மே 18-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மே 18-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 15; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 49 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 9-12 (8 நிமி.)
எண் 1: 2 சாமுவேல் 10:13–11:4 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: பெனாயா—தலைப்பு: பயப்படாதீங்க, யெகோவாவுக்கு உண்மையா இருங்க—2 சா. 8:18; 15:18; 20:23; 23:20-23; 1 இரா. 1:8, 10, 26, 32-40; 2:24, 25, 38-46; 4:4; 1 நா. 18:17; 11:22-25; 27:5, 6 (5 நிமி.)
எண் 3: செத்துப்போனவங்கள திரும்பவும் பார்க்க முடியுமா?—அறிமுகம் பக். 19 பாரா. 1-3 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற உதவுங்கள்.—1 தீ. 2:3, 4.
10 நிமி: சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெற கிரேக்கர்களுக்கு பவுல் எப்படி உதவினார்? கலந்து பேசுங்கள். அப்போஸ்தலர் 17:22-31-ஐ படியுங்கள். இந்த சம்பவம் ஊழியத்திற்கு எப்படி உதவும் என்பதை பற்றி கலந்து பேசுங்கள்.
20 நிமி: “கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு உதவுங்கள்.” கிளை அலுவலகம் தந்த குறிப்புத் தாளை வைத்து மூப்பர் கொடுக்கும் பேச்சு. கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு எந்தெந்த வழிகளில் நாம் நன்கொடை தந்து உதவலாம் என்பதை சொல்லுங்கள். டிசம்பர் 15, 2014 காவற்கோபுரத்தில் பக்கம் 4, 5-ல் இருக்கும் சில முக்கிய விஷயங்களையும் சொல்லுங்கள்.
பாட்டு 127; ஜெபம்