மே 19-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
மே 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 22 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 30-33 (10 நிமி.)
எண் 1: யாத்திராகமம் 32:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மோசேயின் நியாயப்பிரமாண சட்டம் முடிவுக்கு வந்தபோது பத்துக் கட்டளைகளும் முடிவுக்கு வந்தது—நியாயங்காட்டி பக். 348 பாரா. 2-3 (5 நிமி.)
எண் 3: ஆபிரகாம்—யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வையுங்கள்—ஆதி 15:1-21; 16:3, 15, 16; 17:5, 9-27; 18:1–23:20; ரோ 4:9-11 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: நாம் ஏன் நற்செய்தியை அறிவிக்கும் ஊழியர்களாக இருக்கிறோம்? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கம் 77 முதல் பக்கம் 78 பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் உற்சாகமூட்டும் பேச்சு. ஊழியம் செய்வதில் சபையார் ஏன் சந்தோஷம் அடைகிறார்கள் என்று கேளுங்கள்.
10 நிமி: விடுமுறை நாட்களில் துணை பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? கலந்தாலோசிப்பு. துணை பயனியராகச் சேவை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 113 பாரா 1-ஐ சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். பள்ளி விடுமுறையின்போது அல்லது வேலையிலிருந்து விடுப்பு எடுத்தபோது துணை பயனியர் ஊழியம் செய்ததில் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றி சபையாரிடம் கேளுங்கள். அடுத்துவரும் விடுமுறை நாட்களில் துணை பயனியர் செய்ய எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: “இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்?” கேள்வி-பதில். இந்தச் சிற்றேட்டின் சிறப்பம்சங்களையும் அது வடிவமைக்கப்பட்ட விதத்தையும் மறுபார்வை செய்யுங்கள்.—மார்ச் 2013 நம் ராஜ்ய ஊழியம் பக். 3, 4-ஐ பாருங்கள்.
பாட்டு 107; ஜெபம்