மே 25-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மே 25-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 97; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 50 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 13-15 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 13:34–14:7 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: வேலை செய்றத பத்தி பைபிள்ல என்ன சொல்லியிருக்கு?—அறிமுகம் பக். 20 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: பெசலெயேல்—தலைப்பு: கடவுளுடைய சக்தி அவருடைய எல்லா வேலையையும் செய்ய நமக்கு உதவும்—யாத். 31:3-6; 35:4–36:7; 2 நா. 1:1-6 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற உதவுங்கள்.—1 தீ. 2:3, 4.
10 நிமி: வெளி ஊழிய தொகுதி கண்காணி ஒருவரை பேட்டி எடுங்கள். உங்களுக்கு என்னென்ன வேலைகள் இருக்கும்? உங்கள் தொகுதியில் இருப்பவர்களை அக்கறையாக கவனித்துக்கொள்வதற்கும் ஊழியத்தில் அவர்களுக்கு உதவுவதற்கும் என்ன செய்கிறீர்கள்? பிரஸ்தாபிகளின் வீட்டு முகவரியோ ஃபோன் நம்பரோ மாறும்போது உங்களிடம் சொல்வது ஏன் முக்கியம்? ஊழியத்திற்காக எல்லாரும் ஒரே இடத்தில் கூடாமல், தொகுதி தொகுதியாக கூடி ஊழியம் செய்ய மூப்பர்கள் ஏன் ஏற்பாடு செய்கிறார்கள்?
20 நிமி: “பார்வை இல்லாதவர்களுக்கு எப்படி உதவலாம்?” கேள்வி-பதில். ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 96; ஜெபம்