ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை
ஏன் முக்கியம்? நம் முன்னுரை ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இல்லாவிட்டால், நற்செய்தியைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே வீட்டுக்காரர் அதைக் கேட்காமல் போய்விடலாம். எனவே, ஊழியத்தில் முன்னுரை மிக மிக முக்கியமான ஒன்று என்பதை அநேக பிரஸ்தாபிகள் அறிந்திருக்கிறார்கள். நம் ராஜ்ய ஊழியத்திலும் நியாயங்காட்டி புத்தகத்திலும் மாதிரி அணுகுமுறைகள் இருந்தாலும், வீட்டுக்காரருக்கு ஏற்ப பேசுவதற்கு முழு முன்னுரையும் அதில் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை முழு முன்னுரையும் கொடுக்கப்பட்டிருந்தால்கூட பிரஸ்தாபிகள் அதை வீட்டுக்காரருக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் அல்லது அவர்களாகவே ஒரு முன்னுரையைத் தயாரிக்கலாம். ஆகவே, முன்னுரையைக் கவனமாக யோசித்து தயாரித்தால் வீட்டுக்காரரைப் பார்த்தவுடன் ஏதோவொன்றைப் பேசாமல் அவருடைய ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களைப் பேசுவோம்.—நீதி. 15:28.
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
உங்களுடைய குடும்ப வழிபாட்டில் நல்ல முன்னுரையைத் தயாரிப்பதற்கும் அதைப் பேசி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
ஊழியம் செய்யும்போது, நீங்கள் தயாரித்திருக்கிற முன்னுரையை மற்ற பிரஸ்தாபிகளிடம் சொல்லுங்கள். (நீதி. 27:17) உங்கள் முன்னுரை ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லையென்றால், அதை மாற்றிக்கொள்ளுங்கள்.