ஆகஸ்ட் 4-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஆகஸ்ட் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 84; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 17-19 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 4-6 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 4:17-33 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சிலர் ஒருபோதும் இரட்சிக்கப்படுவதில்லை என பைபிள் திட்டவட்டமாய் சொல்கிறதா?—நியாயங்காட்டி பக். 358 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: பூமியில் இராட்சதர்கள்—பைபிள் கதைகள் கதை 8 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஆகஸ்ட் மாதத்தில் பத்திரிகைகளைக் கொடுங்கள். கலந்தாலோசிப்பு. வாரயிறுதி நாட்களில் விசேஷ விநியோகிப்பில் ஈடுபடும்போது பத்திரிகைகளை எப்படிக் கொடுப்பது என இந்தப் பக்கத்திலுள்ள அணுகுமுறைகளைப் பயன்படுத்தி ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதன்பின் இந்தக் கேள்விகளைச் சபையாரிடம் கேளுங்கள்: வாரயிறுதி நாட்களில், பொருத்தமான சமயத்தில் ஏன் பத்திரிகைகளைக் கொடுக்க வேண்டும்? எந்தெந்த சந்தர்ப்பங்களில் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்?
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: எப்படிச் செய்தோம்? கலந்தாலோசிப்பு. “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்” என்ற கட்டுரை சபையாருக்கு எப்படிப் பயனுள்ளதாக இருந்ததெனக் கேளுங்கள். நல்ல அனுபவங்கள் ஏதாவது இருந்தால் சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 75; ஜெபம்