ஜனவரி 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 6, 2014-ல் துவங்கும் வாரம்
பாட்டு 128; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
கண்ணோட்டம் அதி. 3 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 1-5 (10 நிமி.)
எண் 1: ஆதியாகமம் 4:1-16 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சரியான மதத்தின் உறுப்பினர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சுறுசுறுப்பாய்ச் சாட்சி கொடுப்பவர்களா?—நியாயங்காட்டி பக். 330 பாரா 1 (5 நிமி.)
எண் 3: ஆரோன்—கிறிஸ்தவர்களுக்கு எவ்விதங்களில் நல்ல முன்மாதிரி? (யாத். 4:14-16, 27-30; 7:9-12, 19, 20; 17:9, 12; 32:26-30) (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஜனவரி மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. ஜனவரி-மார்ச் காவற்கோபுரம் மக்களை எப்படிக் கவரும் என்பதை 30-60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு அட்டைப்பட கட்டுரைகளைக் காண்பித்து, என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று கேளுங்கள். பத்திரிகைகளை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. 1 கொரிந்தியர் 9:19-23-ஐ வாசிக்கும்படி சொல்லுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் நமக்கு எப்படி உதவும் எனச் சிந்தியுங்கள்.
பாட்டு 7; ஜெபம்