தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 27, 2014-ல் ஆரம்பிக்கும் வாரத்தில், இந்த கேள்விகளை எல்லாம் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கேட்பார்கள்.
மோசேயையும் ஆரோனையும் பற்றி இஸ்ரவேலர்கள் ஏன் குறை சொன்னார்கள், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எண். 21:5) [செப். 1, w99 8/15 பக். 26-27]
யெகோவா ஏன் பிலேயாம் மீது கோவப்பட்டார்? (எண். 22:20-22) [செப். 8, w04 8/1 பக். 27 பாரா 2]
எண்ணாகமம் 25:11-லிருந்து பினெகாசை பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம், அவரிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [செப். 8, w04 8/1 பக். 27 பாரா 4]
மனத்தாழ்மையாக நடந்துகொள்ளும் விஷயத்தில் மோசே நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்? (எண். 27:5, 15-18) [செப். 15, w13 4/1 பக். 5]
பிரச்சினைகள் வந்தாலும் கடவுள் சொல்வதை நம்மால் செய்ய முடியும் என்பதற்கு யோசுவாவும் காலேபும் நமக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்கள்? (எண். 32:12) [செப். 22, w93 11/15 பக். 14 பாரா. 13]
செலொப்பியாத்தின் மகள்கள் திருமணமாகாத சகோதர சகோதரிகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்கிறார்கள்? (எண். 36:10-12) [செப். 29, w08 2/15 பக். 4-5 பாரா 10]
இஸ்ரவேலர்களுக்கு குறை சொல்லும் மனப்பான்மை இருந்ததால் என்ன ஆனது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (உபா. 1:26-28, 34, 35) [அக். 6, w13 8/15 பக். 11 பாரா 7]
கானான் தேசத்தில் இஸ்ரவேலர்கள் செழிப்பாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? (உபா. 4:9) [அக். 13, w06 6/1 பக். 29 பாரா 15]
இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது அவர்களுடைய உடை பழையதாகவும் இல்லை, அவர்கள் கால் வீங்கிப்போகவும் இல்லை என்று பைபிள் சொல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? (உபா. 8:3, 4) [அக். 20, w04 9/15 பக். 26 பாரா 2]
யெகோவாவை ‘பற்றிக்கொள்வது’ என்றால் என்ன? (உபா. 13:4, 6-9) [அக். 27, w02 10/15 பக். 16 பாரா 14]