ஜனவரி 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 11; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் பகுதி 5 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 11-16 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 14:17–15:11 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘சரியான ஒரே ஒரு மதமே இருக்கிறதென நீங்கள் எண்ணும்படி செய்வதெது?’—நியாயங்காட்டி பக். 332 பாரா 3 (5 நிமி.)
எண் 3: எல்லாவற்றையும் கடவுள் உண்டாக்கத் தொடங்குகிறார்—பைபிள் கதைகள் கதை 1 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 7:6-11-ஐ வாசிக்கச் சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்திற்கு எப்படி உதவும் என்று கேளுங்கள்.
10 நிமி: உங்களிடையே கடினமாக உழைக்கிறவர்களுக்கு மரியாதை காட்டுங்கள். (1 தெ. 5:12, 13) பின்வரும் கேள்விகளைக் கலந்தாலோசியுங்கள்: (1) சபையில் மூப்பர்கள் எப்படிக் கடினமாக உழைக்கிறார்கள்? (2) அவர்களை மிக உயர்வாகக் கருதுவதை எப்படிக் காட்டலாம்? (3) அவர்களுக்கு ஏன் உற்சாகம் தேவை? (4) மூப்பர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் எப்படி உற்சாகப்படுத்தலாம்? (5) மூப்பர்களுக்குக் கீழ்ப்படிவதால் சபைக்கும் மூப்பர்களுக்கும் என்ன நன்மை?
10 நிமி: “உங்களுடன் ஊழியம் செய்பவர்களுக்கு உதவுங்கள்.” கேள்வி-பதில். தங்களோடு சேர்ந்து ஊழியம் செய்தவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்களைச் சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 93; ஜெபம்