் இதை நடத்துவார். நினைவுநாள் சமயத்தில் எவ்வளவு ஆர்வமாக ஊழியம் செய்திருக்கிறோம் என்பதை பற்றி சொல்லுங்கள். சபையைப் பாராட்டுங்கள். நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுத்ததால் கிடைத்த நல்ல அனுபவங்களைக் கேளுங்கள்.
15 நிமி: யெகோவா உங்கள் கையைப் பிடித்து எப்படியெல்லாம் வழிநடத்தியிருக்கிறார்? (ஏசா. 41:13) நிறைய வருடங்கள் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த ஒன்று இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள். கடவுளுடைய சேவையில் வந்த பிரச்சினைகளைச் சமாளிக்க யெகோவா எப்படி உதவினார் என்று கேளுங்கள்.
பாட்டு 107; ஜெபம்