மே 12-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
மே 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 111; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 21 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 27-29 (10 நிமி.)
எண் 1: யாத்திராகமம் 29:19-30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மோசேயின் நியாயப்பிரமாணத்தை ‘சடங்குமுறையாகவும்’ ‘ஒழுக்கமுறையாகவும்’ இயேசு பிரிக்கவில்லை?—நியாயங்காட்டி பக். 347 பாரா 3–பக். 348 பாரா 1 (5 நிமி.)
எண் 3: ஆபிரகாம்—கீழ்ப்படிதல், சுயநலமற்ற குணம், தைரியம் ஆகியவை யெகோவாவைப் பிரியப்படுத்தும்—ஆதி 11:32; 12:6–13:18; 14:1-20; யாத் 12:40-43; கலா 3:17 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். (ஏசா. 2:2) இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். பல வருடங்களாகச் சத்தியத்தில் இருக்கும் ஒருவர், மற்றொருவர் புதிய பிரஸ்தாபி. சத்தியத்திடம் அவர்களை ஈர்த்தது எது? என்ன சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது? முதல் முறையாக சபைக் கூட்டத்திற்கு வந்தபோது, எது அவர்களுடைய மனதைக் கவர்ந்தது? முதல் முறையாக ஊழியத்தில் கலந்துகொண்டபோது நடந்த என்ன சம்பவம் அவர்களுக்கு நினைவில் இருக்கிறது? இவர்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற சபையிலுள்ளவர்கள் எப்படி உதவினார்கள்?
15 நிமி: “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை.” கலந்தாலோசிப்பு. சுருக்கமான இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பில், முன்னுரையை நன்கு தயார் செய்யாதது போலவும், இரண்டாவது நடிப்பில் நன்கு தயார் செய்ததுபோலவும் இருக்க வேண்டும். நேரம் இருந்தால், ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 215-219-ல் உள்ள பொருத்தமான குறிப்புகளைச் சொல்லுங்கள்.
பாட்டு 117; ஜெபம்