செப்டம்பர் 29-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 120; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 8, 9 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 33-36 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 33:24–49 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சாத்தானுக்கு இருக்கும் வல்லமையைக் குறைவாக எடைபோடாதீர்கள்—நியாயங்காட்டி பக். 364 பாரா 2-பக். 365 பாரா 2 (5 நிமி.)
எண் 3: ஆபிரகாம்—கடவுளுடைய நண்பர்—பைபிள் கதைகள் கதை 13 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: மாதத்தின் முதல் சனிக்கிழமையில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். கலந்தாலோசிப்பு. பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி அக்டோபர் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகளை எப்படி ஆரம்பிப்பதென நடித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க சபையார் எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. அப்போஸ்தலர் 4:13-ஐயும் 2 கொரிந்தியர் 4:1, 7-ஐயும் வாசியுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றி கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: சபையின் மூப்பர் குழு ஒருங்கிணைப்பாளரைப் பேட்டி எடுங்கள். சபையில் உங்களுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன? ஊழியக் கூட்ட பகுதிகளை நியமிக்கும்போது நீங்கள் எந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து நியமிக்கிறீர்கள்? மூப்பர் குழுவின் முக்கியமான நபர் என்றோ சபையை நடத்தும் பொறுப்பு தனக்குத்தான் இருக்கிறது என்றோ ஒருங்கிணைப்பாளர் ஏன் நினைக்கக் கூடாது?
பாட்டு 4; ஜெபம்