ஆகஸ்ட் 25-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 26-28 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 14-16 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
ஊழியக் கூட்டம்:
5 நிமி: அனுபவங்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தைரியமாகப் பேசியபோது சபையாருக்கு கிடைத்த அனுபவங்களில் ஓரிரு அனுபவங்களை நடித்து காட்ட ஏற்பாடு செய்யுங்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அறிவிப்பதில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சிறப்பித்து காட்ட எபிரெயர் 6:11, 12-ஐ சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: ராஜ்யத்தைப் பற்றி விளக்குதல்—பகுதி 1. ஊழியப் பள்ளி புத்தகம் பக்கம் 280 பாராக்கள் 1-4-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
15 நிமி: ராஜ்யத்தைப் பற்றி விளக்குதல்—பகுதி 2. ஊழியப் பள்ளி புத்தகம் பக்கம் 280 பாரா 5 முதல் பக்கம் 281 பாரா 1-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. கடவுளுடைய அரசாங்கம் ஒரு நிஜமான அரசாங்கம் என்பதை ஒரு பிரஸ்தாபி வீட்டுக்காரரிடம் நியாயங்காட்டி பேசுவது போல ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 101; ஜெபம்