ஜூன் 15-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூன் 15-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 43; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 53, 54 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 22-24 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 22:21-32 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: காயீன்—தலைப்பு: தவறைச் சுட்டிக்காட்டும்போது அதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம்?—ஆதி 4:1-15; கலா 5:19, 20; எபி 11:4; யாக் 1:14, 15 (5 நிமி.)
எண் 3: சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும், மற்றவர்கள் மேல் அன்பு காட்ட வேண்டும்—அறிமுகம் பக். 22 பாரா. 4-6 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘பூர்வநாட்களை நினைத்துப் பாருங்கள்.’—உபா. 32:7.
12 நிமி: பைபிளில் உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்? பேட்டி மற்றும் பேச்சு. முதலில், இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை பேட்டி எடுங்கள். அவர்களிடம் இந்த கேள்விகளைக் கேளுங்கள்: “பைபிள்ல உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்? அவங்க கடவுளுக்கு பிடிச்ச மாதிரி என்ன செஞ்சாங்க? அவங்கள மாதிரி இருக்கணும்னு நீங்க ஏன் ஆசைப்படுறீங்க?” அடுத்து உங்கள் பேச்சில், பெரிய போதகரிடம் கற்றுக்கொள், என்னுடைய பைபிள் கதை புத்தகம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் போன்ற புத்தகங்களிலிருந்து பிள்ளைகள் எப்படி நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள். இதுபோன்ற புத்தகங்களைப் பயன்படுத்தி “பூர்வநாட்களை” பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது முக்கியம் என்பதை பெற்றோர்களுக்கு சொல்லுங்கள்.—உபா. 32:7.
18 நிமி: “அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.” கலந்தாலோசிப்பு. இரண்டாவது பாராவை கலந்தாலோசிக்கும்போது, அனுபவமுள்ள சகோதர சகோதரிகளோடு ஊழியம் செய்ததால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்று சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 4; ஜெபம்