டிசம்பர் 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 71; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 28 பாரா. 8-15 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 யோவான் 1–யூதா (10 நிமி.)
எண் 1: 1 யோவான் 5:1-21 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு கிறிஸ்துவை எவ்வாறு நினைவுகூர வேண்டும்?—லூ. 1:32, 33; யோவா. 17:3 (5 நிமி.)
எண் 3: சரியான மதம் இயேசு கிறிஸ்துவில் உண்மையான விசுவாசத்தை மெய்ப்பித்துக்காட்டும்—நியாயங்காட்டி பக். 329 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: 2014-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி. பள்ளிக் கண்காணி கொடுக்கும் பேச்சு. 2014 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையிலுள்ள அறிவுரைகளிலிருந்து சபைக்குத் தேவைப்படுகிற குறிப்புகளைச் சொல்லுங்கள். புதிதாக ஒரு பைபிள் புத்தகம் ஆரம்பிக்கப்போகிற வாரத்தில் சிறப்புக் குறிப்புகளைக் கையாளும் சகோதரர் இனிமேல் ‘வேதாகமம் முழுவதும்’ புத்தகத்திலிருந்து குறிப்புகளைச் சொல்ல மாட்டார் என்பதை விளக்குங்கள். பேச்சு எண் 2 அல்லது 3-ல் நியாயங்காட்டி புத்தகம் கொடுத்திருந்தால் மார்ஜினிலிருந்து சற்று உள்ளே தள்ளி ஆரம்பிக்கிற பாராக்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். நியமிப்புகளை கவனமாகக் கையாளவும், பைபிள் சிறப்புக் குறிப்பு பகுதியில் பதில்களைச் சொல்லவும், ஊழியப் பள்ளி புத்தகத்திலிருந்து தரப்படும் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கவும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “பலன்தரும் முன்னுரைகள்—தயாரிப்பது எப்படி?” கேள்வி-பதில். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளிப்பதுபோல் இரண்டு முன்னுரைகளை நடித்துக் காட்டுங்கள். முதலில் பலன்தராத முன்னுரையையும், அடுத்து பலன்தரும் முன்னுரையையும் நடித்துக் காட்ட வேண்டும்.
பாட்டு 60; ஜெபம்