அக்டோபர் 27-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
அக்டோபர் 27-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 91; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 13, 14 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 11-13 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்தின் வசனம்: “கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; அவசர உணர்வுடன் பிரசங்கி.”—2 தீ. 4:2.
15 நிமி: “அவசர உணர்வோடு ஊழியம் செய்யுங்கள்!” கலந்து பேசுங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை, அல்லது ஏதாவது ஒரு துண்டுப்பிரதியை கொடுப்பதுபோல் ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: அவசர உணர்வோடு பிரசங்கிக்க நன்றாக தயாரியுங்கள். கலந்து பேசுங்கள். ஆகஸ்ட் 15, 2014 காவற்கோபுரம் பக்கம் 14-15 பாரா 14-20-ஐ பயன்படுத்துங்கள். இந்த கேள்விகளைக் கேளுங்கள்: நாம் ஊழியம் செய்யும் இடத்தில் மக்கள் எதை நினைத்து அதிகமாக கவலைப்படுகிறார்கள்? அதைப் பற்றி நாம் எப்படி ஊழியத்தில் பேசலாம்? அதற்கு பிறகு ஒரு நடிப்பு இருக்கும். அதில் இரண்டு பயனியர்கள் அல்லது ஒரு தம்பதி பேசிக்கொள்வார்கள். ஊழியத்தில் பார்க்கிறவர்களுக்கு ஏற்ற மாதிரி பேச காவற்கோபுரத்தில் (ஆகஸ்ட் 15, 2014) இருக்கும் விஷயம் எப்படி உதவும் என்று யோசிக்கிறார்கள். எந்த புத்தகத்தை... சிற்றேட்டை... பத்திரிகையை கொடுக்கலாம் என்று யோசிக்கிறார்கள்.
பாட்டு 95; ஜெபம்